CURRENT AFFAIRS –17 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 17
- உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் என தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்?
A.2 வது
B.3 வது
C.4 வது
D.5 வது
குறிப்பு:
- உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாக நடப்பாண்டில் உருவெடுக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
- சென்னையில் பிக்கி கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்திய பொருளாதார கடந்த 2014 இல் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் வரும் 2027-இல் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கூறினார்.
- உலக (ஜிடிபி) யில் இந்தியாவின் பங்களிப்பு ஆறு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
- இதை அடுத்து நடப்பாண்டில் உலக (ஜிடிபி) யில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுக்கும் 2022-23 ஆம் நிதியாண்டில் ரியல் ஜிடிபி வளர்ச்சி2 சதவீதம் என்ற வலுவான அளவை எட்டியுள்ளது.
- அதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டிலும் ஜிடிபி வளர்ச்சி விகிதம்5 சதவீதம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
- சமீபத்தில் எங்கு நடந்த அகழாய்வில் ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது?
A.சிவகங்கை
B.விருதுநகர்
C.திருநெல்வேலி
D.தூத்துக்குடி
குறிப்பு:
- திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி வைத்தார்.
- இங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானையோடுகள் சேதம் அடைந்த பானைகள் மரக்கரி துகள்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வு பணியில் ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
3.எந்த யூனியன் பிரதேசத்தில் தம்டே என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது?
A.ஜம்மு காஷ்மீர்
B.ஒரிசா
C.கேரளா
D.மகாராஷ்டிரா
- ஐநா தலைமையகத்தில் நடைபெறும் ஒன்பதாவது சர்வதேச யோகா தின கூட்டத்துக்கு தலைமை தாங்குபவர் யார்?
A.ராம் சந்திர பட்டேல்
B.நரேந்திர மோடி
C.ஜோ பைடன்
D.எலான் மஸ்க்
குறிப்பு:
- ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.
- யோகா பயிற்சியினால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்தது.
- இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐநா சபை ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று 2014 டிசம்பரில் அறிவித்தது.
- இந்த நிலையில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் ஒன்பதாவது சர்வதேச யோகா தின கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாவில் நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பது இதுவே முதல் முறை ஆகும்.
5.உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கான தினம் இன்று கொண்டாடப்படுகிற,து?
ஜூலை 17
B.ஜூன் 17
C.ஜூன் 12
D.மே 15
குறிப்பு:
- கருப்பொருள்: அவளுடைய நிலம் அவரது உரிமைகள் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் நில மறுசீரமைப்பு இலக்குகள்
6.Abundance in millets என்ற பாடல் எந்த இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது?
A.தமிழ் ஆங்கிலம்
B.ஹிந்தி தமிழ்
C.ஹிந்தி ஆங்கிலம்
D.ஹிந்தி பிரான்ஸ்
குறிப்பு:
- இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுதானியங்கள் பயன்கள் குறித்து இந்தப் பாடலை கிராமிய விருது பெற்ற இந்திய அமெரிக்க பாடகி பாலு பாடகர் கௌரவ்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என மூவரும் சேர்ந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.
- உலக மக்கள் பசியை போக்க சிறுதானியங்கள் ஆற்றும் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது
- சமீபத்தில் காவல்துறையால் தொடங்கப்பட்ட செயலி எது?
A.காவலர் உதவி
B.காவலன்
C.காவல்
D.காவலர் நலன்
குறிப்பு:
- சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எழும்பூரில் இயங்கும் காவலர் மருத்துவமனை கடந்த 1928 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மருந்தகமாக திறக்கப்பட்டதாகும்.
- கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 15 படுக்கைகள் வசதியுடன் சிறிய மருத்துவமனையாக செயல்பட தொடங்கிய இந்த மருத்துவமனை தற்போது ஒரு தலைமை மருத்துவர்,பத்து மருத்துவர்கள், 12 செவிலியர்களுடன் 50 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது.
- மேலும் சென்னை பெருநகர காவல் துறை காவல் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் என்ற கணினி மென்பொருளை உருவாக்கியுள்ளது.இதன் மூலம் காவலர் நலன் என்ற கைபேசி செயலி மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த மருத்துவமனை மேற்கொள்ள உள்ளது.
- சென்னை பெருநகர காவல் துறையால் உருவாக்கப்பட்ட காவலர் நலன் செயலி சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
- மேலும் அந்நிகழ்ச்சியில் காவலர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் மக்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை உறுதி செய்யவும் இந்தத் திட்டமும் செயலியும் உதவும் என்றார்.
- கால் எலும்பு முறிவுகளை விரைந்து குணப்படுத்தும் அதிநவீன டிபியா நெய்ல் சிகிச்சை முறையை எந்த மாவட்ட மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது?
A.சென்னை
B.சேலம்
C.கோவை
D.மதுரை
குறிப்பு:
- கால் எலும்பு முறிவுகளை விரைந்து குணப்படுத்தும் அதிநவீன டிபியா நெயில் சிகிச்சை முறையை சென்னை மியாட் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த சிகிச்சையின் வாயிலாக நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சைகளை வழங்க முடியும் என்றும் சிகிச்சைக்கு பிறகு நோய் தொற்று வாய்ப்புகள் இருக்காது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
- தற்போது அறிமுகமாகியுள்ள டிபியா நெய்யல் சிகிச்சையானது மூட்டு பகுதியில் சிறு துளை இட்டு அதன் மூலம் எலும்புக்கு நடுவே இணைப்பு உபகரணங்கள் பொருத்தப்படும் இதன் மூலம் மென் திசுக்கள் சேதம் அடைவது தவிர்க்கப்படும். விரைந்து குணமடைய முடியும். அது மட்டும் இல்லாத சிகிச்சைக்கு பிறகு நோய் தொற்றுகள் ஏற்படாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 16 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

