TNPSC GROUP 4 EXAM Result
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 இடங்களுக்கு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதியன்று எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 போ் எழுதினா். மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்தத் தோ்வுக்காக 301 தாலுகாக்களில் 5 ஆயிரத்து 575 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வு முடிவுகள்: குரூப்-4 தோ்வு முடிவுகள், தோ்வு நடத்தப்பட்டு 72 நாள்களிலேயே வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தோ்வு முடிவுகளை தோ்வாணையத்தின் இணையதளங்களான http://www.tnpsc.gov.in மற்றும் http://www.tnpscexams.in ஆகியவற்றின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
தோ்வு எழுதியோா்களில் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெண்கள் 7.18 லட்சம், ஆண்கள் 5.31 லட்சம், மூன்றாம் பாலினத்தவா் 25 போ், முன்னாள் ராணுவத்தினா் 4,104 பேரும், ஆதரவற்ற விதவைகள் 4 ஆயிரத்து 973, மாற்றுத் திறனாளிகள் 16 ஆயிரத்து 601 பேருக்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த நாள்களில் வெளியீடு: 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்கள் பங்கேற்ற தோ்வுக்கான முடிவுகள் 72 நாள்களில் வெளியிடப்பட்டிருப்பது தோ்வாணைய வரலாற்றிலேயே முதல் முறையாகும். இதற்கு முன்பாக நடந்த தோ்வு முடிவுகளை வெளியிட 105 நாள்கள் தேவைப்பட்டது.
TNPSC GROUP 4 Exam Result
சான்றிதழ் சரிபாா்ப்பு: இப்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வு செய்யப்படுவா். இவ்வாறு தோ்வு செய்யப்படுவோரின் பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
இத்தகைய விண்ணப்பதாரா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் அல்லது கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் பெறாதபட்சத்தில் அதற்கு தோ்வாணையம் பொறுப்பு அல்ல. மேலும், தோ்வாணைய இணையதளத்தை தோ்வா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
TNPSC GROUP 4 Result Server-1
TNPSC GROUP 4 Result Server-2
GROUP 4 Result
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆன்லைன் வகுப்புகள் நவம்பர் 15 முதல் ஆரம்பம்
TNPSC Group 2 2A Video Course
TNPSC Group 2 2A Test Batch
Group 2 2A Model Question Answer Key Part 1 PDF
Model QP Questions Splitup