Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(May 1st – Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 1st Current Affairs.
முக்கியமான நாட்கள்
உழைப்பாளர் தினம் (Labour Day)
உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும்.
1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரத்தில் 2.5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது.மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக சில தொழிலாளர் இயக்கத்தை நடத்திய தலைவர்களுக்கு தூக்குத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பல போராட்டங்களுக்கு பின்புதான் உலகத் தொழிலாளர்கள் அனைவரும் எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் முதன்முறையாக கடந்த 1923 ஆம் ஆண்டு சென்னையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் (பட்டியல்)
நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கரோனா பாதிப்பை பொறுத்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக பிரித்து மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட பகுதிகள், அபாயப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டவை சிவப்பு மண்டலங்களாகவும், ஆரம்பத்தில் கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்தாலும், புதிதாக கரோனா நோயாளிகள் இல்லா மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், கரோனா நோயாளிகளே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியல், வாரத்துக்கு ஒரு முறை அப்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
TNPSC Group 4 Exam Video Course
For TNPSC Video Course & Test Batch Call : 8681859181
பச்சை நிற மண்டலங்கள்:
- கிருஷ்ணகிரி
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு
தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருட்களின் அரசி என்றழைக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற 2014இல் அப்போது சார் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர், புவிசார் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலில் கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2019இல் சமர்ப்பிக்கப்பட்டது. இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கீழ்புவிசார் குறியீடு பதிவகம் வெளியிட்டுள்ள பட்டியலில் கோவில்பட்டி கடலைமிட்டாய், மணிப்பூர் கருப்பு அரிசி, உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.
புயலுக்குத் தமிழ்ப் பெயா்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களில் பெயா்ப் பட்டியலில் 2 தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.
இதில் ‘முரசு’ எனும் பெயா், பட்டியலில் 28-ஆவது இடத்தில் உள்ளது.இது தவிா்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட ‘நீா்’ எனும் பெயரும் 93-ஆவதாக இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும் என்று வானிலைத் துறையின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக நியமனம்
ஐ.நா-வில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியாற்றி வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னையை சேர்ந்த IAS அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியில் இருந்து வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றார்.
ஆரோக்கிய சேது செயலி – கட்டாயம் பதிவிறக்கம்
`ஆரோக்கிய சேது’ (Aarogya Setu) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தச் செயலியானது இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும்தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (‘National Disaster Management Authority’-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செயலியில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 11 மொழிகள் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அவரவர் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செயலி, GPS மற்றும் Bluetooth-ன் சேவையைக் கொண்டு செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.
ஆரோக்கிய சேது செயலியின் சிறப்பு :
- கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நபர் நமக்கு அருகில் இருந்தால், “ஆரோக்கிய சேது” நம்மை எச்சரிக்கை செய்யும் என்பதே இச்செயலியின் தனித்தன்மையாகும்.
- நம்முடைய பெயர், தொடர்பு எண் போன்ற எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் மத்திய அரசை தவிர வேறு யாரும் அறிய இயலாது என்பது இச்செயலியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
- வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தெரிந்துகொள்ளலாம்.
- இச்செயலியை சோதனை முயற்சியாக கொரோனா கவச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது “ஆரோக்கிய சேது” என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
- GPRS மூலம் இயங்கும் இச்செயலி கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு செயல்படும். இத்தொற்று பாதிப்புள்ள இடத்தின் தூரத்தையும் இதன் மூலம் அறியலாம்.
TNPSC Group 4 Exam Video Course
For TNPSC Video Course & Test Batch Call : 8681859181
Check All Month Current Affairs
Download May 1st Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |