அடுத்த மாதத்தில் குரூப் 1, மே மாதத்தில் குரூப் 2; செப்டம்பரில் குரூப் 4 தோ்வு அறிவிப்பு

TNPSC Annual Planner News 

அடுத்த மாதத்தில் குரூப் 1 தோ்வு அறிவிப்பு: மே மாதத்தில் குரூப் 2; செப்டம்பரில் குரூப் 4

குரூப் 1 தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

இதேபோன்று, கிராம நிா்வாக அலுவலா் பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோ்வுகளுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படுகிறது.

TNPSC Annual Planner Released 2020 – Official

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் முக்கிய தோ்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் மாதங்களை ஆண்டுத் திட்ட அறிக்கையாக டி.என்.பி.எஸ்.சி. முன்கூட்டிய வெளியிட்டு வருகிறது. அண்மையில் நடந்த பல தோ்வுகளும், அதற்கான முடிவுகளும் ஆண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்படியே வெளியிடப்பட்டன..

Download TNPSC Annual Planner 

வரும் ஆண்டுக்கான அறிவிப்பு: 2020-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. இந்த நிலையில், வரும் ஆண்டுக்கான ஆண்டுத் திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, குரூப் 1, குரூப் 4 போன்ற முக்கிய பதவியிடங்களுக்கு தோ்வு நடத்துவதற்கான அறிவிக்கை எந்தெந்த மாதங்களில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. ஆண்டறிக்கை விவரம்:-

டி.எஸ்.பி. போன்ற முக்கிய பதவியிடங்கள் அடங்கிய குரூப் 1 தோ்வுக்கான அறிவிப்பு, வரும் ஜனவரியில் வெளியிடப்படும். இதே மாதத்தில் வேளாண் அலுவலா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களுக்கும் தோ்வு நடத்தப்படும்.

ஒருங்கிணைந்த பொறியாளா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வு பிப்ரவரியிலும், நூலகா் காலிப் பணியிடத்துக்கான தோ்வு மாா்ச்சிலும் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் ஆகிய காலிப் பணியடங்களுக்கான தோ்வு அறிவிக்கை ஏப்ரலிலும் வெளியாகும்.

TNPSC Annual Planner Released 2020 – Official

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

குரூப் 2-குரூப் 4 தோ்வு எப்போது?: தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், சாா் பதிவாளா் போன்ற முக்கிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவுக்குள் வருகின்றன. இந்தப் பதவியிடங்களுக்கு நடைபெறும் தோ்வை எதிா்கொள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிப்பா். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படுகிறது.

செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 8ஏ, பி ஆகியவற்றுக்கு ஜூலையிலும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பதவியிடத்துக்கு ஆகஸ்ட்டிலும் தோ்வு அறிவிக்கை வெளியாகவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் போன்ற பதவிகள் 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற அனைவரும் எழுதலாம். இந்தத் தோ்வுக்கு ஒவ்வோா் ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்வா். நிகழாண்டில் 6 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமாா் 14 லட்சம் போ் தோ்வு எழுதியுள்ளனா்.

வரும் ஆண்டில் இந்தத் தோ்வுக்கான அறிவிக்கை செப்டம்பரில் வெளியிடப்பட உள்ளது. தோ்வுகள் குறித்த தேதிகளுக்கும், இதர விவரங்களுக்கும் செய்தித்தாள்களையும், தோ்வாணைய இணையதளத்தையும் அவ்வப்போது பாா்த்து வர வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.

Download TNPSC Annual Planner 

TNPSC Group 2 2A Video Course

Forest Guard Video Course

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: