Daily Current Affairs May 11th to 13th CA For All Exams -2020

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(May 11th to 13th – Current Affairs  2020 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : May 11th to 13th  Current Affairs. 

உலக செவிலியர்கள் தினம்

 • உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 •  சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) 1965 முதல் இந்த நாளைக் கொண்டாடுகிறது.. ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறை மற்றும்  நவீன செவிலியத்தை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர தேர்வு செய்யப்பட்டது.
 • புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டுவருவதற்காக WHO 2020 ஐ செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டு என நியமித்துள்ளது.

சர்வதேச செவிலியர் தினமான 2020 இன் தீம் “நர்சிங் தி வேர்ல்ட் டு ஹெல்த்”.

பிஎம் கேர்ஸ்

 • கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலநிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார்.
 • இதில் பிரதமர் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
 • பிரதமர் நிதியிலிருந்து (பிஎம் கேர் அறக்கட்டளை) ரூ. 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு பற்றி 

 • வென்டிலேட்டர் வாங்க – ரூ. 2,000 கோடி
 • புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக –  ரூ. 1,000 கோடி
 • கரோனா தடுப்பு மருந்து ஆய்வுக்காக –  ரூ. 100 கோடி

ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டம்

 • கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக பிரதமர் மோடி அறிவித்த திட்டம்  ஆத்மநிர்பார் பாரத் அப்யான் (தன்னிறைவு இந்தியா or ‘சுயசார்பு இந்தியா’) என்ற இத்திட்டம், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 
 • இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும் .
 • ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ திட்டம் என்பது வணிகர்கள், தெருக்கடைக்காரர்கள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், நேர்மையாக வரி செலுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமானது

அர்ஜூனா விருது

 • விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. 
 • கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜா, பூனம் யாதவ் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
 • இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்குப் பிசிசிஐ பரிந்துரை  செய்துள்ளது.
 • தமிழகத்தைச் சேர்ந்த பாரலிம்பிக் வீரர் மாரியப்பன் அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
 •  தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடு வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயரை அர்ஜூனா விருதிற்கு தேசிய துப்பாக்கிச்சுடு சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
 • இளவேனில் வாலறிவன் ரியோடி ஜெனிரோ நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார்.
 • அத்துடன் ஏற்கனவே ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றவர் 

சாம்பியன்ஸ் இணையதளம்

 • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம்  www.Champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப்படுகிறது.
 • சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்.
 • நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, தேசிய மற்றும் உலகளாவிய சாம்பியன்ஸ் என்ற நிலையை நோக்கிய நகர்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்துக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு

 • தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர வேலைப்பாடு ஆகிய இரண்டு பொருட்களுக்கு புவிசார் குறியீடு  வழங்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறப்பு மிக்க 23 கைவினைப் பெருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரவேலைப்பாடுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.
 • பூம்புகார் சார்பில் 2013 ஆம் ஆண்டு இதற்காக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக கடந்த 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது (மே 12) இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
 • இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை சார்பில் இயங்கி வரும் புவிசார் குறியீடு  பதிவகத்தின் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் அறிவிப்பினை வெளியிட்டனர். 

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு

தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது.இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படும்.நெட்டியில் செய்யப்படும் கலைப்பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்றே வெண்மையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும்.

ஹார்ட் விருது 

 • பெடரேஷன் அமைப்பின் ‘ஹார்ட்’ விருது வென்ற முதல் இந்தியர்  சானியா மிர்சா.
 • ஆண்களுக்கு டேவிஸ் கோப்பை போல மகளிர் டென்னிஸில் ஃபெட் கோப்பை போட்டி (Fed Cup) நடைபெறும். 1963 முதல் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தன்னுடைய நாட்டுக்காகச் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐடிஎஃப்) சார்பாக , மக்கள் இதயங்களை கவர்ந்தவர் என்ற ‘ஹார்ட்’ விருது வழங்கப்படும். 2009 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
 • இந்த வருடம் ஹார்ட் விருதுக்கான ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா தேர்வாகியுள்ளார். ஒவ்வொரு மண்டலத்திலிருந்து இரு வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். இந்த முறை சானியா மிர்சா மற்றும் இந்தோனேசியாவின் 16 வயது வீராங்கனை பிரிஸ்கா ஆகிய இருவரும் பரிந்துரைக்கப்பட்டதில் சானியா மிர்சாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
 • விருதின் மூலம் கிடைத்த பணம்  ரூ. 1.50 லட்சம் 

பெங்களூரூ கவுடா சர்வதேச விமான நிலையம் 

 • பெங்களூரூ கவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக வாடிக்கையாளர்களால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • உலகம் முழுவதும் 550 விமானநிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதிகளை மதிப்பிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 11 ஆண்டு பழமையான கெம்பேகவுடா விமான நிலையத்தைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெடின் நிர்வாக இயக்குநர் ஹரி கே மரார் தெரிவித்துள்ளார்.

டெலி மெடிசன்’ திட்டம்

 • டெலி மெடிசன்’ திட்டத்தை, சென்னை மாநகராட்சி துவக்கி உள்ளது.
 • சென்னை மாநகராட்சி, ‘தனுஷ் ஹெல்த்கேர்’ நிறுவனத்துடன் இணைந்து, டெலி மெடிசன் வாயிலாக சிகிச்சை அளிக்கும், GCC Vidmed என்ற, மொபைல் போன் செயலியை உருவாக்கியுள்ளது.இச்செயலியை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுக்குள்ள உடல் நல பிரச்னைகளை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ௨௪ மணி நேரமும் டாக்டர்களிடம் தெரிவித்து, அதற்கான மருந்துகள் பரிந்துரையை, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
 • புதிய செயலியை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

TNPSC Group 2 2A Video Course

TNPSC Group 4 Exam Video Course 

For TNPSC Video Course & Test Batch Call : 8681859181 

 

Check All Month Current Affairs

Download May 11th to 13th  Current Affairs PDF 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

NoDateDownload link
11.01.2020Download PDF
22.01.2020Download PDF
33.01.2020Download PDF
44.01.2020Download PDF
55.01.2020Download PDF
66.01.2020Download PDF
77.01.2020Download PDF
88.01.2020Download PDF
99.01.2020Download PDF
1010.01.2020Download PDF
1111.01.2020
1212.01.2020
1313.01.2020
1414.01.2020
1515.01.2020
1616.01.2020
1717.01.2020
1818.01.2020
1919.01.2020
2020.01.2020
2121.01.2020
2222.01.2020
2323.01.2020Download
2424.01.2020Download
2525.01.2020Download
2626.01.2020Download
2727.01.2020Download
2828.01.2020Download
2929.01.2020Download
3030.01.2020Download
3131.01.2020Download

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: