TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 16 JUNE 2023

CURRENT AFFAIRS –16 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

 

CURRENT AFFAIRS JUNE – 16

1.நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்காக பயன்படும் வகையில் தொடங்கப்பட்ட 15 வது சர்வதேச இயந்திர கண்காட்சி எங்கு நடைபெற்று வருகிறது?

A.சென்னை

B.மும்பை

C.கொல்கத்தா

D.புது டெல்லி

குறிப்பு:

  • சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 15வது சர்வதேச இயந்திரக் கருவிகள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கபட்டது.
  • ஜூன் 19 வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் ஏழு அரங்குகளில் 435 சர்வதேச உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளன.

2.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்த மாநில மாநாடு எந்த தலைப்பில் நடைபெற உள்ளது?

A.சம்வர்தான்

B.சாதகர் தான்

C.தொழில் முன்னேற்றம்

D.தொழில் முனைவோர் மேலாண்மை

குறிப்பு:

  • சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்த மாநில மாநாடு ஜூன் 24ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
  • மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் மாநாடு நடைபெற உள்ளது.
  • இந்த மாநாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கான அரசின் திட்டங்கள், மானியங்கள் மற்றும் வங்கி செயல்பாடுகளில் ஏற்படும் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விளக்கப்படும்.
  • மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பட்டைய கணக்கறிஞர்கள் கழகத்தின் (ஐ சி ஏ ஐ) தென்னிந்திய பிராந்திய கவுன்சில் (எஸ் ஐ ஆர் சி) சார்பில் சம்பவர்தான் எனும் தலைப்பில் ஆன மாநாடு சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற உள்ளது.

3.இந்தியாவிலேயே முதல் முறையாகஅதிநவீன முறையான 360 டிகிரி  கோணத்தில் துல்லியமான சிகிச்சைகளை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?

A.சென்னை

B.மகாராஷ்டிரா

C.உத்திரபிரதேசம்

D.ஒரிசா

குறிப்பு:

  • இடுப்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைகளில் அதிநவீன முறையாக 360 டிகிரி கோணத்தில் துல்லியமான சிகிச்சைகளை வழங்கும் புதிய தொழில்நுட்பங்களை சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவிலேயே வேறு எங்கேயும் இத்தகைய உயர் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை முறை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • மூட்டு மாற்று சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சைகளில் பல்வேறு நவீன மருத்துவ முறைகளும் உபகரணங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
  • அதன் தொடர்ச்சியாக உயர்நுட்ப சிகாகோ பிரசர்வேஷன் சர்வீஸ், நவிசிஸ் சிஸ்டம், கஷ்டம் டாக்கிங், ஆக்மெண்ட் டெக்னாலஜி மற்றும் பாலிமோஷன் அட்வான்ஸ் ஹிப்ரிசெப் ரிசர்வ் பேசிங் சிஸ்டம் என்ற நான்கு வகையான நவீன தொழில்நுட்பங்கள் சிம்ஸ் மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இதன் வாயிலாக அறுவை சிகிச்சை அளிக்கும் போது துல்லியமான சில உபகரணங்களை உடலுக்குள் பொருத்த முடியும் அதேபோன்று 360 டிகிரி கோணத்தில் இடுப்பு மூட்டு பகுதியில் சிகிச்சை வழங்க முடியும்.
  • மருத்துவ உலகிலும் குறிப்பாக முட நீக்கியல் துறையிலும் இது ஒரு மைல் கல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

4.அமெரிக்காவிடம் எத்தனை அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை இந்தியா வாங்குகிறது?

A. 24

B. 37

C.30

D.50

குறிப்பு:

  • அமெரிக்காவின் 30 அதிநவீன எம் க்யூ -9பி பிரிடேட்டர் ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
  • வாங்கப்படவுள்ள 30 ட்ரோன்களில் கடற்படைக்கு 14 ட்ரோன்களும்   விமானப்படை ராணுவத்துக்கு தலா 8 ட்ரோன்களும் வழங்கப்படும் என்றும் 35 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பறக்கக்கூடிய இந்த ட்ரோன்களில் 450 கிலோ வெளி பொருட்களை அனுப்பலாம் என்றும் கூறப்படுகின்றது.
  • கடலோர கண்காணிப்பு நீர்மூழ்கி கப்பலை தாக்கும் திறன் கொண்டவையாகவும் வான் பாதுகாப்பு திறன் கொண்டவையாகவும் இந்த ட்ரோன்கள் இரு வகைகளில் உள்ளன.
  • இந்திய பெருங்கடலின் கண்காணிப்புக்காக கடந்த 2020 முதல் 2 எம் க்யூ 9 பி ரக ட்ரோன்களை இந்திய கடற்படை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது.
  • சீன ஆதிக்கத்தை கண்காணிக்க இந்த இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  1. எந்த ஆண்டுக்குள் 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

A.2029

B.2035

C.2040

D.2037

குறிப்பு:

  • 24,000 கோடி மதிப்பில்லான ஒப்பந்தத்தின்படி 2029 ஆம் ஆண்டுக்குள் 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என TRSL மற்றும் BHEL என்ற கூட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • படுக்கை வசதி கொண்ட 80 வந்தே வாரத் ரயில்கள் தயாரிக்க டிகடார் ரயில் சிஸ்டம்ஸ் மற்றும் அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் இணைந்த கூட்டு நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்தியா கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய மதிப்பிலான ஒப்பந்தத்தை ரயில்வே வழங்குவது இதுவே முதல் முறை ஆகும். வடிவமைப்பு தயாரிப்பு மட்டுமின்றி ரயில்களின் 35 ஆண்டுகளுக்கான பராமரிப்பும் ஒப்பந்தத்தில் அடங்கும்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் பங்கேற்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
  • எங்களது தயாரிப்பிலான முதல் ரயிலை இரண்டு ஆண்டுக்குள் தயாரித்து ஒப்படைப்போம். ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இருக்கும் மொத்தம் 887 பேர் வரை பயணிக்கலாம். மணிக்கு 160 கிலோமீட்டர் வரை செல்லும் ரயில்கள் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்படும் என்றும் அந்நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2024 – 25 ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க கடந்த 2021-22ல் மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6.ஜி -20 தலைமை பொறுப்பை டிசம்பர் 1 2023 முதல்  நவம்பர் 31 2024 வரை ஏற்கவுள்ள நாடு எது?

A.இந்தியா

B.அமெரிக்கா

C.சீனா

D.பாகிஸ்தான்

குறிப்பு:

  • ஜி 20 தலைமை பொறுப்பை டிசம்பர் 1 2023 முதல் நவம்பர் 30 2024 வரை அமெரிக்க ஏற்க உள்ளது .
  • டிசம்பர் 1 2022 முதல் நவம்பர் 31 2023 வரை தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
  1. ஆசிய கான்டினேன்டல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2023 மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

A.ஜோதி சுரேகா

B.பர்னீத் கவ்வர்

C.அதிதி சுவாமி

D.திவ்யா  தேஷ்முக்

குறிப்பு:

  • ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது அதில் மகளிர் பிரிவில் திவ்யா பேஸ்புக் தங்கம் வென்றுள்ளார் மற்றொரு வீராங்கனையான மேரி ஆன் கோரம்ஸ் என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  1. My life as a comrade என்ற நூலின் ஆசிரியர் யார்?

A.கே கே சைலஜா

B.பி கே ராஜன்

C.டி சுப்பிரமணி

D.மா சுப்பிரமணியன்

குறிப்பு:

  • கேகே சைலஜா மற்றும் இணை ஆசிரியர் மஞ்சு சாரா ராஜன் அவர்களோடு இணைந்து my life as a comrade என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதியுள்ளார்.
  1. உலகக் கோப்பை வில்வத்தை மூன்றாம் நிலை போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?

A.கஜகஸ்தான்

B.துருக்கி

C.பாகிஸ்தான்

D.கொலம்பியா

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 16 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading