Daily Current Affairs April 1st to 6th CA For All Exams -2020

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(April 1st – 6th Current Affairs  2020 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : April 1st – 6th Current Affairs. 

முக்கியமான நாட்கள்

ஒடிசா தினம் – ஏப்ரல் 1

  • இது 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று பீகார், வங்காளம், ஒடிசா ஆகிய மாகாணங்களிலிருந்து ஒரு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு அதோடு  மதராஸ் மாகாணத்தின் கோராபுட் மற்றும் கஞ்ஜம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு ஒடிசா மாநிலமாக உருவாக்கப் பட்டதை நினைவு கூர்கின்றது.
  • 2010 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று, இந்தியப் பாராளுமன்றமானது ஒரிசாவை ஒடிசா எனவும் ஒரியா மொழியை ஒடியா எனவும் பெயர் மாற்றம் செய்தது.

சர்வதேசக் குழந்தைகளின் புத்தக தினம் – ஏப்ரல் 2  (International Children’s Book Day )

  • இது ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பான இளையவர்களுக்கான புத்தகங்கள் குறித்த சர்வதேச வாரியத்தினால் (International Board on Books for Young People – IBBY) அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.1967 ஆம் ஆண்டில் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது .
  • புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் உலக சிறுவர் புத்தக தினமாக ஏப்ரல் 2ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்தநாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலக மன இறுக்க நோய் விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 02

  • இத்தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது உடல் நலம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அதிகாரப் பூர்வமான 7 தினங்களில் ஒன்றாகும்.
  • இது 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இது மன இறுக்கப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முதிர்வயது நிலையைக் கவனித்தல்” (The Transition to Adulthood) என்பதாகும்.
  • மன இறுக்க நோயுடன் உள்ள மக்களை அங்கீகரிப்பதற்காக “நீல நிற ஒளியினை” ஏற்படுத்துவதற்காக உலகம் ஒன்றிணைகின்றது.

உலக அறிவுத்திறன் குறைபாடு (ஆட்டிஸம்)’ விழிப்புணா்வு தினம் – ஏப்ரல் 2

ஏப்ரல் 2 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் மற்றும் ஏப்ரல், ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 அறிவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் ஆண்டுதோறும் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

The theme of World Autism Awareness Day 2020 is “The transition of adulthood”

கண்ணிவெடி நடவடிக்கைகளில் கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் உதவிக்கான சர்வதேச நாள் – ஏப்ரல் 4

  • 2005 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளைக் கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக கடைபிடிப்பதாக அறிவித்தது.
  • இது ஏப்ரல் 4, 2006 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், சர்வதேசச் சமூகத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாராப் பிரதிநிதிகள் மாபுடோவில் (மொசாம்பிக்) ஒன்றுகூடி, “மாபுடோ + 15 பிரகடனம்” மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் உலகத்தை கண்ணிவெடி இல்லாத ஒரு உலகாக மாற்ற வேண்டும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்தனர். 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

அறிவியல் செய்திகள்

‘பாரா கிளைடர்’ மூலம் கிருமிநாசினி மருந்து தெளிப்பு

  • திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள கடந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், சிறிய ரக பாரா கிளைடரை வடிமைத்துள்ளார்.
  • கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் முதல்முறையாக `பாரா கிளைடர்’ மூலம் பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

பிசிஜி வாக்சைன் கரோனா வைரசின் பாதிப்பு குறைக்கிறது

  • இந்தியாவில் காசநோயைத் தடுப்பதற்காக லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பிறந்தவுடன் செலுத்தப்படும் ‘தி பாசிலஸ் கால்மெட்-குயெரின்’ என்ற பிசிஜி வாக்சைன் தீவிர கரோனா வைரஸுக்கு எதிராக ‘கேம் சேஞ்சர்’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 
  • இந்தியாவில் பிசிஜி வாக்சைன்களை குழந்தைகளுக்கு செலுத்துவது என்பது ஒரு தேசியக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • உலகிலேயே அதிக காசநோய் பாதிப்பு நாடாக இந்தியா இருந்த போது 1948-ல் பிசிஜி நோய்த்தடுப்பு பெரிய அளவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவது அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்நிலையில்தான் பிசிஜி வாக்சைன்களை தேசியக் கொள்கையாக வடிவமைக்காத நாடுகளில் கோவிட்-19 தீவிரத்தாக்கம் அதிகம் உள்ளது என  விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
  • பிசிஜி வாக்சைன் கரோனாவை தீர்க்கிறது என்று பொருளல்ல ஆனால் குழந்தைப் பருவத்தில் பிசிஜி வாக்சைன் கொடுக்கப்பட்டவர்களுக்கு இதன் தீவிரம் குறைவாக இருக்கிறது.

கரோனா வைரஸ்: இந்தியாவில்  3 துணை வகைமாதிரிகள் சுழற்சி

  • சார்ஸ்-சிஓவி-2 (SARS-CoV-2)வகையின் 3 துணை வகைமாதிரி வைரஸ்களின் கலவை இந்தியாவில் சுழற்சியில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
  • மனித கரோனா வைரஸ் 1960-ம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. மனிதர்களை தொற்றும் கரோனா வைரஸ் 7 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவையாவன:

பொதுவான மனித கரோனா வைரஸ்கள் :-

  1. 229E (ஆல்பா கரோனா வைரஸ் coronavirus)
  2. NL63 (ஆல்பா கரஓனா வைரஸ்)
  3. 3.OC43 (பீட்டா கரோனா வைரஸ்
  4. HKU1 (பீட்டா கரோனா வைரஸ்)

பிற மனித கரோனா வைரஸ்கள் :-

5.மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் மெர்ஸ்

6.சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் சார்ஸ

7.சார்ஸ் சிஓவி-2 என்று அழைக்கப்படும் கோவிட்-19

நியமனங்கள்  

தானியங்கி ரோபோக்கள் அறிமுகம்

  • சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா வார்டில் 3 தானியங்கி ரோபாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • Propeller techno என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த 3 ரோபோக்களுக்கு Zafi, zafing bo, zafing medic என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவையான உணவு குடிநீர் மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்லும்படி ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலைக் கண்டறிவதற்கு ‘டிரோன்

  • நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவி வரும் சூழலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான ஆளில்லா சிறிய ரக விமானத்தை (டிரோன்) இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) சோ்ந்த முன்னாள்  வடிவமைத்துள்ளனா்.

இவர்மெக்டின் ஒட்டுண்ணி மருந்து

  • வெறும் நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் அணுக்களில் இருக்கும் COVID-19 வைரஸை அழிக்கும் ஒரு ஆன்டி பாராசிட்டிக் மருந்தை சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை பயன்படுத்தும் போது 24 மணி நேரத்தில் வைரஸின் எண்ணிக்கை குறைய தொடங்கி விடுகிறது. 
  • இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • மோனாஷ் பயோமெடிசன் டிஸ்கவரி இன்ஸ்டிடியூட் (Monash Biomedicine Discovery Institute) மற்றும் தி பீட்டர் டோஹர்டி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபெக்ஷன் அன்டு இம்யூனிட்டியின் (The Peter Doherty Institute of Infection and Immunity) கூட்டு முயற்சி ஆகும்.
  • ‘இவர்மெக்டின்’ (Ivarmectin) என்ற மருந்து அணுக்களில் COVID-19 இனப்பெறுக்கம் செய்து வளர்வதை தடுக்கிறது.உலகெங்கிலும் ஏற்கெனவே கிடைக்கக்கூடிய ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து 48 மணி நேரத்திற்குள் உயிரணு கலாச்சாரங்களில் வளர்க்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலை அழிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • ‘இவர்மெக்டின்’ என்பது எச்ஐவி (HIV), இன்ஃப்ளூயென்சா (Influenza) மற்றும் டெங்கு (Dengue) விற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒரு ஆன்டி பாராசிட்டிக் மருந்து. 
  •  இது பற்றி மோனாஷ் பயோமெடிசன் டிஸ்கவரி இன்ஸ்டிடியூடை சேர்ந்த டாக்டர்.கையிலீ வாக்ஸ்டாஃப் கூறுகையில்,”இந்த மருந்தை ஒரு முறை கொடுத்த போது வைரஸின் ஜெனிடிக் மெட்டீரியலான RNA வை அடியோடு 48 மணி நேரத்தில் அழித்து விடுகிறது. மேலும் 24 மணி நேரத்தில் RNA குறைக்கிறது.”

கரடியின் பித்த நீர்

  • கோவிட் – 19 வைரஸ் தொற்றிற்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலை சீன அரசு வெளியிட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்றினால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கரடியின் பித்தநீரை மருந்தாக பயன்படுத்தி சிகிச்சை அளிக்க சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரடியின் பித்த நீர், ஆட்டுக் கொம்பு மற்றும் மூலிகைகள் அடங்கிய தான் ரீ குயிங்” ‘ (Tan Re Qing) ஊசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.தான் ரீ குயிங்”  “என்ற மருந்து சிறப்பாகச் செயலாற்றும் மருந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தப் பாரம்பரிய மருந்தானது கரடியின் பித்த நீரைக் கொண்டுள்ளது.கரடியின் பித்த நீரில் உள்ள உர்சோடி ஆக்ஸிகாலிக் அமிலமானது (Ursodeoxycholic acid) கோவிட் – 19 தொற்றைச் சரி செய்யும் ஒரு கூறாகும்.
  • மேலும் இது உர்சோடியோல் (Ursodiol) என்றும் அழைக்கப்படுகின்றது.

உயிரி அங்கி (Bio – Suit)

  • COVID-19 நோயை எதிர்த்துப் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு உயிரி அங்கியை உருவாக்கியுள்ளது.
  • இந்த அங்கியானது செயற்கை இரத்தத்திற்கு ஏதுவாக இருக்கும்படியான உடல் அங்கிகளின் பாதுகாப்பிற்கு என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிர்ணயித்த அளவுகோல்களைப் பூர்த்தி செய்கின்றது.
  • இந்தச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட இரத்தமானது, பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை 48 மணி நேரம் வரை அவசரச் சிகிச்சை நிலையில் உயிரோடு வைத்திருக்க உதவும்.
  • செயற்கை இரத்தம் பெர்ஃப்ளூரோ கார்பன்களிலிருந்து (Perfluorocarbons) தயாரிக்கப்படுகிறது.

மொபைல் செயலி

கொவைட் லொகேட்டர்

கரோனா காரணமாக இல்லத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க ‘கொவைட் லொகேட்டர்’ என்னும் செயலியை கோவா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.   

‘ஆரோக்யசேது’  செயலி

  • மத்திய அரசு சார்பில் ஆரோக்யசேது எனும் மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய செயலி கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை டிராக் செய்ய முடியும்.
  • இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். 
  • இன்ஸ்டால் செய்யப்பட்டதும் இந்த செயலி ஏற்கனவே ஆரோக்யசேது இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சாதனங்களை கண்டறியும். பின் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனங்களை பயன்படுத்துவோரில் எவரேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரா என்பதை கண்டறிந்து பயனரின் அபாய அளவை கணக்கிடும். 
  • இந்த செயலியை கொண்டு மக்கள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பின் பயனர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்பது போன்ற விவரங்களையும் இந்த செயலி வழங்குகிறது.

‘’Stranded in India” இணையதளம்

  • சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக இந்திய அரசின் மத்திய சுற்றுலா அமைச்சகம் 2020 மார்ச் 31 ஆம் தேதி ‘Stranded in India’  (இந்தியாவில் தவிப்போர்)என்ற இணையதளத்தைத் தொடங்கியது.
  • இந்தத் தளமானது கோவிட் – 19 தொற்று நோயின் அச்சுறுத்தல் மற்றும் முடக்க நிலை காரணமாக தங்கள் தாயகத்தில் இருந்து வெகு தூரம் வரையில் நம்நாட்டிற்குப் பயணித்து வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தகவல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள் 

 

விம்பிள்டன் போட்டி 

  • விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் – ஜூலை 12-ஆம் தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது.
  •  கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போா் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இது முதல் முறை.
  •  விம்பிள்டன் போட்டியானது முதல் முறையாக கடந்த 1915 முதல் 1918 வரை முதல் உலகப் போா் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
  •  134-வது விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 28 ஜூன் முதல் 11 ஜூலை 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தல்

  • 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜுலை 24- ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
  • கரோனா பாதிப்பு காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு (2021) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அப்போட்டிகள் 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
  • இதேபோல் 2020 ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்க இருந்த பாராலிம்பிக் போட்டி 2021 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக செய்திகள்

