November 2 & 3 Current Affairs For All Exams 2019

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(Nov 2 & 3  Current Affairs  2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Nov 2 & 3 Current Affairs.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Nov 2 & 3  Current Affairs  2019 

 

GF-7 செயற்கைக் கோள்

பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 3ஆம் நாள் 11 மணி 22 நிமிடத்தில் சீனாவின் தையூவான் செயற்கை ஏவு மையத்திலிருந்து GF-7 செயற்கைக் கோள் லாங்மார்ச்-4பி ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

GF-7செயற்கைக் கோள், சீனாவில் குடிமுறை பயன்பாட்டுக்கான முதலாவது துணை மீட்டர் நிலை ஒளி பரப்பு ரக முப்பரிமான வரைபடச் செயற்கைக் கோளாகும். தேசிய நிலப்பரப்பு அளவீடு மற்றும் வரைப்படம், நகர மற்றும் கிராமக் கட்டுமானம், புள்ளிவிவரம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் இச்செயற்கைக் கோள் முக்கிய பங்கினை அளித்து, நகரங்களின் வளர்ச்சி திட்ட வரைவு, வேளாண்மை மற்றும் கிராமப்புறக் கட்டுமானம் ஆகியவற்றுக்கு வலிமைமிக்க உத்தரவாதத்தை வழங்கும்.

மலிவுவிலை மருந்தகங்கள் கண்டறிய செல்போன் செயலி

மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் ‘மக்கள் நல மருந்தகங்கள்’ எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது.

மக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மலிவுவிலை மருந்தகங்களின் விவரத்தையும், அங்குள்ள மருந்துகள் விவரத்தையும் அறிந்துகொள்ள Jan Aushadhi Sugam என்ற செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்

சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல்வர் பழனி சாமி 110-விதியின் கீழ், கிராமங் களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

எஃப்.ஐ.எச் போட்டிகள் புவனேஷ்வரில் நடைபெற்றது, இதில் யு.எஸ்.ஏ. அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி மொத்தமாக 6-5 என்ற கோல்களில் முன்னிலை பெற்றதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய மகளிர் அணி இதற்கு முன்னால் 1980-ல் மாஸ்கோ ஒலிம்பிக்கிலும் பிறகு பிரேசில் ரியோ ஒலிம்பிக்கிற்கு 36 ஆண்டுகள் கழித்து 2016-லும் தகுதி பெற்றது. இந்நிலையில் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் சோதனை போட்டி

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் சோதனை போட்டி நடைபெற்றது.ஒலிம்பிக் சோதனை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷிவ தாபா, பூஜா ராணி ஆகியோர் தங்கம் வென்றனர்.

ஆடவர் 63 கிலோ பிரிவில் ஷிவ தாபா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் வீரர் சனதாலி டோல்தயேவை வென்றார்.

 மகளிர் 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவின் கேய்ட்லின் பார்க்கரை வென்றார்.

இந்தியா – தாய்லாந்து இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம்

பிரதமர் மோடி – தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா சந்திப்பின்போது இந்தியாவும் தாய்லாந்தும் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்புடன் இயங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘ககன்யான்’ திட்டம்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு உதவும் வகையில் 4 விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்க உள்ளது.

மாஸ்கோ-யூரி காகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் 4 பேருக்கும் பயிற்சியளிக்கப்பட உள்ளது.இந்திய-ரஷ்யா கூட்டுறவால் இத்திட்டம் வரும் 2022ம் ஆண்டு நிறைவேற்றப்படும்.

 

 

Check All Month Current Affairs

Download Nov 2 & 3  Current Affairs PDF 

 

Download Nov 2 & 3   Current Affairs PDF 

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: