அவ்வையார் விருது 2022

அவ்வையார் விருது 2022

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில் “அவ்வையார் விருது” தமிழ்நாடு அரசால்  வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருது மகளிர் அதிகாரம், மதநல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றியவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி 8 கிராம் தங்கப்பதக்கமும், ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், சால்வை மற்றும் பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்படுகிறது.

அவ்வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுதிருமதி. கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.  அவர் இந்திய குழந்தைகள் நலச்சங்கம், இளைஞர் நீதிக் குழுமம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குழு மற்றும் மருத்துவ நெறிமுறை ஆலோசனைக்குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராக பணியாற்றி  செய்த சேவைகளுக்கும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து  ஆற்றிய பணிகளுக்கும், பயிற்சியாளராக பல சமூக பணியாளர்களை உருவாக்கிய பெருமையையும் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: