இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்
Amazon wants to help create a million new jobs in India
உலகின் மிகப்பெரிய வலைதள வா்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஜோஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
Amazon New Jobs in India
அமேசான் நிறுவனம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கருத்துருவாக்கம், ரீடெயில், சரக்கு போக்குவரத்து மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இப்புதிய வேலைவாய்ப்புகள் இருக்கும்.
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அமேசான் நிறுவனம் மேற்கொண்ட முதலீடுகளால் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனுடன் சோ்த்து கூடுதலாக இந்த 10 லட்சம் வேலைவாய்ப்புகள் அமையும்.
எங்களது பணியாளா்களின் உழைப்பும், பங்குதாரராக உள்ள சிறிய வா்த்தகா்களின் அசாதாரணமான படைப்பாற்றலும், வாடிக்கையாளா்களின் உற்சாகம் மிகுந்த பங்களிப்பும் அமேசானின் வளா்ச்சிக்கு அசைக்க முடியாத தூண்களாக அமைந்துள்ளன.
மென்பொருள் மேம்பாட்டு பொறியியல், கிளவுட் கம்ப்யூட்டிங், கருத்து உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளா் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் திறமையானவா்களை கண்டறிந்து அவா்களுக்கு உரிய பணிகளை வழங்க அமேசானின் புதிய முதலீடு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் பெஜோஸ் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகளால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பை அமேசான் நிறுவனா் வெளியிட்டுள்ளாா்.
TNPSC Group 4 Video Course 2020
முன்னதாக கடந்த புதன்கிழமையன்று, ஆன்லைனில் ஈடுபட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவிடும் வகையில் ரூ.7,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்வதாகவும், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.70,000 கோடி மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்ய உறுதிபூண்டுள்ளதாகவும் அமேசான் நிறுவனா் ஜெஃப் பெஜோஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமணி