Current Affairs

22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி

22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி   சா்வதேச போட்டிகள் எப்போதும் சவால் மிக்கது. அவற்றில் கிடைக்கும் பதக்கம் பெருமைக்குறியது. அதில் வெல்லும் தங்கம் தனித்துவமிக்கது.   சமீபத்தில் இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 22 தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறது. சிறப்பு என்னவென்றால், இதுவரையிலான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை தற்போது 203-ஐ எட்டியிருக்கிறது. போட்டியில், பாட்மின்டன்…

14th Vice President of India and Chairman of Rajya Sabha

14th Vice President of India and Chairman of Rajya Sabha இந்தியாவின் 14 வது குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக திரு ஜக்தீப் தன்கர் இன்று (11.08.2022) பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல வழக்கறிஞரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான திரு தங்கருக்கு, குடியரத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்கு முன்னதாக, திரு…

49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்

49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் வரும் 27-ம் தேதி பதவியேற்பார். 74 நாட்கள் மட்டுமே இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு-UNIT 8

TNPSC UNIT 8 ஆதிச்சநல்லூரில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு: அகழாய்வில் வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்தன ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழியில் காணப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் மற்றும் வெண்கல, இரும்பு பொருட்கள்.

கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரம்

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி செல்கிறது. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விவரங்கள்படி, 2020-21 நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்ந்துள்ளது.

‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இந்திய நிறுவனங்களின் இடம்

‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இந்திய நிறுவனங்களின் இடம் உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலில் எல்ஐசி அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபார்ச்சூன் இதழ், ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அடிப்படையில் உலகின் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். 2022 ஆண்டுக்கான ‘ஃபார்ச்சூன் குளோபல் 500’ பட்டியல் சமீபத்தில் வெளியானது. முதன்முறையாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சதுப்புநிலங்கள் ஏன் அவசியம்?

சதுப்புநிலங்கள் ஏன் அவசியம்?   இந்தியாவில் புதிதாக 15 சதுப்புநிலங்களுக்கு உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம், 64 ராம்சர் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரே தெற்காசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட 15 ராம்சர் சதுப்புநிலங்களில் 9 தமிழ்நாட்டில் அமைந்துள்ளன என்பது சதுப்புநிலங்களைக் காக்க தமிழக அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு மகுடமாகும். தற்போது அறிவிக்கப்பட்ட ஒன்பதுடன், கோடியக்கரை…

விடுதலைக்குப் பின் கல்வி -UNIT 9

விடுதலைக்குப் பின் கல்வி -UNIT 9   நாடு விடுதலை அடைந்த 1947-ல் இந்தியாவின் எழுத்தறிவு 12% ஆக இருந்தது (அன்றைய மதராஸ் மாகாணம் – 14%); 100 இந்தியர்களில் 12 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் பொருள். இன்று அது 77.7% ஆக உயர்ந்துள்ளது (தமிழகம் 82.9%). 1948-ல் பிரதமர் நேரு ‘அகில இந்தியக் கல்வி மாநாட்’டைக் கூட்டி, ‘நாட்டின் வளர்ச்சி நமது கல்வியில் ஏற்படும்…

இஸ்ரோவின் புதிய முயற்சி SSLV

SSLV-D1/EOS-02 Mission   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வழக்கமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டன.

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’ கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் பெண்கள் போராட்டங்கள்

பெண்களின் அரசியல் பங்கேற்பு, பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் l சபரிமலை நுழைவு போராட்டம் மாதவிடாயைக் காரணம் காட்டி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கேரளத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலுக்குள் செல்ல இருபாலினத்தவருக்கும் உரிமை உண்டு என்கிற அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் செல்ல பெண்களையும் அனுமதிக்கும்படி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என 2018இல் உச்ச…

பெண்களுக்கான சமூக நலச்சட்டங்கள்

சட்டங்கள் இந்து திருமணச் சட்டம் 1955: l திருமணம் என்பது சாத்திரப் படி உடைக்கக்கூடாத பந்தம் என்றிருந்த நிலையில் விருப்ப மில்லாத திருமண வாழ்விலிருந்து பெண்கள் விவாகரத்து பெறவும், கணவனிடமிருந்து வாழ்க்கைக் கான பொருளுதவி பெறவும் குழந்தையைத் தத்தெடுக்கவும் உரிமை வழங்கும் சட்டம்.

ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்வு

ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்வு இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டில் மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop