Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(May 14th to 18th – Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 14th to 18th Current Affairs.
உலக குடும்ப தினம் International Day of Families
- உலக குடும்ப தினம் 2020 மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
- 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சர்வதேச ஒளி தினம் – மே 15
சிக்கிம் தினம்- மே 16
- சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி.
- சிக்கிம் மாநிலமானது மே 16 அன்று அதன் 45-வது மாநில தினத்தை கொண்டாடியது.
உலக தகவல் சமூக தினம் (World Information Society Day) – மே 17
- தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது.இத்தினமானது இதற்கு முன்பு “உலக தொலைத் தொடர்பு” தினமாக அறியப்பட்டது. . இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.
- இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகத் தொலைத்தொடர்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டின் கருத்துரு, “2030ஐ இணைத்தல்: வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளுக்கு வேண்டிய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம்” என்பதாகும்.
உலக உயர் ரத்த அழுத்த தினம் (world hypertension day)- மே 17
உலக சுகாதார அமைப்பானது, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2005-ல் தொடங்கியது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரித்தது.
- 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “உங்களது இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழ்வீர்கள்” என்பதாகும்.
- இரத்த அழுத்தம் இதயம் சுருங்கி விரியும் போது 120 மி.மி ( சிலருக்கு மாறுபடும் என்பதால் 140 வரை பொது என்றும் சொல்கிறார்கள்) இதயம் விரியும் போது 80 மி.மி இருக்க வேண்டும்.
‘சச்சேத்’ ரோந்து கப்பல்
- ‘சச்சேத்’ ரோந்து கப்பலானது கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. நாட்டின் கடற்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ‘சச்சேத்’ ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
- ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்ட புதிய கப்பல்களுடன் சோ்த்து இந்தியக் கடலோரக் காவல்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 150-ஆக உயா்ந்துள்ளது ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டம்:
- மக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளைக் கொண்டு நாட்டின் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற முடியும்.
- 23 மாநிலங்களில் 67 கோடி பயனாளர்களை உள்ளடக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுயசார்பு பாரதம் திட்டம்
- கரோனா ஊரடங்கால் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சுயசார்பு பாரத திட்டத்தின் கீழ், மே மற்றும் ஜுன் மாதத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
- தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக 2 மாதத்துக்கு மொத்தம் 35,734 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்துக்கு முதல்கட்டமாக 1,109 மெட்ரிக் டன் அரிசியை இந்திய உணவுக் கழகம் ம்வழங்கி உள்ளது.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்
மதுரை ரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது
தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் ஈட்டித் தருவதிலும் மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் முதன்மை பெறுவதால் மதுரை ரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது
ஆம்பன்
- வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி உள்ளதால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்தப் புயலுக்கு ஆம்பன் என்றுப் பெயரிடப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒரிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து 1330 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கம் மாநிலம் டிகாவிலிருந்து 1250 கி.மீ தொலைவிலும் புயலாக உருவாகி உள்ளது.
- ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.
- 2-ம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.
உஜ்வாலா திட்டம்
- நாடு முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ்-க்கு எதிராக நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வரும் நிலையில், மக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில், மக்களுக்கு பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது .
- உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- இந்த உஜ்வாலா திட்டம் 2016ம் ஆண்டு மே 1ம் தேதி தொடங்கப்பட்டது.
ரெம்டெசிவைர்(Remdesiver) மருந்து
- அமெரிக்காவின் ஜிலீட் சயன்ஸஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவைர்’ (remdesivir) மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு கழகமான யு.எஸ்.எஃப்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிலும் அதன் உற்பத்திக்காக ஜிலீட் சில நிறுவனங்களுக்கு உரிமம் அளித்துள்ளது,
- ரெம்டெசிவைர் மருந்துகளுக்கான காப்புரிமைக்காக ஜிலீட் நிறுவனம் 2015-ல் விண்ணப்பித்தது, இந்தியா பிப்ரவரி 18, 2020-ல் காப்புரிமை வழங்கியது.
- இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா நிருவனம் அமெரிக்காவின் ஜிலீட் சயன்சஸ் நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- ரெம்டெசிவிர் எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துவதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.11 நாட்களில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும்.
சுயசார்பு பாரதம் திட்டம்
- பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரிலான திட்ட அறிவிப்புகளை பல கட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
- மூன்றாவது தவணையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சம் கோடியில் விவசாயிகளின் நலன், மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கான 11 அம்சத் திட்டத்தை அறிவித்தார்.
- இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தி, மிகப்பெரிய சணல் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி, கரும்பு, பருத்தி, நிலக்கடலை, பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்வளங்களில் இரண்டாவது பெரியது மற்றும் தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் பயன்பாட்டுடன் இயங்கும் ஆரோக்கிய சேது செயலி கரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் பயனாளர்களுக்கு அலெர்ட் அளிக்கும் செயலியாகும்.
ஆரோக்கிய சேது செயலி
- http://www.aarogyasetumitr.in என்ற இணையதளம் ஆரோக்கிய சேது செயலியில் இணைக்கப்பட்டுள்ளது,மொபைல் செயலியான ஆரோக்கிய சேதுவே இந்த மின் மருந்து வணிக இணையதளத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளது.
- தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாதிக்கப்படாத நபர்கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாட்களில் நீக்க முடியும்.
- இதுபோல, பரிசோதனை செய்யப்பட்டவர் கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்ட நபர்கள் 60 நாட்களிலும் தங்களைப் பற்றிய தகவலை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்கி விடலாம். மேலும் 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது.
- ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
உலக சுகாதார மாநாடு
- ஐ.நா. சபையை உருவாக்குவதற்காக 1945ஆம் ஆண்டு ஏப்ரலில், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் உலக சுகாதார அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் விதிகள் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. அந்த தினம்தான் ஒவ்வோர் ஆண்டும் உலக சுகாதார விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டின் கணக்கின்படி உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
- உலக சுகாதார அமைப்பின், 73வது உலக சுகாதார மாநாடு ஜெனீவாவில் தொடங்கியது.இந்த குழுவில் சுமார் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தும் நாடுகளுக்கு ஆதரவு அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ஆப்பரேஷன் சமுத்திரசேது
- வெளி நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் இயக்கத்தின் ஒரு அங்கமாக ஆபரேஷன் சமுத்ர சேது திட்டத்தை இந்திய கடற்படை செயல்படுத்தி வருகிறது.
- ஆப்பரேஷன் சமுத்திரசேது என்ற திட்டத்தின்படி இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா (INS Jalashwa) கப்பலில், மாலத்தீவின் மாலே துறைமுகத்தில் 2020, மே 15 அன்று 588 இந்திய குடிமக்களை கப்பலில் ஏற்றிக் கொண்டது.
- மாலத்தீவில் தவித்துவந்த இந்தியர்களில் முதல் கட்டமாக 698 பேரை ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், மே 10 ம் தேதி அழைத்துவந்தது.
சட்டமேலவை உறுப்பினர்
- சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது சட்ட மேலவை உறுப்பினர் பதவிகள், 24 ஏப்ரல் 2020 அன்று மகாராஷ்டிராவில் (இணைப்பு ‘A’) காலியானது.
- சட்டேமேலவை உறுப்பினராக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார்.சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28-ந் தேதி மகாராஷ்டிர முதல்- அமைச்சராக பதவி ஏற்றார்.
TNPSC Group 4 Exam Video Course
For TNPSC Video Course & Test Batch Call : 8681859181
Check All Month Current Affairs
Download May 14th to 18th Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |