Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(February 5th – 11th Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Feb 5th – 11th Current Affairs.
இந்தியா செய்திகள்
தகவல் அறியும் உரிமைச்சட்டம்
- இந்திய அரசு 2005 ஆம் வருடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது.சர்வதேச அளவில் 128 நாடுகளில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் செயல்பாட்டில் உள்ளது.
- முன்னோடி நாடாக ஸ்வீடன், கடந்த 1766-ம் ஆண்டிலே இந்த சட்டத்தை செயல்படுத்தியது. கடைசி நாடாக கனடா கடந்த 2019-ம் ஆண்டு இந்த சட்டத்தை தங்கள் நாட்டில் செயல்படுத்தியுள்ளது.
- 128 நாடுகளில் இச்சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஆய்வினையும், அதன் அடிப்படையில் அந்த நாடுகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் தரவரிசைப் பட்டியலையும் ஆண்டுதோறும் கனடாவைச் சேர்ந்த சட்டம் மற்றும் ஜனநாயக மையம் ( Centre For Law Democracy) என்ற அமைப்பு வெளியிடுகிறது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச தரவரிசையில்
- 2014ல் 3-வது இடத்திலும், 2016ல் 4-வது இடத்திலும், 2017-ல் 5வது இடத்திலும், 2018ல் 6-வது இடத்திலும், 2019ல் 7-வது இடத்திற்கும் இந்தியா தொடர்ச்சியாக பின்னுக்குத் தள்ளப்பட்டது.
- 2019-ம் ஆண்டில் சர்வதேச நாடுகளையே ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. மெக்ஸிகோ 2-வது இடத்திலும், செர்பியா மூன்றாவது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும், ஸ்லேவேனியா 5-வது இடத்தஇலும், அல்பேனியா 6-வது இடத்திலும் உள்ளன.
- முக்கிய சர்வதேச நாடுகள் அமெரிக்கான 72-வது இடத்திலும், இங்கிலாந்து 43-வது இடத்திலம், பாகிஸ்தான் 32-வது இடத்திலும், சீனா 87-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வை நடத்திய கனடா 58-வது இடத்தில் உள்ளது.
ஆதார் எண்களை சேகரிப்பு
- உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதை நாட்டிலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இறந்தவர்களின் பதிவேடுகளை வைத்து உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் திரும்பப் பெற்று அந்த எண்கள் இடைநீக்கம் செய்யப்படும். ஒரு நபருக்கு தரப்படும் ஆதார் எண், 100 ஆண்டுகளுக்கு மற்றொருவருக்கு தரப்படாது.
வளம் சார்ந்த மாநில அறிக்கை 2020-21
- தமிழகத்துக்கான ‘வளம் சார்ந்த மாநில அறிக்கை 2020-21’ என்ற அறிக்கையை தேசிய வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்துள்ளது. சென்னையில் நடந்த மாநில கடன் கருத்தரங்கில் இந்த அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார்.
- முன்னுரிமை கடன் பிரிவின் கீழ், மாநிலத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக கடன் மதிப்பீட்டு திட்டங்களை நபார்டு கடந்த பல ஆண்டுகளாக தயாரித்து வருகிறது.
- அந்த வகையில், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 2020-21 ஆண்டுக்காக மாவட்ட வாரியாக செய்யப்பட்ட மதிப்பீடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மாநில கடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
- அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு 2020-21 ஆண்டுக்கான நபார்டின் கடன் மதிப்பீடு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 629 கோடி. இது கடந்த 2019-20 ஆண்டின் கடன் மதிப்பீடான ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 906 கோடியைவிட 8.25 சதவீதம் அதிகம்.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
தேசிய செய்திகள்
தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்துக்கு அருண் ஜேட்லியின் பெயர்:
- ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் பெயரை, அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத்.
- மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மே 26, 2014 முதல் மே 30, 2019 வரை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைப்பு, திவால் சட்ட அறிமுகம் ஆகிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
- அவரது தொலைநோக்கு மற்றும் பங்களிப்பைப் போற்றும் வகையில், தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு அவரது பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பு
- தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் பதிவுபெற்ற ஓர் அங்கம் ஆகும். இது 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- குடிமைப் பணித் தேர்வில் (யூபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று அதிகாரிகள் ஆவோருக்கு நிதி மற்றும் கணக்குகள் குறித்துப் பயிற்சி அளிக்க இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
- மத்திய நிதி அமைச்சர் தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைவராக இருப்பார்.
