Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(May 19th to 31st – Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 19th to 31st Current Affairs.
தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் – மே 21
- இத்தினமானது 1991 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமரான இராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இந்தியாவில் மே 21 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
- இது அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி அனுசரிக்கப்படுகின்றது. எனவே இதன்மூலம் குடிமக்கள் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.
மே 22
- சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்
- இலங்கை குடியரசு தினம் (1972 )
- ஏமன் தேசிய தினம்
- விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது (1990)
- முதல் அட்லஸ்70 வரை படங்களுடன் வெளியிடப்பட்டது (1570)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் நினைவு நாள்
- மே 22, 2018 அன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.
- இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.
மே 23
மெக்சிகோ மாணவ மாணவர் தினம். ஜமைக்கா தொழிலாளர் தினம்..
நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது (1568)
ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது (1949)
மே 23
ஆமை இனங்களை அழிவில் இருந்து பாதுகாக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2000ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 23ஆம் தேதி உலக ஆமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மே 25
- உலக தைராய்டு தினம்
- அர்ஜென்டினா தேசிய தினம்
- லெபனான் விடுதலை தினம் (2000)
- ஆப்பிரிக்க ஒன்றியம் உருவானது
மே 26
- ஜார்ஜியா தேசிய தினம்
- போலந்து அன்னையர் தினம்
- ஜார்ஜியா மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது (1918)
மே 27
- நைஜீரியா குழந்தை குழந்தைகள் தினம்
- நைஜீரியா அன்னையர் தினம்
- பொலிவியா அன்னையர் தினம்
- இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் (1964)
- ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பர்க் நகரை அமைத்தான் (1703)
மே 28
- ஆர்மீனியா குடியரசு தினம் பிலிப்பைன்ஸ் கொடி நாள்
- நேபாள குடியரசு தினம்
- வீரசாவர்க்கர் 28-5-1883
- மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள பாகூர் என்ற சிறிய கிராமத்தில், தாமோதர் பந்த் – ராதாபாய் என்னும் தம்பதியருக்கு இரண்டாவது மகனாய் பிறந்தவர் தான் நம் விநாயக் தாமோதர் சாவர்க்கர். பாலகங்காதர திலகரின் பேச்சினால் கவரப்பட்ட சாவர்க்கர், தனது 15-வது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினார். கவிஞர், எழுத்தாளரான சாவர்க்கர், ‘இந்திய விடுதலைப் போராட்டம் 1857’, ‘இந்துத்துவா’ போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
மே 29
- உலக தம்பதியர் தினம் சர்வதேச அமைதி காப்போர் தினம் நைஜீரியா மக்களாட்சி தினம் (1999)
- இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது (1947)
ரம்ஜான் பண்டிகை
- ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.
- மே 25ம் தேதி ஈதுல் ஃ பித்ர் பெருநாள் ஆகும் என்று தமிழக தலைமை ஹாஜி (இஸ்லாமிய நீதிபதி.)சலாவுதீன் முகமது அயூப் முறைப்படி அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மே 31-ம் தேதி, உலக புகையிலை தினம் (World No Tobacco Day 2020)
- உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறது.
- புகையிலையினால் ஏற்படக்கூடிய நோய்தொற்று மற்றும் அதனால் நிகழக்கூடிய மரணங்கள் குறித்து உலக அளவில் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் விதமாக, 1987 ஆம் ஆண்டு, மே மாதம் 31ஆம் தேதியை, உலக புகையிலை எதிர்ப்பு நாளாக உலக சுகாதார அமைப்பானது நிர்ணயித்தது.
- முதன்முதலில் புகையிலை எதிர்ப்பு நாள், ஏப்ரல் 7ஆம் தேதி, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் 40வது ஆண்டு விழாவின் போது கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் மே 31ஆம் நாள் புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
- 1975 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிகரெட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பொதுப் போக்குவரத்து வாகனத்தில் புகைபிடித்தல் சட்டவிரோதமானது என்று 1988-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அறிவுசார் காப்புரிமை
- இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் செயற்கையான மண் தரையை உருவாக்கவும், அந்த மண் தரை மீது லேண்டரைப் பாதுகாப்பாக இறக்கி, பின்னர் அதே மண் தரை மீது ரோவரை ஓட வைத்துப் பார்க்கப்பட்டது.
