Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(February 12th – 21st Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Feb 12th – 21st Current Affairs.
முக்கியமான நாட்கள்
அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் – பிப்ரவரி 11
- இந்தத் தினமானது 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
- பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அறிவியல் துறையில் சமமான அணுகலை வழங்குதல் மற்றும் அறிவியல் துறையில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவை இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
- 2020 தீம் : “அனைவரையும் உள்ளடக்கிய பசுமை வளர்ச்சிக்காக அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பு” என்ற கருப்பொருளில் அனுசரிக்கப்பட்டது.
இணையப் பாதுகாப்பு தினம்- பிப்ரவரி 11
- இணையப் பாதுகாப்பு தினமானது (Safer Internet Day – SID) நிகழ்நேரத் தொழில்நுட்பம் மற்றும்` கைபேசிகள் ஆகியவற்றின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கின்றது.
- இந்தத் தினமானது 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்சேஃப் அமைப்பால் உருவாக்கப்பட்டது.
2020 ஆண்டின் கருத்துரு, ‘சிறந்த இணையத்திற்காக ஒன்றிணைதல்’ என்பதாகும்.
உலக யுனானி தினம்
- யுனானி மருத்துவ முறையானது கிரேக்கத்தில் தோன்றியது.இது இந்தியாவில் ஏறக்குறைய பதினொன்றாம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் பாரசீகர்களால் அறிமுகப் படுத்தப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும், ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த நாளான பிப்ரவரி 11 அன்று, உலக யுனானி தினம் அனுசரிக்கப் படுகின்றது.அவர் ஒரு இந்திய யுனானி மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
இந்த நாளின் முக்கிய நோக்கமானது யுனானி மருத்துவ முறை, அதன் நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் நோய் தீர்க்கும் தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதாகும்.
குறிப்பு
- ஹக்கீம் அஜ்மல் கானின் தாத்தா ஹக்கீம் ஷெரீப் கான் முகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்திற்கு மருத்துவராக இருந்தார்.
சர்வதேச டார்வின் தினம் – பிப்ரவரி 12
- பரிணாம உயிரியலின் தந்தையான சார்லஸ் டார்வினின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.இந்த நாளானது பரிணாம மற்றும் தாவர அறிவியலில் டார்வின் ஆற்றியப் பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றது.
- 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷையரில் உள்ள ