Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(13 & 14 oct 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 13-14 Oct , 2019
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 13 – சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்
- ஆபத்து-விழிப்புணர்வு மற்றும் பேரழிவு குறைப்பு ஆகியவற்றின் உலகளாவிய கலாச்சாரத்தை ஊக்குவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அழைப்பு விடுத்ததை அடுத்து, 1989 ல் பேரழிவு அபாயங்களைக் குறைப்பதற்கான சர்வதேச நாள் தொடங்கப்பட்டது.
- ஒவ்வொரு அக்டோபர் 13 ஆம் தேதியும் நடைபெறும் இந்த தினத்தில் உலகெங்கிலும் உள்ள மக்களும் சமூகங்களும் எவ்வாறு பேரழிவுகளுக்கு ஆட்படுவதைக் குறைக்கிறார்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களில் தங்கியிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
2019 தீம்:- Reduce disaster damage to critical infrastructure and disruption of basic services
மாநாடு
SARAS ஆஜீவிகா மேளா 2019
- கிராமிய கைவினைஞர் சங்கத்தின் பொருள்கள் விற்பனைக்கான 2019 ஆம் ஆண்டின் ஆஜீவிகா மேளாவானது புது தில்லியில் உள்ள இந்தியா கேட் என்ற பகுதியில் நடந்து வருகின்றது.
- இந்த மேளா ஆனது தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (Deendayal Antyodaya Yojana-National Rural Livelihoods Mission/DAY-NRLM) ஒரு முன்முயற்சியாகும்.
- இது DAY-NRLMன் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது அவர்களின் திறன்களைக் வெளிக்காட்டவும், அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யவும் மற்றும் அவர்களை மொத்தமாக பொருள்கள் வாங்குபவர்களுடன் இணைக்கவும் உதவும்.
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக மாநாடு
- மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் புது தில்லியில் சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் மத்திய மன்றத்தின் 13வது மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
இதன் நோக்கம் : தேசிய சுகாதார முன்னுரிமைகள் மீது ஒரு கருத்தொற்றுமையை உருவாக்குதல்
அறிவியல் செய்திகள்
சர்க்கரைப் பொருள்கள் கொண்ட பானங்கள் விளம்பரத்திற்கு தடை
- சிங்கப்பூரில் நீரிழிவு நோய் மிக அதிகமாக உள்ளது.இதனால் வேகமாக வளர்ந்து வரும் நாட்டில் மக்களுக்கு ஏற்படும் நோய்களைக் குறைக்கும் முயற்சியில் மிக அதிக சர்க்கரை பொருள்களைக் கொண்டு அடைக்கப்பட்ட பானங்களுக்கான விளம்பரங்களுக்கு மொத்தமாக தடை விதிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
- மிக அதிக அளவுள்ள சர்க்கரைப் பொருள்களைக் கொண்ட பானங்களுக்கான விளம்பரங்களுக்குத் தடையை அமல்படுத்திய உலகின் முதலாவது நாடு சிங்கப்பூர் ஆகும்.
முதல் செயற்கைக் கோள் சேவை விண்கலம்
- கஜகஸ்தானில் உள்ள விண்கலங்களுக்காக ரஷ்யாவின் ஏவுதளத்திலிருந்து செலுத்தப் பட்ட ரஷ்ய புரோட்டான் ராக்கெட்டின் மூலமாக “MEV-1” (திட்டம் நீட்டிப்பு வாகனம் -1) என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக் கோள் சேவை விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- வணிக விண்வெளித் திறன்களுக்கான ஒத்துழைப்புகள் எனப்படும் நாசா கூட்டாண்மை அமைப்புடன் இணைந்து அமெரிக்காவின் நார்த்ரோப் க்ரூமன் என்ற அமைப்பு இதை உருவாக்கியுள்ளது.
- குறைவான எரிபொருளால் இயங்கும் மற்றும் தனக்குத் தேவையான எரிபொருளைத் தானே நிரப்புகின்ற வகையில் செயல்படும் இந்த MEV விண்கலம் விண்வெளியில் உள்ள எந்த செயற்கைக் கோளையும் கண்டுபிடிப்பதிலும் அவற்றை இணைப்பதிலும் பயன்படுகிறது.
- எனவே, தற்போது பூமியைச் சுற்றியுள்ள புவிசார் சுற்றுப்பாதையில் இருக்கும் வணிக செயற்கைக் கோள்களின் ஆயுளை நீட்டிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெகிழிப் பொருட்களை உண்ணும் பாக்டீரியா
- கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிவ் நாடார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, இரண்டு ‘நெகிழிப் பொருட்களை உண்ணும்’ பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளது.
- இந்த பாக்டீரிய விகாரங்கள் ஆனது எக்சிகுயோபாக்டீரியம் சிபிரிகம் திரிபு டிஆர் 11 மற்றும் எக்சிகோபாக்டீரியம் அன்டே திரிபு டிஆர் 14 எனப் பெயர் கொண்டுள்ளது.
- ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களான தூக்கியெறியக் கூடிய குழாய்கள், தட்டுகள், கரண்டிகள், பொம்மைகள், பொதிகட்டும் பொருட்கள் போன்றவற்றில் முக்கிய அங்கமாக இருக்கும் பாலிஸ்டிரீனைச் சிதைப்பதற்கான திரிபுகளுக்கு இந்த பாக்டீரியாக்களின் திரிபுகள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
விருதுகள்
PII-ICRC விருது
- “மனிதாபிமானப் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
- இந்த விருது வழங்கும் விழாவானது PII மற்றும் ICRCன் புது தில்லிப் பிராந்திய தூதுக் குழு ஆகியவற்றால் இணைந்து புது தில்லியில் நடத்தப்பட்டது.
- மனிதாபிமானம் தொடர்பான சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த புகைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பத்திரிக்கை நிறுவனம் (Press Institute of India – PII) – சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு (International Committee of the Red Cross – ICRC) ஆகியவற்றின் 13வது பதிப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது | பெயர் | கட்டுரை/புகைப்படம் |
---|---|---|
சிறந்த கட்டுரை | ஊர்வசி சர்க்கார் | ‘எங்கள் வீடுகள் மறைந்து வருகின்றன. யாரும் கவலைப் படுவதில்லை’ - PARI (People’s Archive of Rural India) இணையதளத்தில் வெளியிடப்பட்டது |
சிறந்த புகைப்படம் | ஜி.சிவபிரசாத் (தி மாத்ருபூமி) & ரிஜோ ஜோசப் (மலையாள மனோரமா) | இதயத்திற்கு நெருக்கமானது’ ‘உயிருக்காக ஓடுகின்றது’ |
சுகாதார மன்ற விருது – 2019
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகளாவிய அமைப்பு (Global Organisation of People of Indian Origin – GOPIO), சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பங்காற்றியவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான சுகாதார மன்ற விருதினை வழங்கியது.
- உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 3 இந்திய அமெரிக்கர்களுக்கு சுகாதார மன்ற விருது வழங்கப்பட்டது.அவர்கள்
பெயர் | விருது வழங்கப்பட்ட பிரிவு |
---|---|
ராகுல் சுக்லா | சமீபத்திய மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி. |
ஹிதேஷ் பட் | சுகாதார தொழில்நுட்ப வகை. |
எச் ஆர் ஷா | இந்திய வம்சாவளியினர் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவித்தல். |
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- oct – 13 to 14]
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.