Daily Current Affairs in Tamil October 15 to 16 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(15 & 16 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : 15-16 Oct , 2019

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 15 – சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

 • முதல் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் 15 அக்டோபர் 2008 அன்று அனுசரிக்கப்பட்டது.
 •  2007 டிசம்பர் 18 ஆம் தேதி 62/136 தீர்மானத்தில் பொதுச் சபையால் நிறுவப்பட்ட இந்த புதிய சர்வதேச நாள், “விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதில், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதில் பழங்குடி பெண்கள் உட்பட கிராமப்புற பெண்களின் முக்கிய பங்கு மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

2019 தீம் :- Rural Women and Girls Building Climate Resilience 

அக்டோபர் 16 – உலக உணவு தினம்

 • உலக உணவு தினம் என்பது உலகளாவிய பசியைக் கையாள அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நடவடிக்கை நாள். 
 • உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடி, உலகளாவிய பசியை நம் வாழ்நாளில் இருந்து ஒழிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அறிவிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது .

2019 தீம் :- Our Actions Are Our Future Healthy Diets for A #ZeroHunger World.”

நியமனங்கள்

சட்டத் துறை செயலாளர் 

 • அனூப் குமார் மெண்டிராட்டா என்பவர் புது தில்லியில் உள்ள கர்கார்டூமா நீதிமன்றங்களில் வடகிழக்கு மாவட்டத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகத் தற்பொழுது பணியாற்றுக் கொண்டிருக்கின்றார்.
 • இவர் 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 வரை ஒப்பந்த அடிப்படையில் மத்திய சட்டத் துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
 • செயலாளர் (சட்ட விவகாரங்கள் மற்றும் சட்டமன்றத் துறை) பதவிகள் இந்தியச் சட்டச்  சேவைப் பணி அதிகாரிகளால் நிரப்பப்படுகின்றன.

கண் பார்வையற்ற முதலாவது  இந்திய ஆட்சிப் பணி அதிகாரி

 • இந்தியாவின் முதலாவது கண் பார்வையற்ற பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரஞ்சல் பாட்டீல் என்பவர் திருவனந்தபுரத்தின் துணை ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 • 2018 ஆம் ஆண்டில் அவர் இந்திய ஆட்சிப் பணியில் நியமிக்கப்பட்ட பின்னர் இது அவருக்குக் கிடைத்த இரண்டாவது பணியாகும்.
 • 2008 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்த கிருஷ்ண கோபால் திவாரி என்பவர் கண் பார்வையற்ற முதலாவது இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.

தரக்குறியீடு

உலகளாவிய பட்டினிக் குறியீடு

 • உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் (Global Hunger Index – GHI)  மொத்தம் 117 நாடுகள் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.இதில் இந்தியா 2010 ஆம் ஆண்டில் 95வது இடத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 102வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
 • 2018 ஆம் ஆண்டு முதல், GHI ஆனது வெல்த்ஹங்கர்ஹெல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைட் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் (International Food Policy Research Institute – IFPRI) வெளியிடப்படுகின்ற ஒரு கூட்டுத் திட்டமாகும்.
 • இந்தக் குறியீட்டில் தெற்காசிய நாடுகளிடையே மிகக் குறைந்த தரவரிசையில் இந்தியா உள்ளது. இந்தக் குறியீட்டில் பிற பிரிக்ஸ் நாடுகளுக்குப் பின்னால் இந்தியா இருக்கின்றது.

மாநாடு

சி40 உலக மாநகராட்சித் தலைவர்கள் உச்சி மாநாடு

 • சி40 என்பது போக்குவரத்து, எரிசக்தி பயன்பாடு மற்றும் நுகர்வு ஆகியவற்றில் நிலையான மாற்றங்களைச் செய்வதில் ஒன்றிணைந்த முக்கிய சர்வதேச நகரங்களின் குழு ஆகும்.
 • டென்மார்க்கின் கோபன்ஹேகனில் 2019 ஆம் ஆண்டின் சி40 உலக மாநகராட்சித் தலைவர்கள் உச்சி மாநாட்டின் 7வது பதிப்பானது நடத்தப்பட்டது.
 • பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதும் காலநிலைப் பின்னடைவை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
 • நகரத்தின் பசுமைப் போக்குவரத்து இயக்கத்திற்காக கொல்கத்தாவானது மதிப்பு மிக்க “6வது சி40 நகரங்கள் ப்ளூம்பெர்க் தொண்டு விருதுகள் 2019” என்ற விருதைப் பெற்றுள்ளது.

பயிற்சி

வஜ்ரா பிரஹார் 2019 

 • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘வஜ்ரா பிரஹார்’ என்ற பயிற்சியானது வாஷிங்டனில் தொடங்கியது.
 • இந்தப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

தர்மா கார்டியன் 2019

 • தர்மா கார்டியன் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு வருடாந்திரப் பயிற்சியாகும்.
 • இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2வது கூட்டு இராணுவப் பயிற்சியான ‘தர்மா கார்டியன் 2019’ என்ற பயிற்சியானது மிசோரமில் நடத்தப்பட இருக்கின்றது.
 • இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேம்படுத்துவதோடு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடவும் உதவும்.

விருதுகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

 • பொருளாதார அறிவியலில் நோபல் நினைவு பரிசானது அலுவல்பூர்வமாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்று அறியப்படுகின்றது.
 • ஆல்பிரட் நோபலின் நினைவாக 2019 ஆம் ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான  ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசானது அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
 • “உலகளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட சோதனை அணுகுமுறைக்காக” அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

யுனெஸ்கோவின் ஆசியா – பசிபிக் விருது

 • பாரம்பரிய அமைப்புகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக மீட்டெடுத்துப் பாதுகாக்கும் தனி நபர்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கின்றது.
 • மும்பையின் பாரம்பரியப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக, மூன்று நகரங்களில் உள்ள அடையாளச் சின்னங்கள் இந்த ஆண்டின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசியா – பசிபிக் விருதுகளை வென்றுள்ளன.
 • அவை ஃப்ளோரா பவுண்டெயின், பைக்குல்லாவில் உள்ள குளோரியா தேவாலயம் மற்றும் கலா கோதாவில் உள்ள கெனெசெத் எலியாஹூ ஜெப ஆலயம் ஆகியனவாகும்.
 • அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் உள்ள விக்ரம் சாராபாய் நூலகமானது அதன் மறுசீரமைப்புக் கட்டிடக் கலைஞரான பிருந்தாவிற்காக “தனித்துவ விருதினைப்” பெற்றுள்ளது.

புக்கர் பரிசு

 • கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் மற்றும் பிரிட்டிஷ் எழுத்தாளரான பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் புக்கர் பரிசின் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 •  இது 1969 ஆம் ஆண்டு முதல் மேன் குழுமத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

பெர்னார்டின் எவரிஸ்டோ

புத்தகம் : சிறுமி, பெண், மற்றவை (Girl, Woman, Other).

 • புக்கர் பரிசை வென்ற ஒரே கருப்பினப்  பெண்மணி எவரிஸ்டோ ஆவார். இவருடைய வயது 60 ஆகும்.
 • இவரது புத்தகமானது நவீன கால ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின் பல்வேறு போராட்டங்களையும் ஆராய்கின்றது.

மார்கரெட் அட்வுட்

புத்தகம் : நற்செய்தி (The Testament).

 • 79 வயதான அட்வுட் என்பவர் தனது வாழ்க்கையின் இரண்டாவது புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
 • “தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்” (1985) என்ற படைப்பிற்காக இவர் ஏற்கெனவே புக்கர் விருதினைப் பெற்றுள்ளார்.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc


Download Daily Current Affairs [2019- oct – 15 to 16]

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: