How to Score Good Marks in Aptitude?

How to Score Good Marks in Aptitude

கணித பகுதியில் மதிப்பெண்களை எவ்வாறு  அதிகப்படுத்துவது?

பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமான பகுதியாகவும் சிலருக்கு அது நிறைய மதிப்பெண்களை பெற்று தரும் சுலபமான பகுதியாகவும் இருக்கும்.

கணிதம் என்பது உங்களுடைய யோசிக்கும் திறனையும் முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கக்கூடிய ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் நிச்சயம் இடம் பெறும் ஒரு பகுதி.

இந்த பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு 75 சதவீதம் மாணவர்கள் 75 சதவிகித கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்க முடியும் மீதம் இருக்கக்கூடிய 25 சதவீத மாணவர்கள் மட்டுமே மீதம் இருக்கக்கூடிய 25% கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கின்றனர்.

ஒரு கேள்விக்கு விடை அளிக்க பல்வேறு வழிகள் உள்ளது இதை இவ்வாறுதான் விடையளிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அல்லது சோதனை செய்யப்பட்ட முறைகளையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். அதைத் தாண்டி அந்த கேள்விக்கு எவ்வாறு விடையளிக்க முடியும் என்று யோசிக்கும் திறன் உள்ளவர்களே அந்த 25 % கேள்விகளுக்கும் யோசித்து விடை அளிக்க அவர்களால் முடிகிறது.

அதே போல இந்த பகுதியை நான் படிக்காமல் கடைசி நேரத்தில் படித்தால் போதும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் உங்களது அதிர்ஷ்ட மட்டுமே உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

ஒருவேளை உங்களால் தேர்வுக்கு முன்னதாகவே இந்த பகுதிக்கு தயாராக முடியாமல் இருந்தால் உடனடியாக அதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கு எந்த பகுதி கணிதத்தில் எளிமையானதாக இருக்கிறதோ அந்தப் பகுதியிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம்.

மேலும் முந்தைய ஆண்டு தேர்வுகளை ஆராய்வதன் மூலம் நிறைய வினாக்களை நீங்கள் பயிற்சி செய்ய முடியும். அது நிச்சயம் தேர்வுக்கு உங்களுக்கு உதவும்.

உங்கள் நண்பர்கள் கணித பகுதியில் சிறந்து விளங்கினால் அவர்களிடம் சேர்ந்து படிப்பது இன்னும் உங்களுக்கு எளிமையாக இந்த பகுதியைப் படித்து முடிக்க உதவும்.

சரி கணித பகுதியை படிப்பதற்கு எவ்வாறு ஆரம்பிப்பது?

ஒரே நாளில் அனைத்து பகுதிகளிலும் அல்லது புதிதாக ஆரம்பித்த அனைத்து பகுதிகளையும் படித்து முடிக்க வேண்டும் என்று நினைப்பது முதல் தவறு. ஏதாவது ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் முற்றிலுமாக பயிற்சி பெறும் வரை அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டாம் be an expert.

படிக்க ஆரம்பிக்கும் முன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அல்லது நம்பகத் தன்மை உடைய ஒரு Source பாடப் புத்தகங்கள் நமக்கு தேவை. அதை முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அது பள்ளிப் பாடப் புத்தகமாக இருக்கலாம் அல்லது தனியாக வாங்கக்கூடிய புத்தகங்களாகவும் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் நம்பக்கூடிய உங்களுக்குப் புரியும்படி உள்ள புத்தகமாக இருப்பது நல்லது.

எந்த பகுதியும் படிக்காமல்   விட்டுச் சென்று அடுத்த பகுதிக்குச் செல்வது மிகவும் தவறான விஷயம். உங்களுக்கு அந்த பகுதி வரவில்லை என்றால் அதை எவ்வாறு நாம் புரிந்துகொண்டு அந்த வகையில் கேட்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்க முடியும்   என்று நீங்கள் பயிற்சி செய்வதே உங்களுக்கான வெற்றி.

எல்லா கேள்விகளுக்கும் short cut குறுக்கு வழிகளை எதிர்பார்ப்பது நிச்சயம் தேர்வு நேரத்தில் உங்களுக்கு உதவாது. நான் அனைத்தையும் மனக்கணக்கு களிலேயே செய்து முடிப்பேன் பேப்பர் மற்றும் பேனாவை எடுக்காமலே   முயற்சி செய்வேன் என்று நினைப்பது அனைத்து நேரத்திலும் உதவாது.

சில நேரங்களில் அது தவறான விடைகளுக்கு வழிவகுத்துவிடும்.

இவ்வளவு முயற்சிகளையும் செய்யும்போது கடினமாகத்தான் இருக்கும் அதனால் உடனடியாக அந்த முயற்சியை விட்டு விட வேண்டாம். கடைசி வரை போராடினால் உங்களுக்கு நிச்சயம் பலன் தரும்.  ஒரு பகுதியை முடித்தவுடன் அந்த பகுதியில் இருந்து மாதிரி வினாக்களை எடுத்து பயிற்சி செய்யுங்கள் உங்களால் சரியாக விடை அளிக்க முடிகிறது என்பதை சோதியுங்கள்.

நன்றாக பயிற்சி செய்த பின்பு உங்களால் எவ்வளவு வேகமாக அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் என்பதை நீங்களே சோதித்துப் பாருங்கள்

  முக்கியமான பாடக் குறிப்புகளை ஒரு நோட்டுப் புத்தகமும் வைத்து எழுதி  கொள்ளுங்கள். மீண்டும் திருப்பதிக்கு இது நிச்சயம் உங்களுக்கு உதவும்

உங்களால் எவ்வளவு மாதிரி வினாத்தாள்கள் பயிற்சி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். இது தேர்வு நேரத்தில் நிச்சயம் உங்களுக்கு நேரம் மேலாண்மை சரியான பதில்களை தேர்ந்தெடுத்தல் சரியான கேள்விகளை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிற்கு உதவும்.

 தேர்வு நேரத்தில் செய்யக்கூடிய முக்கியமான தவறுகள் அதை எவ்வாறு தவிர்ப்பது

கேள்விகளை முழுமையாக படிக்காமல் விடுவது ? நீங்கள் படித்த கேள்விக்கு  விடை உள்ளது போன்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.

நீங்கள் shortcut மற்றும் குறுக்கு வழி பயன்படுத்தி நிறைய கேள்விகளை பயிற்சி பயிற்சி செய்திருந்தால் தாரளமாக அந்த முறையில் விடை அளிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் நார்மல் சாதாரண முறையை பயன்படுத்தி விடை அளிக்க முயற்சி செய்யுங்கள் அனைத்து நேரத்திலும் shortcut என்பது உதவாது.

மேலும் குத்துமதிப்பாக ஒரு விடையை தேர்வு செய்வது நிச்சயம் உங்களது மதிப்பெண்களை இழக்க காரணமாகிவிடும். எதிர்மறை மதிப்பெண்கள் இருந்தால் அதிக மதிப்பெண்கள் இழக்க நேரிடும் என்பதை மனதில் வைக்கவும்.

இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் கணித பகுதியில் நிச்சயம் நிறைய கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்

தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருங்கள் வெற்றி பெறலாம்

TNPSC APTITUDE TOPIC + 30 FULL MOCK TEST -JOIN NOW

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us