Daily Current Affairs

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’ கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் பெண்கள் போராட்டங்கள்

பெண்களின் அரசியல் பங்கேற்பு, பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் l சபரிமலை நுழைவு போராட்டம் மாதவிடாயைக் காரணம் காட்டி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கேரளத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலுக்குள் செல்ல இருபாலினத்தவருக்கும் உரிமை உண்டு என்கிற அடிப்படையில் சபரிமலை கோயிலுக்குள் செல்ல பெண்களையும் அனுமதிக்கும்படி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என 2018இல் உச்ச…

பெண்களுக்கான சமூக நலச்சட்டங்கள்

சட்டங்கள் இந்து திருமணச் சட்டம் 1955: l திருமணம் என்பது சாத்திரப் படி உடைக்கக்கூடாத பந்தம் என்றிருந்த நிலையில் விருப்ப மில்லாத திருமண வாழ்விலிருந்து பெண்கள் விவாகரத்து பெறவும், கணவனிடமிருந்து வாழ்க்கைக் கான பொருளுதவி பெறவும் குழந்தையைத் தத்தெடுக்கவும் உரிமை வழங்கும் சட்டம்.

ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்வு

ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்வு இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டில் மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம்

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் The Criminal Procedure (Identification) Act, 2022 நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சிறை கைதிகளை அடையாளம் காணும் 1920-ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணவும் விசாரணை நடத்தவும் ஏதுவாக சிறைக் கைதிகள் மற்றும்…

ராம்சர் அங்கீகாரம் – RAMSAR Wetland Sites

ராம்சர் அங்கீகாரம் – RAMSAR Wetland Sites இந்தியாவில் மேலும் 15 சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் அவற்றில், 9 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு நற்செய்தி. தமிழ்நாட்டின் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை, பிச்சாவரம், கூந்தன்குளம், வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டபுரம், வெள்ளோடு, மன்னார் வளைகுடா, வேம்பனூர் ஆகியவை ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் சதுப்புநிலப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை…

அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை   நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயரை மத்திய சட்ட அமைச்சருக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று முறைப்படி பரிந்துரை செய்தார்.

நம்மை காக்கும் 48 திட்டம்

நம்மை காக்கும் 48 திட்டம்   இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் விபத்து நடந்து 48 மணி மணிநேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டமாகும். இது 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நிதியினை வழங்குவதை உறுதி செய்வதாகும்.

பணச் சலவைத் தடுப்புச் சட்டம்

பணச் சலவைத் தடுப்புச் சட்டம் பணச் சலவை: தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மூலம், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை முறையான வழிகளில் ஈட்டப்பட்ட பணமாக மாற்றுவதே பணச் சலவை (Money Laundering) எனப்படுகிறது. இது பண மோசடி / நிதி மோசடி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட பணம் என்னும் கறையை நீக்கும் முயற்சி என்பதால், சலவை…

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளார். 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான ருச்சிரா கம்போஜ் தான் இந்தப் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு

 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த பிப்ரவரி மாதம், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.55 ஆக இருந்தது. தற்போது அது ரூ.80-ஐ தொட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டின் டாலர் – ரூபாய் நிலவரத்தையும் தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டால் தற்போதைய சரிவின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும். 2018 டிசம்பரில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70 ஆக…

புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள்

வியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள் : எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ திட்டம்

குடியரசுத் தலைவா் கொடியின் சிறப்புகள்

குடியரசுத் தலைவா் கொடியின் சிறப்புகள் தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவரின் கொடிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதன் விவரம்:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகள், மலை கிராம பகுதிகளில் உள்ள 1545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1,14,095 குழந்தைகள் பயனடைய உள்ளனர். மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகிய…

சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் 1967 ஆம் ஆண்டு, கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை அடைந்தவுடன், சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கிடும் வகையிலான வரைவுச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் திராவிட இயக்கப் பேராசான் பேரறிஞர் அண்ணா நிறைவேற்றிய நாள்17-07-1967.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Play sound