Dance Forms in India
நடனங்களைப்பற்றி (Dance forms in India) இந்த பதிவில் பார்ப்போம் இது தமிழக அரசின் தேர்வுகள் காவலர் தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
இந்திய மாநிலங்களின் பாரம்பாிய நடனங்கள்

1. பரதநாட்டியம் (தமிழ்நாட்டைச் சார்ந்தது) 2. கதக்களி (கேரளம்) ஆண்கள் மட்டும் ஆடுவது 3. குச்சிபுடி (ஆந்திர பிரதேசம்) 4. மோஹினி ஆட்டம் (கேரளம்) பெண்களுக்காக 5. ஒடிசி (ஒடிஷா மாநிலம்) 6. மணிபுரி (மணிப்பூர்) 7. கதக் (பொதுவாக வட இந்தியா) முகலாயர் காலத்தில் உருவானது 8. சத்ரியா (அசாம்)
பரத நாட்டியம் கண்டால் நம் சோகம் கூட இருந்த இடம் தெரியாமல் மறையும். நம் மனதும் உடலும் புத்துணர்வு பெறும். புதுமை பலவற்றை நாட்டியத்தின் மூலமே காண இயலும். பக்தி பரசவத்தில் தன்னை மறந்து கண்ணீர் ததும்ப ஆட ஒரு ஆண்மகனோ பெண்மகளோ வீரம் வெளிப்பட குதித்து ஆட பெண் தன் நாணத்தில் வெட்கி கனவு கண்டு காதலை வெளிப்படுத்த என அனைத்து உணர்ச்சிகளையும் ஒருங்கே வெளிகொணர பரதம் மறுக்க முடியாத நம் பாரம்பரிய நடனமே. நிச்சயம் இப்படிப்பட்ட பரதத்தைக் கண்டால் தன்னையும் மறந்து ஆனந்தத்தில் திளைப்பவர் அனைவருமே.

கதையை மையமாகக் கொண்டு ஆடும் கதக்களி கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனம். இதனை ஆட்டக்கதை என்றும் கூறுவர். தேவதைகளை வழிபடும் ஆட்டங்களில் இருந்து தோன்றிய ஆட்டமாகவே கருதப்படுகிறது. பகவதி பாட்டு, காளியாட்டம், முடியேட்டு போன்ற ஆடல் வகைகளை உள்ளடக்கியது கதக்களி. ஆரியர்கள் வருவதற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையோடு ஒன்றித் தோன்றியததாக கூறப்படுகிறது. கதக்களி ஒரு பேச்சு இல்லாத அபிநயம் வினோதமான வேசங்கள் சண்டைக் காட்சிகள் சமயத் தொடர்புகள் என்று சம்பிராதய பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன. கதக்களியில் முக பாவமும் கை அசைவுகளுமே முக்கிய அம்சமாக உள்ளது. இதன் ஒப்பனையும் உடை அலங்காரமும் ஒரு தனித்துவமான நடன வடிவமாகவே உள்ளது. மகாபாரதம் மற்றும் இராமாயணம் இதன் கருக் கதையாகவே உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பண்டைய நடன நாடக வடிவமே குச்சிப்புடி. நமது தென்னிந்தியா முழுவதும் பெயர் பெற்ற நடன வகையான குச்சிப்புடி ஆந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயரால் அனைவராலும் அழைக்கப்படுகிறது. கருநாடக இசையோடு இணைந்து ஆடப்படும் நடனம் இது. இந்த நடனம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் புகழ் பெறத் தொடங்கியது. குச்சிப்புடி நடனம் மக்களுக்கும் அரசுக்கும் ஒரு செய்தியை தரும் ஊடகமாகவே உள்ளது. நரச நாயக்கர் மன்னன் ஆட்சிக் காலத்தில் ஒரு முறை மக்கள் வரிச்சுமையினால் கடுமையாக அவதிப்படும் நிலை உண்டானது. அப்போது அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் தங்களது நடனம் மூலம் மக்கள் படும் அவதியை மன்னருக்கு தெரியப்படுத்தி உள்ளனர். பின் மன்னன் மக்கள் நிலை உணர்ந்து அவர்கள் துயர் தீர்த்தார் என்று சொல்லப்படுகிறது. குச்சிப்புடியின் அங்கம் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம். நிருத்தம் என்றால் ஜதிகளையும் தீர்மானங்களையும் கொண்ட ஒன்று நிருத்தம் என்றால் பாடல் மற்றும் இசை நடனம் என்றால் முக பாவனைகள் கை முத்திரைகள் அடங்கியது. இந்த நடனத்தின் ஒரு பகுதி வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு ஆடுவது இதற்கு தரங்கம் என்று பெயர். சில முறை தண்ணீர் பானையுடனும் ஆடுவதுண்டு.

ஒரிசா மாநிலத்தில் ஆடப்படும் பாரம்பரிய நடனம் ஒடிசி. வட இந்திய கல்வெட்டுகள் மற்றும் சிற்ப சான்றுகளின் படி இந்த ஒடிசி நடனம் பல நூற்றாண்டுகளாகவே ஆடப்படுகிறது என்று புலனாகிறது. கோயில்களில் மதிக்கப்பட்டு வந்த பாரம்பரிய நடனக்கலை இந்த ஒடிசி. கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கோட்டிப்புகழ் எனப்படும் சிறுவர்கள் இந்த நடனத்தைப் பெண்ணுடை தரித்து கோயில்களில் ஆடியுள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்த நடனம் ஆடப்பட்டது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ராணி கும்பா குகைகளில் காணப்படும் ஒடிசி நடனங்களின் சிற்பங்கள். பரதத்திற்கும் முந்தைய நடனம் ஒடிசி என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். கருநாடக இசை ஹிந்துஸ்தானிஇசை மற்றும் ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசை மூன்றுமே இந்த நடனத்திற்கு இசைக்கப்படும் இசையாகவே உள்ளது. இந்த இசை என்றுமே ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான மங்கள சரண் என்ற நடனத்துடனே தொடங்கும். அதன் பின் தனக்கு கற்றுக் கொடுத்த குருவிற்கு மரியாதை செய்யும் விதமாக குருவணக்கம் நிகழும். இந்த நடனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் இன்று பேசப்பட இவரும் இவர் சிஷியர் சஞ்சுக்தா பணிகிரஹியும் முழுமுதற் காரணம்.

மணிப்பூர் பிரதேசத்தின் பாரம்பரிய நடனம் மணிப்பூரி. மிகப் பழமையான மக்களை மகிழ்விக்கும் ஆடல் இது. கிருஷ்ணராதா கோபிகையரால் நிகழ்த்தப்பட்டதென்று கருதி வரும் ஆடல் ராஸ்லீலா. இந்த கலையை ஆடுபவர்கள் சலங்கை அணியமாட்டார்கள். ராஸ்லீலா நடனம் மணிப்பூரி நடனத்தின் பட்டியலில் அடங்கும். ராஸ்லீலா நடனத்தில் வசந்தராஸ், குஞ்ஜ ராஸ், மஹாராஸ் மற்றும் நித்தியாராஸ் ஆகிய நடனம் இதன் வகைகள் ஆகும்.
மாநிலங்கள் – நடனங்கள் :
- உத்தராஞ்சல் – குமயோண், ஜகர்ஸ், சோலிய, தாலி – ஜட்ட
- அரியானா – ஸ்வாங், கோரியா, குக்க நடனம், லூர், சங், தாம
- குஜராத் – கர்பா, தாண்டியா, ராஸிலா, திப்பனி, பாவை
- கேரளா – கதகளி, ஒட்டன் துள்ளல், மோகினி ஆட்டம், சகிர கூத்து, சவிடு நாடகம், கைகொட்டி கலை, கூடியாட்டம், கிருஷ்ண வட்டம், முடியேட்டு
- பீகார் – ஜதடஜதின், பிதஸிய, பாகுன, புர்பி
- ராஜஸ்தான் – கயால், காம்கோர், சமர்கினாட்,சக்ரி, லீலா, சுசினி, கல்பேலியா,
- பஞ்சாப் – பங்கிரா, கிடா, தாமன் மழவை, ஜ்ஹுமார், கர்தி, கிக்லி, சம்மி, லுடி, டண்டாஸ்
- ஒடிசா – ஒடிசி, சவரி, ஹுமர, பைக, சாஹு, gotipua, சம்பல்பூர்
- அசாம் – பிஹீ, ஒஜபலி, அங்கிய நட்
- மேற்கு வங்காளம் – காதி, ஜாத்
- உத்திரபிரதேசம் – கதக், காரண், சப்பேலி, குமயோண், நௌடாங்கி
- மிசோரம் – சிராக் (மூங்கில் நடனம்)
- ஜம்மு காஷ்மீர் – சாக்ரி, ரௌஃப்
- மகாராஷ்டிரம் – தமாஸா, லாவனி, தாஹிகால, லேசிம்
- கர்நாடகம் – யக்ஷகானம், பயலடா, சிம்ஹா நுடர்யா, தொல்லு குனித, வீரகசே
- ஆந்திரா பிரதேசம் – குச்சிப்பிடி, கொட்டம்
- மத்திய பிரதேசம் – மாச்சா, லோத்தா, பாண்ட்வானி, தேர்டாளி, சர்குல, ஜவரா, மட்கி, ப்ஹுல்பட்டி, மான்ச், கிரிட கூர் மரிய
- இமாச்சல் பிரதேசம் – லூட்டி, காயம்கா, முன்ஜர, கணயலா, ஹிகட்
- தமிழ் நாடு – பரதநாட்டியம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம்
- அருணாச்சல பிரதேசம் – அஜி லாமு, பர்டோ சஹம், போபிர், சலோ, சிங்கம் & மயில் நடனம்
- சட்டீஸ்கர் – பந்தி, ராட் நச்சா,
- கோவா – புக்டி, தேஹன்னி, தரங்கமல், தலோ
- ஜார்கண்ட் – கர்மா
- லட்சத்தீவுகள் – லவா
- புதுச்சேரி – கரடி
- சிக்கிம் – சிங்ஹி சாம், யாக் சாம், மருனி, ரேசுங்க்மா
- தெலுங்கானா – பெரிணி தாண்டவம், தப்பு, லம்பாடி
- திரிபுரா – ஹோஜகிரி, கோரிய, லேபங் பூமணி,
- மணிப்பூர் – தங் டா, மணிபுரி, தொல் சொலோம்
List of Important Dance in India
Other Important General Topics:
List of dams in India – Download PDF
List of National Parks in India
வனவிலங்கு புகலிடம்,சரணாலயங்கள்
இந்திய பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள்


