தமிழ்நாடு வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
பகுதி 1
History, Culture, Heritage and Socio – Political Movementsin Tamil Nadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A புதிய பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பாடத்திட்டத்தில் எட்டாவது தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் இந்த தலைப்பை நீங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் எவ்வாறு படிக்க தொடங்க வேண்டும் என்பது பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது
தேர்விற்கு படிக்கக்கூடிய தேர்வர்கள் இந்த தகவலைப் பயன்படுத்தி படிக்க தயாராகலாம்.
History, Culture, Heritage and Socio – Political Movementsin Tamil Nadu
இந்த நான்கு பகுதிகளை நீங்கள் இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள் அதாவது கொடுக்கப்பட்டுள்ள முதல் இரு தலைப்புகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆரம்பித்து திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் வரை முதல் பகுதியாகும் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆரம்பித்து பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள் இவற்றை இரண்டாவது பகுதியாகும் நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.
History, Culture, Heritage and Socio – Political Movementsin Tamil Nadu
முதல் பாதி :
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆரம்பித்து திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் வரை.
இந்த முதல் பாதியை நீங்கள் படிப்பதற்கு நிறைய தலைப்புகளை நீங்கள் படிக்க வேண்டியிருக்கும் மேலும் தமிழ் வரலாறு ஆகிய புத்தகங்களில் புதிய மற்றும் பழைய வையும் இரண்டையும் நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்.
மேலும் ஏற்கனவே நீங்கள் படித்துள்ள பொதுத்தமிழ் பகுதியில் ஏறக்குறைய பகுதி B இலக்கிய பகுதி முழுவதும் நீங்கள் படிக்கவேண்டும்.
இலக்கியம் மட்டுமின்றி PART C – தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் என்ற தலைப்பின் கீழ் வருகின்ற மிக முக்கியமான தலைப்புகள் ஆன பெரியார் அண்ணா அம்பேத்கர் காமராசர் முத்துராமலிங்க தேவர் மேலும் தமிழ்நாடு சம்பந்தமான தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு சம்பந்தமான வணிகரீதியான தகவல்கள் தமிழ்நாட்டின் பழம் பெருமையான நகரங்கள் மேலும் மிக முக்கியமான தமிழ்நாடு தமிழ் வரலாறு சார்ந்த தகவல்கள் இவற்றை நீங்கள் படிக்க வேண்டும்.
மேலும் பகுதி A இலக்கணம் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நூல் நூலாசிரியர் அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் நூல்கள் இவற்றை முதல் பாதிக்கு நீங்கள் படிக்கவேண்டும்.
இரண்டாம் பாதி :
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆரம்பித்து பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
இரண்டாம் பாதியை நீங்கள் தமிழ் புத்தகம் மற்றும் வரலாறு புத்தகம் ஆகிய இரண்டிலும் படிக்க வேண்டியிருக்கும்.
இவற்றில் பெரும்பாலான பகுதியை நீங்கள் இந்திய தேசிய இயக்கம் என்ற தலைப்பின் கீழ் படித்திருப்பீர்கள்.
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்த தலைப்புகள் எல்லாம் ஏற்கனவே நீங்கள் பழைய பாடத்திட்டத்திலும் படித்திருப்பீர்கள் இந்திய தேசிய இயக்கத்தில் படித்திருப்பீர்கள்.
இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் இயக்கங்கள் – இந்த தலைப்பையும் நீங்கள் சமூக அறிவியல் மற்றும் தமிழ் புத்தகத்தில் எங்கெல்லாம் தமிழ்நாட்டின் அரசியல், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்கள், தமிழ்நாடு சார்ந்த மிக முக்கியமான திட்டங்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், உடல் நலம் சார்ந்த சுகாதாரம் சார்ந்த மிக முக்கியமான திட்டங்கள் ஆகிய அனைத்தையும் நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.