Daily Current Affairs – April 02
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 02
விளையாட்டு செய்தி
இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் செஸ் போட்டி
இளையோர் ஆசிய சாம்பியன்ஷிப் செஸ்ஸில் ம்ருதுல் தெஹன்கர் சாம்பியன் பட்டம் பெற்று தங்கம் வென்றார் .
இடம் : தாய்லாந்த்
சாம்பியன் : ம்ருதுல் தெஹன்கர்
உலக அளவிலான செய்தி
இந்தியாவுடன் தென்கொரிய கூட்டுப்பயிற்சி
கூட்டுப்பயிற்சி : இந்தியா – தென் கொரியா கடலோரக் காவல்படையின் 6-வது கூட்டுப் பயிற்சி
இடம் : சென்னை ( கடல் எல்லைப் பகுதி )
நாள் : ஏப்ரல் 5-ம் தேதி
கப்பல் பெயர் : ‘பதாரோ’
காரணம் : இந்தியா – தென் கொரியா நாடுகள் இடையே கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த, பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகள் மேம்படுவதற்கு .
கோஸ்டாரிகா அதிபராக கார்லோஸ் ஆல்வாரேடோ தேர்வு
ஆளுங்கட்சி சார்பில் கார்லோஸ்ஆல்வாரேடோ (வயது 39) போட்டியிட்டார். அவரை எதிர்த்து பேப்ரிசியோ ஆல்வாரேடோ (வயது 43) போட்டியிட்டார். கோஸ்டாரிகா அதிபராக கார்லோஸ் ஆல்வாரேடோ வெற்றி பெற்றார்
குடியரசுத் தலைவர் வழங்கிய பத்ம விருதுகள்
விருது : குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்
சிவில் விருது வழங்கும் விழாவில் 5 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும், 38 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் வழங்கினார்.
இடம் : குடியரசுத் தலைவர் மாளிகை
நாள் : 02-04-2018
தோனிக்கு பத்மபூஷண் விருது
2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற அதே நாளில் மகேந்திர சிங் தோனிக்கு பத்மபூஷண் விருது : பத்மபூஷண் விருது
நாள் : ஏப்ரல் 2 , 2018
அறிவியல் செய்திகள்
சீனாவின் ‘டியான்காங்-1’ விண்வெளி நிலையம் பசிபிக்கடலில் விழுந்தது
பூமியின் நீள்சுற்று வட்டப்பாதைக்குள் மீண்டும் இந்த விண்வெளிநிலையம் நுழைய முயன்றபோது பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. வானில் இருந்து கீழேவிழும் போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன.
விண்வெளி : சொர்க்கத்தின்அரண்மனை’ என அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம்
ஆண்டு : 2011
இடம் : பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது.
நேரம் : இந்திய நேரப்படி காலை ஏறத்தாழ 4.50 மணி
சூப்பர்சோனிக் பாராசூட்
செவ்வாய்கிரகத்தில் இறங்குவதற்காக சூப்பர்சோனிக் பாராசூட்டை அமெரிக்க விண்வெளி ஆய்வுமையம் அனுப்பி சோதனை செய்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் வெள்ளிகிரக ஆசிட் மேகங்களிடையே வாழும்
ஏலியன்கள் வெள்ளிகிரகத்தின் அமில மேகங்களுக்கு நடுவே வாழும்
என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம் – புதிய கின்னஸ் சாதனை
இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. ஒரே இடத்தில் நடைப்பெற்று புதிய உலகசாதனையாக பதிவு செய்யப்பட்டது.
ரோபோட் வகை : ஆல்பா 1 எஸ்ரக ரோபோட்டுகள்
எண்ணிக்கை : 1,372
Download Daily Current Affairs (2018-April-2)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.