பிரிட்டன் அரியணை

  • பிரிட்டன் அரியணைக்கான வாரிசுகள் பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ள இளவரசா் ஹாரியும் அவரது மனைவி இளவரசி மேகன் மாா்க்கலும்  அதிகாரப்பூா்வமாக 2020 மார்ச் 31-அன்று விலகினா்.
  • சாதாரண குடிமக்களாக தங்களது வாழ்க்கையைத் தொடரவிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
  • பிரிட்டனில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஹாரியுடன் அரசி எலிசபெத்தும் பிற அரச குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அதனைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், அரச குடும்பத்திலிருந்து ஹாரியும் மேகனும் படிப்படியாக விலகுவதற்கு 12 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.
  • மேலும், ஹாரி விரும்பினால் அரச குடும்பப் பொறுப்பை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அவா் மீண்டும் பெறலாம் என்ற வாய்ப்பும் அந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள்

1.வடகொரியாவில் இதுவரை கரோனா தொற்று ஏற்படவில்லை.

2.ஏமன்

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஏமன், போர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு. தொடர்ச்சியான போர் சூழல், இங்குள்ள பொருளாதாரத்தையே சிதைத்துள்ளது. எனினும் அங்கு கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது நிம்மதியை அளிக்கும் தகவலாக இருக்கிறது. 

3.தீவு நாடுகள்

மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் (Turkmenistan), சிறிய பசிஃபிக் தீவு நாடுகளான சாலமன் தீவுகள் மற்றும் வனுவாடு ஆகிய பகுதிகளிலும் கரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை.

4.ஆப்பிரிக்க நாடுகள்

ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளில் ஒன்றான காமரோஸ்-ல் (The Comoros) கரோனா உறுதி செய்யப்படவில்லை. கூட்டமான எரிமலைத் தீவுகள் இந்த நாட்டில் அடக்கம்.

சா டோம் பிரின்சிபி (Sao Tome and Principe) ஆப்பிரிக்கத் தீவு நாடுகளில் ஒன்று. காபிகளுக்குப் பெயர்போன இந்த நாட்டில், கரோனா நோய் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானிலும் கரோனா இல்லை. தென் ஆப்பிரிக்க நாடான லெசொதோவிலும் (Lesotho) பாதிப்பு இல்லை என்றே ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

விருதுகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் அறிவிப்பு

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2020-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் சான்றோா்களைத் தோ்வு செய்து அம்பேத்கா் சுடா் உள்ளிட்ட 6 விருதுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
  • அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கு இந்த விருதுகளுக்கான சான்றோா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விருது பெற்றவர்கள்

  • சாதி ஒழிப்பு என்னும் கருத்தியலை ஏற்று செயல்பட்டு வரும் ஆளுமைகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் ‘அம்பேத்கா் சுடா்’ விருது தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள எழுத்தாளா் காஞ்சா அய்லய்யாவுக்கு 2020-ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளது.
  • ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், பௌத்தம் குறித்து ஆய்வு செய்து பி.எச்டி. பட்டம் பெற்றவா். கல்வித்துறை சாா்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். 15-க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களை எழுதியவா். மகாத்மா ஜோதிராவ் ஃபுலே விருதைப் பெற்றவா்.
  • ‘பெரியாா் ஒளி’ விருதுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அருணனும், ‘காமராசா் கதிா்’ விருதுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
  • ‘செம்மொழி ஞாயிறு’ விருதுக்கு சிந்துவெளி ஆய்வாளா் ரெ.பாலகிருஷ்ணன் (ஐஏஎஸ்),
  • ‘அயோத்திதாசா் ஆதவன்’ விருதுக்கு அம்பேத்கா் மக்கள் இயக்க நிறுவனா் மறைந்த வை.பாலசுந்தரம், ‘காயிதே மில்லத் பிறை’ விருதுக்கு நீலப் புலிகள் இயக்க நிறுவனா் மறைந்த டி.எம்.உமா் பாரூக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
  • இந்த விருதுகள் அனைத்தும் தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசையும், பொற்கிழி மற்றும் பாராட்டு பட்டயத்தையும் கொண்டவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார செய்திகள்

 

PM Cares நிதி குறித்த அவசரச் சட்டம்

  • பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES FUND) வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அவசரச் சட்டமானது நேரடி வரி மற்றும் மறைமுக வரியைத் தாக்கல் செய்வதற்கான கால வரம்பை 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

வழிவகைக்கான முன்பணம்

  • மத்திய வங்கியிடம் இருந்து அரசாங்கம் பெறும் குறுகிய காலக் கடனுக்கான வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
  • “வழி வகைக்கான முன்பணம்” என்று அறியப்படும் கடன் வசதிக்கான வரம்பானது 2020 – 21 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.1.2 இலட்சம் கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டது.
  • கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் அரசின் செலவினம் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதியின் கிடைக்கும் தன்மையானது அரசின் நீண்ட காலச் சந்தைக் கடன்களை மீறிய அளவில் குறுகிய காலச் செலவினத்தை மேற்கொள்ள மத்திய அரசிற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தேசிய செய்திகள்

 

இந்தியத் தண்டனைச் சட்டத்தை செயல்படுத்துதல்

  • உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு நோயைப் பரப்பும் எவ்விதமான நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபடும் நபர்களுக்கு (malignantly) எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC – Indian Penal Code) பிரிவு 269 மற்றும் பிரிவு 270 ஆனது செயல்படுத்தப்படுகின்றது.
  • பிரிவு 269 ஆனது 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கின்றது. பிரிவு 270 ஆனது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்கின்றது.
  • பிரிவு 270ல் “கேடு விளைவிக்கின்ற“ என்ற சொற்றொடரானது குற்றம் சுமத்தப்பட்டவர் நோயைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயேச்  செயல்பட்டார் என்பதைக் குறிக்கின்றது.

கரோனா 

  • கரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு கரோனா என்கிற சுயாதீன படமொன்றை எடுத்துள்ளார் கனடாவைச் சேர்ந்த மொஸ்தஃபா கேஷ்வரி.

திட்டங்கள்

 

நிறுவனங்கள் புதிய தொடக்கத் திட்டம்

  • மத்தியப் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகமானது “நிறுவனங்கள் புதிய தொடக்கத் திட்டம், 2020” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இது “வரையறுக்கப்பட்ட பொறுப்புடைமைப் பங்களிப்புத் திட்டம், 2020”  (LLP – Limited Liability Partnerships) என்ற திட்டத்தைப் புதுப்பித்துள்ளது.
  • இது கோவிட் – 19 தொற்றின் காரணமாகச் சட்டத்தின் படி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் LLP ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கொவிட் 19 பரவலைத் தொடர்ந்து, சட்டத்தை மதிக்கும் நிறுவனங்களுக்கும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்களுக்கும் நிவாரணம் அளிக்க இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக,  ‘நிறுவனங்கள் புதிய தொடக்கம் திட்டம், 2020’ஐ அறிமுகப்படுத்தி ஏற்கனவே உள்ள ‘வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில் தீர்வு திட்டம், 2020’ஐ திருத்தி, நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு வாய்ப்பை பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் அளித்துள்ளது. .
  • கொவிட் 19ஆல் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொது சுகாதார நிலைமையினால், நிறுவனங்களின் கணக்குத் தாக்கல் சுமையினைக் குறைக்கவும், தாக்கல்களை எளிதாக்கவும் ‘நிறுவனங்கள் புதிய தொடக்கம்’ திட்டமும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில் தீர்வு திட்டமும் உதவும்.
  • இந்த திட்டங்களின் காலவரையான ஏப்ரல் 1, 2020 தொடங்கி 30 செப்டம்பர் 2020 வரை, நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டுத் தொழில்கள், நிறுவனங்களின் பதிவாளரிடம் செய்யும் தாமதமான தாக்கல்களுக்கான கூடுதல் தாக்கல் தொகை ஒரு முறை தள்ளுபடி செய்யப்படுவதே இந்த இரு திட்டங்களில் சிறப்பம்சமாகும்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா

  • கரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்புள்ள நிவாரணத் தொகைத் திட்டத்தை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இது அரசு மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார நல மையங்களில் கோவிட் – 19 தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதார நலப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
  • துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவ அறைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆஷா திட்டப்  பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், தொழில் நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இந்த சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளடங்குவர்.
  • கோவிட் – 19 தொற்று நோய்க்குச் சிகிச்சையளிக்கும் எந்தவொரு மருத்துவப் பணியாளரும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிட்டால், அவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி

  • விவசாயிகளுக்கு வருமான ஆதரவு தரும் திட்டமான பிரதான் மந்திரி சம்மான் நிதியானது 2019 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது பாதகமான வானிலை மற்றும் குறைவான விலைகள் வழங்கப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடையே நிலவும் அமைதியின்மைக்கு தீர்வு காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் அரசானது விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாயை வழங்கும்.
  • விவசாயிகள் 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வருமான நிதியுதவியான ரூ.6,000 என்ற தொகையிலிருந்து ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக ரூ.2000 ஐப் பெற இருக்கின்றனர்.
  • 8.7 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2000 நிதித் தொகையானது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் வழங்கப் படுகின்றது.

எதிர் சுழற்சி மூலதன இடையகம் (CCyB) 

  • CCyB (countercyclical capital buffers) ஆனது பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் சுழற்சித் தொடர் அபாயங்களினால் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக வங்கித் துறையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியானது எதிர் சுழற்சி மூலதன இடையகத்தின் செயல்படுத்துதலை ஒத்தி வைத்துள்ளது.
  • இந்த விதியானது முதன்முறையாக பேசல் – III என்ற விதிமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பேசல் – III என்பது உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளினால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு தன்னார்வ நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.
  • இந்த நடவடிக்கைகள் 2007 – 09 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில் நிகழ்ந்த நிதியியல் நெருக்கடிகளுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக வங்கித் துறை ஒழுங்குமுறை குறித்த சர்வதேச வங்கித்  தீர்வுகள் அமைப்பின் “பேசல் குழுவினால்” ஏற்படுத்தப் பட்டது. இது வங்கிகளின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதையும் நிதியியல் அமைப்பிற்குள் இருக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எதிர் சுழற்சி மூலதன இடையகத்தை செயல்படுத்துதல்

பிப்ரவரி 5, 2015 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியால் எதிர்-சுழற்சி மூலதன இடையக (சிசிபி) கட்டமைப்பை அமைத்தது, அதில் சிசிபி சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தப்படும் என்றும், முடிவு பொதுவாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. முன்பே அறிவிக்கப்பட வேண்டும். இந்த கட்டமைப்பானது கடன்-க்கு-ஜி.டி.பி இடைவெளியை முக்கிய குறிகாட்டியாகக் கருதுகிறது, இது மற்ற துணை குறிகாட்டிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. CCyB குறிகாட்டிகளின் மறுஆய்வு மற்றும் அனுபவ பகுப்பாய்வின் அடிப்படையில், ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு முந்தைய காலத்திற்கு CCyB-ஐ செயல்படுத்துவது அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முடக்கத்தின் போது சிறப்புப் பொருளாதார மண்டலம்

  • SEZகள் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005ன் கீழ் SEZகளைச் செயல்படுத்த மாநிலங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
  • இந்தச் சட்டமானது ஏற்றுமதி ஊக்குவிப்பில் மாநில அரசுகளின் பங்கை வரையறை செய்கின்றது.
  • நாடு முடக்கத்தின் போது நாட்டில் உள்ள ஏறத்தாழ 280 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ – Special Economic Zone) மருந்துகள், மருந்து சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 18%  என்ற அளவிற்குப் பங்களிக்கின்றன. 
  • 2019-20 ஆம் ஆண்டில் SEZன் ஏற்றுமதியானது அதிகரித்து, 110 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Check All Month Current Affairs

Download April 1 to 6 Current Affairs PDF 

 

April 1 to 6 Current Affairs PDF 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

NoDateDownload link
11.01.2020Download PDF
22.01.2020Download PDF
33.01.2020Download PDF
44.01.2020Download PDF
55.01.2020Download PDF
66.01.2020Download PDF
77.01.2020Download PDF
88.01.2020Download PDF
99.01.2020Download PDF
1010.01.2020Download PDF
1111.01.2020
1212.01.2020
1313.01.2020
1414.01.2020
1515.01.2020
1616.01.2020
1717.01.2020
1818.01.2020
1919.01.2020
2020.01.2020
2121.01.2020
2222.01.2020
2323.01.2020Download
2424.01.2020Download
2525.01.2020Download
2626.01.2020Download
2727.01.2020Download
2828.01.2020Download
2929.01.2020Download
3030.01.2020Download
3131.01.2020Download

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d