தரவரிசை
20 ஸ்மார்ட் நகரங்கள் பட்டியல்
- கடந்த 2015-ம் ஆண்டு அழகிய நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.இந்நிலையில், இந்த திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தும் நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
- அகமதாபாத் முதல் இடத்திலும் நாக்பூர் 2-ம் இடத்திலும், தமிழகத்தின் திருப்பூர் 3-ம் இடத்திலும் உள்ளன. மேலும், ராஞ்சி, போபால், சூரத், கான்பூர், இந்தூர், விசாகப்பட்டினம், வேலூர், வடோதரா, நாசிக், ஆக்ரா, வாரணாசி, தாவணகரே, கோட்டா, புனே, உதய்பூர், டேராடூன் மற்றும் அமராவதி ஆகியவை முதல் 20 இடங்களைப் பிடித்த மற்ற நகரங்கள் ஆகும்.
- இதன்படி, சிறப்பாக செயல்படும் 20 நகரங்களும் தலா ஒரு பின்தங்கிய நகரத்துக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒரே பகுதி மற்றும் கலாச்சார அடிப்படையில் 2 நகரங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
- இதற்காக வரும் 20-ம் தேதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 100 நாட்களில் பின்தங்கிய நகரங்களை மேம்படுத்த வேண்டும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள்
- கடந்த 2016-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றங்கள் நடந்தன. இது 2017-ம் ஆண்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 32 குற்றங்களாக உயர்ந்தன. 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 குற்றச்சம்பவங்களாக அதிகரித்துள்ளன.
- பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது.2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவே, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துக்கான முதல் விரிவான சட்டமாகும்.குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்புச் சட்டம் (போக்ஸோ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி திருத்தங்கள் செய்யப்பட்டு கடுமையான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
திஷா’ சட்டம்
- ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரம் பகுதியில் ‘திஷா’ காவல் நிலையத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வெகு விரைவில் தண்டனை கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
- திஷா’ சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 21 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படும்.
- `திஷா’ சட்டடத்தைச் செயல்படுத்த இரண்டு சிறப்புப் பெண் அதிகாரிகளை ஆந்திர அரசு நியமித்துள்ளது.ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா மற்றும் காவல் துறை உயர் அதிகாரியான தீபிகா இருவரையும் இதற்காக நியமித்துள்ளது.
- இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை இயக்குநராகவும், கூடுதல் காவல் ஆய்வாளராக தீபிகாவும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
அறிவியல் செய்திகள்
கரோனா வைரஸுக்கு புதுப் பெயர் `COVID – 19′
- சீனா உட்பட உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தும் கரோனா வைரஸுக்கு கோவிட் – 19 என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
- இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை.
- இந்தப் பெயரில் வரும் CO என்பது, கொரோனாவின்(Corona) முதல் இரு எழுத்துகளையும், VI என்பது வைரஸின் (Virus) முதல் இரு எழுத்துகளையும், D என்பது நோயின் (Disease) முதல் எழுத்தையும் குறிக்கும்.இறுதியாக உள்ள 19 என்ற எண், வைரஸ் கண்டறியப்பட்ட வருடத்தைக் குறிக்கும்.
அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண்
- அமெரிக்கா, ரஷ்யா உட்பட 13 நாடுகள் கூட்டாக விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த மையத்தில் ஆறு விஞ்ஞானிகள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர்.
- அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார்.
- 41 வயதான கிறிஸ்டினா கோச், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர். தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேல் (328 நாட்கள்) அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் பூமி திரும்பியுள்ளார்.
- கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் அவர் தரை இறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தங்கியிருந்து, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் – ஜெனரல் டெட்ரோ
குண்டு துளைக்காத ஹெல்மெட்
- இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிபவர் அனூப் மிஸ்ரா.
- ராணுவ வீரர்களுக்காக ஸ்னைப்பர் தோட்டாக்கள் தாக்காத வகையிலான புல்லட் புரூப் ஜாக்கெட்டை உருவாக்கிய இவர், தற்போது ‘ஸ்னைப்பர்’ ரக (ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகளால்) துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத கவச உடையை கடந்த ஆண்டு அனூப் மிஸ்ரா தயாரித்தார்.20 மீட்டர் தூரத்திலிருந்து 9 மில்லி மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள குண்டுகள் பாயும் போது அது துளைக்காத வலிமையுடன் இந்த ஹெல்மெட்டுகள் இருக்கும்.
- உலகின் முதல் குண்டு துளைக்காத ஹெல்மெட்..
பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க முயற்சி
- தஞ்சாவூர் பெரிய கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் எட்டாவது அதிசயமாக இடம்பெறச் செய்வதற்காக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளது.
- மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி.1003-ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு செய்யப் பெற்றது தஞ்சாவூர் பெரிய கோயில்.
- கி.பி.10-ம் நூற்றாண்டில் கருங்கற்களை மட்டுமே கொண்டு 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்தக் கோயில்தான் உலகிலேயே பெரிய கோயிலாகும்சோழர் கால கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
- இந்தக் கோயிலை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு கடந்த 1987-ம் எந்த ஆண்டு அறிவித்தது.
கால்நடை ஆராய்ச்சி பூங்கா
- சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- ரூ.1000 கோடியில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது
- 3 பிரிவுகளாக அமைய உள்ள இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் முதலாவது பிரிவில் நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் கறவை மாட்டு பண்ணை, உள்நாட்டு மாட்டு இனங்களான காங்கேயம், உம்பளாசேரி, கோழி இன பிரிவுகள், நாட்டின நாய் ஆகியவற்றிற்காக இனப் பெருக்க பிரிவுகளை கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட உள்ளது.
- 2-வது பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை பேன்ற உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றில் இருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்தும் வசதி ஆகியன ஏற்படுத்தப்படும்.
- 3-வது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலாக்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரோவில்லில் உலக தரம் வாய்ந்த நாடகங்கள்
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரேயொரு அமைப்பான தேசிய நாடகப்பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக நாடுகளின் தலைசிறந்த நாடகப்பயிற்சி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் முதல்முறையாக டெல்லி தேசிய நாடகப்பள்ளி சார்பில் உலக தரம் வாய்ந்த நாடகங்களை பிப்ரவரி 12 முதல் 18-ம் தேதி வரை ஆரோவில்லில் நடக்கின்றன.
விளையாட்டு செய்திகள்
யு-19 உலகக்கோப்பை சாம்பியன்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலக கோப்பை (யு-19 உலகக்கோப்பை) கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.இறுதிப் போட்டியில் இந்திய யு-19 அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் முறையில் வென்று வங்கதேச அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை நாட்டுக்குப் பெற்றுத்தந்து வரலாறு படைத்தது.
விருதுகள்
ஆலன் பார்டர் விருது
ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும். 2019-ல் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்காக ஆலன் பார்டர் விருதை தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றார்.டேவிட் வார்னருக்கு இது 3ஆவது ஆலன் பார்டர் விருதாகும். முன்னதாக, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளார்.சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ‘பெலிண்டா கிளார்க்’ விருதை எலிஸ் பெர்ரி 3வது முறையாக (2016, 2018, 2020) கைப்பற்றினார்.எல்லிஸ் பெர்ரி ஆஸ்திரேலிய மகளிர் அணியில் சிறந்த ஆல்-ரவுண்டராக உள்ளார்.
92-வது ஆஸ்கர் விருது விழா
92-வது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கியது.4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது கொரியத் திரைப்படம் ‘பாராசைட்’.சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.
சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கா்)
சிறந்த நடிகை: ரென்னி ஜெஸ்வேகா் (ஜூடி)
ஜோக்கா் படத்தில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று சிற்பபான நடிப்பை வெளிப்படுத்திய ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கா் விருதை முதல் முறையாக வென்றாா்.
டிசி காமிஸ் புத்தக வில்லன் கதாபாத்திரமான ஜோக்கராக நடித்து ஆஸ்கா் வென்ற இரண்டாவது நடிகா் பீனிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநா் கிறிஸ்டோபா் நோலன் இயக்கி டாா்க் நைட் படத்தில் ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜா் காலமான பிறகு அவருக்கு ஆஸ்கா் விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (once upon a Time in hollywood)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Toy story 4
சிறந்த திரைக்கதை – Parasite
சிறந்த தழுவல் திரைக்கதை – Jojo Rabbit
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – The Neighbor’s Window
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜாக்குலின் துர்ரன் (Little Women)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Once Upon a Time in Hollywood
சிறந்த ஆவணப்படம் – American Factory
சிறந்த திரைக்கதை – Parasite
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (Marriage Story)
சிறந்த ஒலிக்கலவை – 1917
சிறந்த சவுண்ட் எடிட்டிங் – Ford v Ferrari
சிறந்த ஒளிப்பதிவு – 1917
சிறந்த படத்தொகுப்பு – Ford V Ferrari
சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் – 1917
சிறந்த ஒப்பனை – Bombshell
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – Parasite
சிறந்த பின்னணி இசை – ஹில்டர் (Joker)
சிறந்த பாடல் – Rocketman
சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ ( Parasite)
சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (Joker)
சிறந்த நடிகை – ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த திரைப்படம் – Parasite
புத்தகம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்: தி மிஸைல் மேன்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தின்அறிமுக போஸ்டரை, தில்லியில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டாா். ‘ஏபிஜெ அப்துல் கலாம்: தி மிஸைல் மேன்’ திரைப்படம் ஹாலிவுட் மற்றும் தெலுங்கு திரைத் துறையின் கூட்டுத் தயாரிப்பாகும்..
நியமனங்கள்
பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர்
பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் மாற்றப்பட்டு, புதிய முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
Check All Month Current Affairs
Download Feb 5 to 11 Current Affairs PDF
Feb 5 to 11 Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |