காவலர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் காவலர் தேர்வுக்கான நடைமுறைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2-ம் நிலை காவலர், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8888 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகரால் வழக்கு தொடரப்பட்டது.
காவலர் தேர்வு நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு 8,888 பணியிடங்களுக்கு அறிவிப்பாணையை வெளியிட்டது.எனவே 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களது வழக்கில், 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.விழுப்புரம் மற்றும் வேலூரில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,ஒவ்வொரு தேர்விலும் முறைகேடு என்றால் தேர்வு அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையே தகர்ந்துவிட்டது. தமிழ் மண்ணில் பிறந்தது பெருமை, அதேநேரம், இதுபோன்ற நேர்மையின்மையால் வேதனை அளிக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்விலும் ஒரு மையத்தில் இதே முறையில் முறைகேடு என்றால், காவல்துறை தேர்விலேயும் இப்படியா?இப்படிப்பட்டவர்கள் காவல்துறை பணியில் சேர்ந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் 8,888 சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்தார்.மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு ,டிஜிபி ,தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.
TNUSRB PC தேர்வில் முறைகேடு – உயர் நீதிமன்றத்தில் வழக்கு
OLD NEWS FOR REFER :
TNUSRB PC Exam Issue
சிபிஐ விசாரணை கோரி 15 விண்ணப்பதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
குரூப் 4 தேர்வு முறைகேட்டைவிட பெரிய முறைகேடு என மனுவில் தகவல்
தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களுக்கு முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அந்த மனுவில், ‘தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. ஆதலால் தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. ஆதலால் மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’,எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Forest Guard ஆன்லைன் வகுப்புகளில் இணைய: Forest Guard Video Course
Forest Guard Test Batch: Click Here
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.
TNPSC Group 4, TNPSC Group 2 2A, Forest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்.