Daily Current Affairs in Tamil October 26 to 31 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(26 & 31 Oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : 26-31 Oct , 2019

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

முக்கியமான நாட்கள்

 

ஒளிக் கட்புல பாரம்பரிய தினத்திற்கான உலக தினம் – அக்டோபர் 27 

  • யுனெஸ்கோவின் பொது மாநாடு 2005 ஆம் ஆண்டில் ஒளிக் கட்புல பாரம்பரியத்திற்கான உலக தினத்தை நினைவு கூருவதற்கு ஒப்புதல் அளித்தது.
  • பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளிக் கட்புல ஆவணங்களின் (திரைப்படங்கள், ஒலி மற்றும் காணொளிப் பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) முக்கியத்துவம் மற்றும் அதனைப் பாதுகாத்தலில் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் “ஒலி மற்றும் படங்கள் மூலம் கடந்த காலத்தைத்  தொடர்புபடுத்துங்கள்” என்பதாகும்.

ஊழல் விழிப்புணர்வு வாரம் – அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை

  • அக்டோபர் மாதத்தின் கடைசி வாரமானது ஊழல் விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission – CVC) ஆதரவின் கீழ் அனுசரிக்கப் படுகின்றது.
  • இவ்வருடம் அந்த வாரமானது அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 ஆகிய காலத்தில் வருகின்றது.
  • இந்த அனுசரிப்பு பொதுமக்களிடையே ஊழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதோடு இதர பங்குதாரர்களையும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிட ஊக்குவிக்கின்றது.
  • இந்த அனுசரிப்பின் கருத்துரு “நேர்மை என்பது வாழ்வியலுக்கான ஒரு வழியாகும்”.

அக்டோபர் 27 – சர்வதேச ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம்

  • யுனெஸ்கோவின் பொது மாநாடு 2005 ஆம் ஆண்டில் ஆடியோ விஷுவல் பாரம்பரியத்திற்கான ஒரு உலக தினத்தை நினைவுகூருவதற்கு ஒப்புதல் அளித்தது, வருங்கால சந்ததியினருக்கான முக்கியமான ஆடியோ விஷுவல் பொருட்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது .

அக்டோபர் 28 – சர்வதேச அனிமேஷன் தினம்

  • அக்டோபர் 28 அன்று ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அனிமேஷன் தினம் கொண்டாடப்படுகிறது.
  • அனிமேஷன் திரைப்படங்கள் உட்பட அனிமேஷன் கலைக்கு பின்னால் உழைக்கும் கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அங்கீகரிப்பதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 
  • 2002 ஆம் ஆண்டில் சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கத்தால் இது உருவாக்கப்பட்டது.

அக்டோபர் 29 – சர்வதேச இணைய தினம்

  • சர்வதேச இணைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது, 2005 ஆம் ஆண்டு முதல் தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான நாளை நினைவுகூரும் வகையில் சர்வதேச இணைய தினம் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.
  • இது முதல் மின்னணு செய்தி 1969 இல் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது.

அக்டோபர் 29 – உலக சொரியாஸிஸ் தினம்

  • தோல் ஆலர்ஜி மற்றும் சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வருடாந்திர நாளாக உலக சொரியாஸிஸ் தினத்தை IFPA வழங்குகிறது. இந்த தினம்  அக்டோபர் 29 அன்று கொண்டாடப்படுகிறது.
  • உலக சொரியாஸிஸ் தினத்தன்று, IFPA இன் உறுப்பினர் சங்கங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் இந்த சொரியாஸிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றனர்.

அக்டோபர் 29 – உலக பக்கவாத தினம்

  • அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது.இது பக்கவாதத்தின் தீவிர தன்மை மற்றும் உயர்  விகிதங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • இது பக்கவாதத்தை தடுப்பது மற்றும் அதன் சிகிச்சையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.மேலும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பையும் ஆதரவையும் உறுதி செய்கிறது.
  • இந்த வருடாந்திர நிகழ்வை 2006 ஆம் ஆண்டில் உலக பக்கவாதம் அமைப்பு (WSO) தொடங்கியது மற்றும் 2010 இல் பக்கவாதத்தை  ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது

அக்டோபர் 31 – உலக நகரங்கள் தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அக்டோபர் 31 ஆம் தேதயை 68/239 தீர்மானத்தின் மூலம் உலக நகரங்கள் தினமாக நியமித்துள்ளது. உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை பெரிதும் ஊக்குவிக்கும், வாய்ப்புகளை சந்திப்பதில் மற்றும் நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையே ஒத்துழைப்பை முன்னிறுத்துவதோடு, உலகெங்கிலும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு பங்களிப்பையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது .

2019 தீம் : Changing the world: innovations and better life for future generations

தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31

  • தேசிய ஒற்றுமை தினமானது (ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்) இந்திய அரசால் 2014 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • லோக் புருஷ் என்றும் அறியப் படுகின்ற இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் ஜாவர்பாய் படேல் 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று பிறந்தார்.
  • சர்தார் வல்லபாய் படேல் இந்தியக் குடியரசின் நிறுவனத் தந்தை என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றார்.
  • ஏனென்றால், பிரிவினைக்குப் பின்னர் சுதந்திர மாகாணங்களை ஒருங்கிணைந்த இந்தியாவில் இணைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.
  • ஒருங்கிணைந்த இந்தியாவை நோக்கிய அவரது முயற்சிகளுக்காக, சர்தார் படேலின் பிறந்த நாள் ஆனது இப்போது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப் படுகின்றது. இத்தினமானது ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் என்றும் அழைக்கப் படுகின்றது..
  • இந்த நாளைக் கொண்டாட, ‘இந்தியாவின் ஒருங்கிணைப்பாளரான’ சர்தார் வல்லபாய் படேல் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமைக்கான சிலையின் மூலம் கௌரவிக்கப் பட்டார்.
  • சர்தார் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள இந்தச் சிலையானது சுமார் 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டது.

உலக நகரங்கள் தினம் – அக்டோபர் 31

  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 31 ஆம் தேதியை உலக நகரங்கள் தினமாக அறிவித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “உலகை மாற்றுவது: எதிர்கால தலைமுறையினருக்காக புதுமைகள் மற்றும் சிறந்த வாழ்வு”  என்பதாகும்.
  • உலக நகரங்கள் தினத்தின் பொதுவான கருப்பொருள் “சிறந்த நகரம், சிறந்த வாழ்வு” என்பதாகும்.
  • உலகளாவிய அளவில் ஒரு நிலையான மற்றும் சமூக உள்ளடக்கத்தில் நகரமயமாக்கலின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

உலக சிக்கன நாள்/உலக சேமிப்பு நாள் – அக்டோபர் 31

  • 1924 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச சிக்கன காங்கிரஸ் மாநாடானது இத்தாலியில் உள்ள மிலனில் நடத்தப்பட்டது.
  • முதலாவது உலக சிக்கன தினமானது 1925 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மறைந்ததன் காரணமாக இந்தியாவில் இந்தத் தினமானது அக்டோபர் 30 அன்று கொண்டாடப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று உலக சிக்கன தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த தினமானது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் நாடுகளின் சேமிப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மக்களிடையே சேமிக்கும் பழக்கமானது மக்களுக்கும் நாட்டிற்கும் தனிச் சுதந்திரத்தை வழங்குகின்றது.

மாநில செய்திகள்

 

ஒப்பந்தப் பண்ணையம் மீதான சட்டம்

  • ஒப்பந்தப் பண்ணையம் மீதான சட்டத்தை இயற்றிய நாட்டின் முதலாவது மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.இது விவசாயிகளை பாதுகாப்பதற்காக ‘தமிழக வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் – 2019’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் & சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) மீதான சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை வழங்கினார்.
  • இந்தச் சட்டமானது பெரு விளைச்சல் காலங்களில் அல்லது சந்தை விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் காலங்களில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க இருக்கின்றது.

சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கம்

  • ஜம்மு-காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் உள்ள செனானி நஷ்ரி சுரங்கப் பாதையை மறுபெயரிடுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
  • இதற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mookerjee (SPM) Tunnel) சுரங்கம் என்று பெயர் மாற்றப்பட உள்ளது.
  • 9 கி. மீ தொலைவு உள்ள இந்த சுரங்கப் பாதையானது நாட்டின் மிக நீளமான அதிநவீன சுரங்கப் பாதையாகும்.

குறிப்பு

  • சியாமா பிரசாத் முகர்ஜி (1901 – 1953) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் தனிச் சுதந்திர  அமைச்சரவையில் தொழில் மற்றும் வழங்கல் அமைச்சராக பணியாற்றினார்.

 

விருதுகள்

 

கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்புக்கான யுனெஸ்கோ அமைப்பின் ஆசியா-பசிபிக் விருதுகள் 2019

  • கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்பு 2019 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ ஆசியா-பசிபிக் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
  • எந்தவொரு தனிப்பட்ட அமைப்பினாலும் அல்லது எந்தவொரு தனியார் துறை நிறுவனத்தினாலும் மேற்கொள்ளப்படும் கலாச்சாரப் பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இவை 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 4 வெவ்வேறு பிரிவுகளுக்காக வழங்கப்பட்டன.

பின்வரும் பிரிவுகளில் இந்தியா 4 விருதுகளை வென்றுள்ளது.

வகைவிருது
தனித்தன்மைக்கான விருதுவிக்ரம் சாராபாய் நூலகம், இந்திய மேலாண்மை நிறுவனம், (அகமதாபாத்) இந்தியா
சிறப்புத் தகுதி விருதுஅவர் லேடி ஆஃப் குளோரி சர்ச், மும்பை
கெனெசெத் எலியாஹூ ஜெப ஆலயம், மும்பை
மாண்புமிகு குறிப்புஃப்ளோரா நீரூற்று, மும்பை
பாரம்பரிய சூழல்களில் புதிய வடிவமைப்புயாருமில்லை

மிகச் சிறந்த மூத்த குடிமகன் விருது

  • இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு சட்டத் துறை வல்லுநர், அறிஞர் மற்றும் முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரான கே.பராசரனுக்கு “மிகச் சிறந்த மூத்த குடிமகன்” என்ற ஒரு விருதை புது தில்லியில் வழங்கினார்.
  • 1976 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் முன்னாள் பிரதமர்களான ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கீழ் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

 

திட்டம்

GOAL திட்டம்

  • “சமுதாயத்தின் தலைவர்களாக நிகழ்தளத்திற்குச் செல்பவர்கள்” (Going Online as Leaders – GOAL) என்பது ஏழை இளம் பழங்குடிப் பெண்களுக்காக முகநூலால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • இது இந்தியா முழுவதிலும் உள்ள பழங்குடிச் சிறுமிகளை கிராம அளவில் தங்கள் சமூகங்களின் டிஜிட்டல் இளம் தலைவர்களாக மாற்ற அவர்களை ஊக்குவித்தல், வழிகாட்டுதல் மற்றும் புத்துணர்ச்சி ஊட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய மந்திரி கன்யா விவாஹ யோஜனா – மத்தியப் பிரதேசம்

  • மத்தியப் பிரதேச அரசு ‘முக்கிய மந்திரி கன்யா விவாஹ/ நிக்கா யோஜ்னா’ என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த அரசுத் திட்டத்தின் படி, மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மணப்பெண்கள் திருமணத்திற்கு முன்பு அவர்களது மணமகனின் வீட்டில் கழிப்பறை இருப்பதை அவர்கள் நிரூபித்தால் அந்த மணப்பெண்கள் ரூ 51,000 நிதியுதவியைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
  • அதற்காக, மணமகன் தனது வீட்டில் உள்ள கழிப்பறையில் நிற்கும்படியான ஒரு சுயப் புகைப்படத்தை எடுப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்டப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கன்யா சுமங்கல யோஜனா

  • உத்தரப் பிரதேச அரசு தனது முதன்மைத் திட்டமாக “முக்கிய மந்திரி கன்யா சுமங்கல யோஜனா” எனுத் திட்டத்தைத் துவக்கியது.
  • கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் எங்கெல்லாம் பெண் குழந்தை ஒன்று ஒரு குடும்பத்தில் பிறக்கின்றதோ அங்கெல்லாம் அக்குடும்பத்திற்கு 15000 ரூபாய் நிதியை அளிக்கும்.
  • இந்த நிதியானது அப்பெண் குழந்தையின் “பிறப்பு, தடுப்பூசிக் காலம், முதலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு  மற்றும் பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான அனுமதி” ஆகிய காலக் கட்டங்களில் அந்த பெண் குழந்தையின் குடும்பத்திற்கு படிப்படியான முறையில் அளிக்கப்படும்.
  • பெண் குழந்தையின் பெற்றோர் இத்திட்டத்தின் கீழான பலன்களைப் பெற்றிட அப்பெண் குழந்தையின் சுகாதாரம், கல்வி மற்றும் இதர விவகாரங்களில் சரியான நலனை மேற்கொண்டிட அப்பெற்றோர்களை இயலச் செய்திடும் வகையில் இத்திட்டமானது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

 

தரவரிசை

 

தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பற்றிய அறிக்கை

  • தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இருக்கும் 190 நாடுகளுக்கான, 2020ம் ஆண்டு தரவரிசை பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63வது இடத்தை பிடித்திருக்கிறது. 
  • கட்டுமானத்திற்கு தேவையான அனுமதி வழங்குவதில், 52வது இடத்தில் இருந்து 27வது இடத்திற்கும் , எல்லைகளை தாண்டி செய்யப்படும் வர்த்தகத்தில் 80வது இடத்தில் இருந்து 68வது இடத்திற்கும் இந்தியா முன்னேறியுள்ளது.
  • சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதில், கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியா 13வது இடத்திற்கு கீழ் இறங்கியுள்ளதாகவும், மின்சாரம் வழங்குவதில் 22வது இடத்தில் இருந்து 25வது இடத்திற்கு சரிந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் செய்வதற்கு உகந்த உலகின் முதல் 5 சிறந்த இடங்கள்

  • நியூசிலாந்து (100 இல் 86.8 மதிப்பெண்களுடன்),
  • சிங்கப்பூர் (86.2)
  • ஹாங்காங் தன்னாட்சிப் பகுதி, சீனா (85.3)
  • டென்மார்க் (85.3)
  • கொரியக் குடியரசு (84)

பயிற்சி

 

இந்திய பிரஞ்சு இராணுவப் பயிற்சி

  • இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ‘ராணுவபயிற்சி சக்தி’ தொடர் 2011 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த பயிற்சி இந்தியா மற்றும் பிரான்சில் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.
  • 2019ம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரையில் இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான இருதரப்பு இராணுவப் பயிற்சியான “சக்தி பயிற்சி” நடத்தப்பட இருக்கின்றது.
  • இது இராஜஸ்தானில் மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி வரம்பில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி முனையத்தில் நடத்தப்படும்.
  • இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியானது மித பாலைவன நிலவமைப்பில் மேற்கொள்ளப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும்.

 

தேசிய செய்திகள்

 

ஏக் ஓன்கார் சின்னம்

  • தேசிய விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் குருநானக் தேவின் 550வது பிறந்த தின விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடுவதற்காக தனது போயிங் 787 ட்ரீம்லைனர் என்ற விமானத்தின் வால் பகுதியில் “ஏக் ஓன்கார்” என்ற  சின்னத்தை வரைந்திருக்கின்றது.
  • இந்த விமானம் அக்டோபர் 31ம் தேதியன்று அமிர்தரஸில் இருந்து லண்டன் வரை பறக்கும்.
  • ஏக் ஓன்கார் என்ற சின்னம் சீக்கிய மதத் தத்துவத்தின் மையக்கரு ஆகும்.
  • இதன் அர்த்தம் கடவுள் ஒன்றே என்பதாகும்.

டெக்சாகர்

  • டெக்சாகர் என்பது இந்தியாவின் இணைய தொழில்நுட்ப திறன்களின் ஒரு சக்திவாய்ந்த தேசியக் களஞ்சியமாகும்.
  • இது இந்திய இணையப் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தால் தொடங்கப்பட்டது.
  • இந்திய இணையப் பாதுகாப்பு ஆணையம் என்பது இந்தியாவில் தரவுப் பாதுகாப்பு குறித்து  நாஸ்காம் அமைப்பால் அமைக்கப்பட்ட, லாப நோக்கற்ற, ஒரு தொழில்சார் அமைப்பு ஆகும்.

 

புத்தகம்

 ‘அராஜகம்’  புத்தகம்

  • பிரபல வரலாற்றாசிரியரான வில்லியம் டால்ரிம்பிளின் புதிய புத்தகமான ‘அராஜகம்’ என்ற ஒரு புத்தகம் (The Anarchy) சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
  • ‘அராஜகம்: ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம், பெருநிறுவன வன்முறை மற்றும் ஒரு பேரரசின் கொள்ளை’ என்ற தலைப்பைக் கொண்ட இந்த புத்தகமானது கிழக்கிந்திய நிறுவனத்தின் கதையையும் இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டுவதன் மூலம் அதன் லாபத்தை எவ்வாறு அது வளர்த்தது என்பதையும் சொல்கின்றது.

விஸ்வநாதன் ஆனந்த்தின் புத்தகம்

  • புகழ்பெற்ற செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் எழுச்சியூட்டும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
  • இந்தப் புத்தகத்திற்கு “மைண்ட் மாஸ்டர்: ஒரு சாம்பியனின் வாழ்க்கையிலிருந்து வெற்றிப் பாடங்களைக் கற்றுக் கொள்வது” என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc


Download Daily Current Affairs [2019- Oct – 26 to 31]

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us