- இந்த சோதனை ஆராய்ச்சிக்காக, நிலவின் மண்ணில் உள்ள தாது உப்புகள், ஆக்சைடுகள் ஆகியவற்றை ஒத்த, ரசாயனத் தன்மை கொண்ட அனார்த்தசைட் (Anorthosite) என்ற வகை மண், சுமார் 50 டன் வரை இஸ்ரோ ஆராய்ச்சி மையத்துக்குத் தேவைப்பட்டது.
- அமெரிக்காவில் இருந்து, நிலவின் மண் மாதிரியை வாங்குவது, மிக அதிக செலவு பிடித்தது. எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவி தகவல் மற்றும் கோளியல் மையம் இயக்குநர் பேராசிரியர் எஸ்.அன்பழகன் தலைமையில் சுமார் 50 டன் அளவுக்கு நிலவின் மண் மாதிரியை, சந்திராயன்-2 ஆராய்ச்சிக்காகத் தயாரித்துக் கொடுத்தனர்.
- சந்திராயன்-2 ஆராய்ச்சிக்காக, நிலவின் மண் மாதிரியைத் தயாரித்துக் கொடுத்தமைக்கான தொழில்நுட்பத்துக்கு, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எஸ்.அன்பழகன், இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழு, அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த சித்தம்பூண்டி, கந்தம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அனார்த்தசைட் வகை பாறைகளை வெட்டி எடுத்து, அதில் இருந்து, பவுடர் போல, 25 மைக்ரான் அளவு பொடியாக அரைத்து, இஸ்ரோவுக்கு வழங்கினோம். இந்த தொழில்நுட்பத்துக்காக, காப்புரிமை கோரி, மத்திய அரசின் அறிவுசார் காப்புரிமை மையத்தில் (IPR) கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பித்திருந்தோம். பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பின்னர், தற்போது, நாங்கள் விண்ணப்பித்த நாளில் இருந்து, 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது
அகழாய்வு
- கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. 4, 5-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.
- பிப்.19-ம் தேதி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு may 23 தொடங்கியது.
- கீழடி தொழிற்சாலைகள் பகுதியாகவும் கொந்தகை ஈமக்காடு பகுதியாகவும் உள்ளன. அகரம், மணலூர் வாழ்விட பகுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
வெட்டுக்கிளிகள் வெட்டுக்கிளிகள்: ஹய்ரோக்ளைபஸ் பேன்யன்
- வெட்டுக்கிளிகள் என்பது ஒரு சிறிய பூச்சி இனம்.வெட்டுக்கிளி கள் ஒரு நாட்டின் விவசாயத்தயே அழித்து, உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி விடும்.வெட்டுக்கிளிகளுக்கு விவசாயிகளின் விரோதி என்று ஒரு சொல்லப்படுவதுண்டு.ஒரு பூச்சி ஒவ்வொரு நாளும் தனது எடையளவு உணவு களை சாப்பிடும் சக்தி கொண்டது.வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
- 26 ஆண்டுகள் கழிந்து கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்தது. அங்கு மட்டும் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிப்படைந்தது.
பூச்சியின் விபரம் : –
- முட்டை: முட்டைகள் பை வடிவில், பத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலை மட்குகளில் அல்லது மண்ணில் காணப்படும். ஒவ்வொரு முட்டைப் பையிலும் 10-300 முட்டைகள் வரை அரிசி வடிவில் காணப்படும்.
- குட்டி வெட்டுக்கிளிகள்: முதிர்ந்த வெட்டுக்கிளிகளைப் போலவே, அளவில் சிறியதாகவும் வெளிர் நிறத்தில் இறக்கைகள் இன்றிக் காணப்படும்.இப்பருவம் 5-10 நாட்கள் வரை இருக்கும்.
- முதிர்ந்த வெட்டுக்கிளிகள்: குஞ்சுகள் ஒரு மாதங்களில் முதிர்ச்சி அடைகின்றன. இவை 1-2 மாதங்கள் வரை வாழ்கின்றன.
இதன் ஆயுட்காலம், ஆறு முதல் எட்டு வாரங்கள். தனது ஆயுட்காலத்தில், மூன்று முறை அவை முட்டையிடுகின்றன.அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள், எங்குள்ளன என்பதை அறிந்து, காற்றின் திசையில் பயணிப்பதால், இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம்.பாலைவன நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இருந்து உருவாகும் .
உயிரியல் முறை :-
- நாசிமா லொகஸ்டா எனும் புரோட்டோசோவா அடங்கிய பொறிகளை வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் வைக்கலாம்.
- நாசிமா லொகஸ்டா ‘நோலோபெய்ட்’, ‘செமாஸ்போர்’ எனும் பெயர்களில் கடைகளில் கிடைக்கின்றது. இவை வெட்டுக்கிளிகளை தாக்குகின்றது. இவை வெட்டுக்கிளிகளை முற்றிலும் அழிக்காது. பூச்சியில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது
கோவிட் 19 கதை
தேசிய அறிவியல், தொழில்நுட்பத் தகவல் அளிப்புக் கவுன்சில் (என்.சி.எஸ்.டி.சி.), அறிவியல் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி.) ஆகியவை டாக்டர் அனாமிகா ராய் நினைவு அறக்கட்டளையுடன் இணைந்து கோவிட்-19 நோய்த் தாக்குதல் குறித்த அனைத்து முக்கிய தகவல்கள் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்க பிரபலமாக உள்ள மல்டிமீடியா வழிகாட்டி இந்திப் பதிப்பை உருவாக்கியுள்ளன.
ஆயுஷ் சஞ்சீவனி விநாடி-வினா போட்டி
- ஆயுஷ் அமைச்சகம் மற்றும் MEITY கோவிட்-19 நோயை எதிர்ப்பதற்கு, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆயுஷ் அறிவுரைகளையும், நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல் மற்றும் பின்பற்றுபவர்கள் பற்றிய விவரங்களை அறியவும், கோவிட்-19 பாதிப்பைத் தடுப்பதில் இவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பதை அறியவும் “ஆயுஷ் சஞ்சீவனி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
- அதையொட்டி விநாடி வினா போட்டியையும் அறிவித்துள்ளது.
- quiz.mygov.in என்ற வலைத்தளத்தில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. 22.5.2020 அன்று தொடங்கிய இந்தப் போட்டி 21.6.2020 அன்று நிறைவடைகின்றது.
- ஒரு முதல் பரிசு ரூ.25,000/-, மூன்று இரண்டாம் பரிசுகள் தலா ரூ.10,000/- மற்றும் ஐந்து மூன்றாம் பரிசுகள் தலா ரூ.5,000/- வழங்கப்படும்.
பிபிஇ பாதுகாப்பு உடைகள்
- கோவிட்-19 பிரச்சனையை எதிர்கொள்ள, பிபிஇ பாதுகாப்பு உடைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான இதர தயாரிப்புகளை உலக சுகாதார நிறுவனம் / ஐஎஸ்ஓ விதிமுறைகள்படி உற்பத்தி செய்து சான்றளிப்பது போன்ற, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னணி நிறுவனமான பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையம் (சிபெட்) மேற்கொள்ளவுள்ளது.
- பிபிஇ பாதுகாப்பு உடைகளை தயாரிக்க, திருப்பூரில் உள்ள மூன்று ஆடை நிறுவனங்கள், ஒரு பொறியில் தொழில் நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப்ப விளிம்பு தையல் இயந்திரத்தை (Heat seam machine) உருவாக்கியுள்ளன.
கொரோனா மருந்து
- கரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோராகுவின் என்ற மருந்து வழங்கப்பட்டு வந்தது.தற்போது ரெம்டெசிவிர் எனும் மருந்து கரோனாவுக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது .
- அமெரிக்காவின் ஜில்லியாட் சைன்ஸஸ் இந்தியாவின் நான்கு கம்பெனிகளுக்கு லைசென்ஸ் அல்லாத ரெம்டெசிவிர் (கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்து) மருந்தை பேட்டண்ட் இல்லாமல் உருவாக்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தை செய்துள்ளது…
ஒப்பந்தம்
- ஜூபிலியண்ட் லைஃப் சைன்ஸஸ், சிப்லா, ஹெட்ரோ லேப்ஸ், மைலன் என்.வி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஜில்லியாட் சைன்ஸஸ். இதன்மூலம் 127 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான மருந்தை இந்தியாவின் நான்கு கம்பெனிகளும், பாகிஸ்தானின் ஃபெரோஸ்சன்ஸ் உட்பட ஐந்து கம்பெனிகள் உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.முக கவகசங்கள்
- நீண்டநேரம் பயன்படுத்துவிதமாகவும், வேலை செய்யும்போது எளிதாக இருக்கும் வகையிலும் சௌகரியமான கோவிட்-19 பாதுகாப்பு முகக்கவசங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.
- அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான பெங்களூருவில் உள்ள CeNS மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கப் வடிவிலான முகக்கவச உறையை வடிவமைத்துள்ளது. இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
- பெங்களூருவைச் சேர்ந்த கெமெல்லியா குளோத்திங் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு இந்தத் தொழில்நுட்பத்தை CeNS அளித்துள்ளது.
‘ஆத்மனிர்பார்
- ‘ஆத்மனிர்பார் (“சுயசார்பு பாரதம் – தன்னிறைவு இந்தியா) பாரத்தின் ஐந்து தூண்கள்- பொருளாதாரம், உள்கட்டமைப்பு, புள்ளி விவரங்கள், மனித வளம் மற்றும் தேவை
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து
- அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும் , மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜில் மாடெர்னா என்ற உயிரி தொழில்நுட்பமும் இணைந்து இந்த வைரஸ் தடுப்பு மருந்து எம்ஆர்என்ஏ 1273 ஒன்றை உருவாக்கியுள்ளனர் .
- நார்வே நாட்டைச் சேர்ந்த சிஇபிஐ என்ற ஆராய்ச்சி கட்டளையும் இதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது.
- உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முறையாக மனிதர்களுக்கு தடுப்பூசிப் பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.ந்த மருந்து முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்தது.
- இந்த மருந்து, அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மருந்து, மனிதர்களிடம் ஆராய்ச்சியை தொடங்கினர்.
- இதில் முதல் அணியை சேர்ந்த 8 பேரின் ஆய்வுமுடிவுகள் முழுமையாக கிடைத்துள்ளன. அவர்கள் 8 பேரின் உடலிலும் கரோனா வைரஸை அழிக்கும் எதிரணுக்கள் உருவாகி உள்ளன.மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றது
WAG12 இன்ஜின்
- அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட ரயில் என்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வல்லமை கொண்ட 6வது நாடாக பெருமைக்குரிய பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. உலகில் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட என்ஜின் அகல ரயில் பாதையில் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- மேக் இன் இந்தியா என்ற இந்தியாவிலேயே தயாரிப்போம் திட்டத்தின் கீழ் 12000 குதிரைத்திறன் கொண்ட சக்திவாய்ந்த இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது.பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் நேற்று 14:08 மணிக்கு இது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
- மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு தனியார் நிறுவனம் (MELPL) புதிதாக வடிவமைக்கப்பட்ட ரயில் என்ஜினுக்கு WAG12 என பெயரிடப்பட்டு 60027 என்ற எண் அளிக்கப் பட்டுள்ளது. 118 சரக்குப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் இருந்து தேஹ்ரி-ஆன்-சோனே, கர்வா சாலை வழியாக பர்வாடிஹ் ரயில் நிலையத்துக்குச் செல்கிறது.
- IGBT அடிப்படையிலான அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக, 3 பேஸ் டிரைவ் கொண்டதாக, 9000 கிலோ வாட் (12000 குதிரைசக்தி) திறன் கொண்டதாக, மின்சாரத்தில் இயங்கக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அதிபட்சம் 706kN வரை இழுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். Bo-Bo வடிவமைப்பு கொண்ட 22.5 டன் எடை கொண்ட இந்த என்ஜின் 25 டன் வரை மேம்படுத்தக் கூடியதாக, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கும்.
இந்தியாவிற்கு 7 புதிய தூதர்கள் நியமனம்
7 நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஆதாரச் சான்றுகளை வழங்கினர். டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து தாங்கள் சார்ந்துள்ள நாட்டின் தூதர் என்பதற்கான ஆதாரத்தை அளிப்பர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார்.இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக காணொலிக் காட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரச் சான்றுகளை வழங்கிய தூதர்கள் / துணை தூதர்கள்:-
- சோ ஹூய் சோல், வடகொரிய தூதர்.
- அப்துல் வஹாப் ஹைதரா, செனகல் குடியரசு தூதர்.
- ரோஜர் கோபால், டிரினாட் அண்ட் டெபாகோ குடியரசு துணைத் தூதர்,
- சாந்தி பாய் ஹனுமான்ஜி, மொரிசீயஸ் துணைத் தூதர்.
- பேரி ராபர்ட் ஓ‘ பரல், ஆஸ்திரேலிய துணைத் தூதர்.
- எம்.என்‘டிரை எரிக் கேமிலி, கோடி டி‘இவோரி குடியரசு தூதர்.
- ஜாக்குலின் முகாங்கிரா, ருவாண்டா குடியரசு தூதர்.
வந்தே பாரத் மிஷன் திட்டம்
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் திட்டம்.
உலகச் சுகாதார அமைப்பின் செயற்குழு வாரியத் தலைவர்.
- சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின், 147வது செயற்குழு கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. இதில்,உலக சுகாதார அமைப்பின், செயற்குழு வாரியத் தலைவராக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் பொறுப்பேற்றர்.
- உலக சுகாதார அமைப்பின் செயற் குழுவில், 34 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். இக்குழுவின் தலைவராக, ஜப்பானைச் சேர்ந்த, ஹிரோகி நகாடனி பதவிக்காலம் முடிவடைந்தது.
- இவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, புதிய தலைவராக, ஹர்ஷ வர்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான தீர்மானத்தை, 194 நாடுகள் அடங்கிய, உலக சுகாதார சபை அங்கீகரித்துள்ளது.
ராயலசீமா நீரேற்று பாசன திட்டம்
ஆந்திர அரசு உத்தேசித்துள்ள ராயலசீமா நீரேற்று பாசன திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறாமல் ஆந்திரபிரதேச அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன் செயல் சட்டத்துக்கு புறம்பானது.
29-03-2015 – “பட்டீசீமா நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கான” அடிக்கலை நாட்டினார் சந்திரபாபு நாயுடு.
06-07-2016 – முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஓராண்டிற்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்ட திட்டம் என்பதால் இது லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. 24 பம்ப்புகளோடு இயங்கும் இதுதான் ஆசியாவின் மிகப்பெரிய நீரேற்று நிலையம்.
ஜி-7 நாடு மாநாடு
- உலகின் வளர்ந்த நாடுகளின் அமைப்பு ஜி-7.வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரி்ட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் மாநாடாகும். இதில் முக்கிய உறுப்பினர் அமெரிக்கா. ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
- இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கலந்து பேசி பொருளாதார பிரச்சினைகளை, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வார்கள்.
- இந்த ஆண்டு ஜி-7 நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது. ஜி-7 மாநாட்டின் தலைவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
பல்கான் 9 ராக்கெட்
- அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பல்கான் 9 ராக்கெட் 2 நாசா வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்துள்ளது.
- இந்த ராக்கெட்டில் நாசா விண்வெளி வீரர்களான அமெரி்க்காவைச் சேர்ந்த பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53) இருவரும் பயணித்தனர்.
- புளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் ஃபால்கான் 9 ராக்கெட் இரு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி மே 30-ஆம் தேதி அதிகாலை சனிக்கிழமை பிற்பகல் 3.22 மணிக்கு விண்ணில்பாய்ந்தது.
- வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ” ஸ்பேஸ்எக்ஸ்”நிறுவனம் பெற்றது.
- இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் .
எமர்ஜென்சி வென்ட்டிலேட்டர்கள்
- அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதி கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் குறைந்த விலை போர்ட்டபிள் வென்ட்டிலேட்டர்களைத் தயாரித்துள்ளனர்.தேவேஷ் ரஞ்சன்-குமுதா ரஞ்சன் ஆகியோர் இந்த குறைந்த விலை போர்ட்டபிள் வென்ட்டிலேட்டர்களைத் வடிவமைத்துள்ளனர்.
- தேவேஷ் ரஞ்சன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜார்ஜியா டெக்கின் ஜார்ஜியா வுட்ரஃப் ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கின் அசோசியேட் தலைமைப் பொறுப்பில் உள்ளார். மனைவி குமுதா ரஞ்சன் அட்லாண்ட்டாவில் மருத்துவர்.
‘ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர்’ விருது
- இந்திய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ராஜீவ் ஜோஷி ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதைப் பெற்றுள்ளார்.நியூயார்க்கில் உள்ள ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்.
- மின்னணு தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு உகந்த செயல்பாட்டுக்காகவும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுக்காகவும் ஜோஷிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் சுமார் 250 காப்புரிமைக்குட்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் ஜோஷி. இதனால் நியூயார்க்கின் மதிப்பு மிக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டக் கூட்டமைப்பு இவருக்கு மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வழங்கி கவுரவித்தது.அவரது கண்டுபிடிப்பு தொற்று ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள் ஆகும்.
- முன்கணிப்பு தோல்வி பகுப்பாய்வுகளுக்கான இயந்திர கற்றல் நுட்பங்கள், உயர் அலைவரிசை, உயர் செயல்திறன் மற்றும் குறைந்த சக்தி ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் நினைவுகள் மற்றும் வன்பொருள் முடுக்கிகளில் அவற்றின் பயன்பாடு ஆகியவை செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கானது ஆகும்.
- இந்த கட்டமைப்புகள் பல செயலிகள், சூப்பர் கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், கையடக்க மற்றும் மாறி கேஜெட்டுகள் மற்றும் பல மின்னணு பொருட்களில் உள்ளன. அவரது கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்க்கை, உலகளாவிய தகவல் தொடர்பு, சுகாதார அறிவியல் மற்றும் உலகத்தை பாதிக்கும் மருத்துவ துறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்
- தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வரும் திட்டத்துக்கு, சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
- சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங். எனினும் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக உள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
உலக சுகாதார சபையின் மாநாடு
- உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை வகுக்கும் பிரிவான உலக சுகாதார சபை யின் 2 நாள் மாநாடு, ஜெனீவாவில் தொடங்கியது. முதல்முறை யாக இந்த மாநாடு காணொலி காட்சி மூலம் நடக்கிறது.
- உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கரோனா வைரஸ் எவ்வாறு பரவியது, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன உள்ளிட்டவை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா உள்பட 102 நாடுகள் வைத்த கோரிக்கையை உலக சுகாதாரஅமைப்பு ஏற்றுக்கொண்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன்.
- உலக சுகாதார அமைப்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்க்கு அனுப்பப்படும்.
- சர்வதேச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும்
இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மரணம்
- இஸ்ரேலுக்கான சீனத் தூதர் 58 வயதான டு வெய் பிப்ரவரி மாதம் இஸ்ரேலின் தூதராக நியமிக்கப்பட்டார். அவர் முன்பு உக்ரைனுக்கான சீனாவின் தூதராகப் பணியாற்றினார்.
- டெல் அவிவ் நகரத்தின் வடக்கே உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.
தமிழக உளவுத்துறை ஐஜி
தமிழக உளவுத்துறை ஐஜியாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
டேக் இட் ஈசி’ திட்டம்
- தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயன் பெற 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.
- டேக் இட் ஈசி தேன்மொழி என்ற பெயரில் இனிமையான பெண் குரல், மாணவர்களின் பதற்றம் தணிக்கிறது. தினம் ஒரு கதையாக 30 நாட்களுக்கான கதைகள் தயார் செய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றன. இந்த எண்ணை அழைக்கும் மாணவர்கள் அந்தந்த நாளுக்கான கதையைக் கேட்கலாம். கதை முடிவில் சில கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அவற்றுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
தான் வேதா இல்லம்
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வாழ்ந்த வேதா இல்லம், அரசு இல்லமாக அறிவிக்கப்பட்டது
‘ஆர்சனிக் ஆல்பம் 30’ (arsenic album 30C)
- கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ (arsenic album 30C) என்ற மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள ‘ஆரோக்கியம்’ திட்டத்தில் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது. ர். ஆர்சனிக் ஆல்பம் 30சி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளது
கேல் ரத்னா விருது
- மத்திய அரசால் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும். அதற்கு அடுத்தபடியாக வீரர்-வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
- அர்ஜூனா, கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாகூர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் பி.டி.உஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றதையடுத்து கேல் ரத்னா விருதுக்கு பரி்ந்துரை செய்யப்பட்டுள்ளார்
- கேல் ரத்னா விருதுக்கு இதுவரை 6 பேர் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், குத்துச்சண்டை வீரர்கள் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன், மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991-1992-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இந்த விருதைப் பெற்றார். கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜூனா விருது
- விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு 1961-ம் ஆண்டு முதல் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது.
- மகளிர் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக அனைத்துப்பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும், டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் பரிந்துைர செய்யப்பட்டுள்ளனர்.
நவீன தரவு மையம்
- தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், National Payments Corporation of India நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு (SmartData Centre) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
- வேகமாக வளர்ந்துவரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் சாதகமான புவியியல் சூழல், மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைந்துள்ளதால், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளங்கும் நிலையில் National Payments Corporation of India நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த நவீன தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிபிஇ பாதுகாப்பு உடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
- பிபிஇ பாதுகாப்பு உடைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான இதர தயாரிப்புகளை உலக சுகாதார நிறுவனம், ஐஎஸ்ஓ விதிமுறைகள்படி உற்பத்தி செய்து சான்றளிப்பது போன்ற, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னணி நிறுவனமான பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையம் (சிபெட்) மேற்கொள்ளவுள்ளது.
நபார்டு தலைவர்
- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைவராக ஜி.ஆர். சிந்தாலாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (27.05.2020) அவர் அந்தப் பொறுப்பினை மும்பையில் ஏற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக, அவர் “நாப்பின்ஸ்” என்ற நபார்டின் துணை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
உணவு பதப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
- உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு (FME)அதிகமாகக் கடனுதவிகள் கிடைக்கவும், இந்நிறுவனங்களின் வருவாயைப் பெருக்கவும் மத்திய மோடி அரசு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தது. உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டம் 2020-21 முதல் 2024-25 வரையில் 5 ஆண்டு காலத்துக்கு அமல்படுத்தப்படவுள்ளது.
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம்
- தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வரும் திட்டத்துக்கு, சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது
TNPSC Group 4 Exam Video Course
For TNPSC Video Course & Test Batch Call : 8681859181
Check All Month Current Affairs
Download May 19th to 31st Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |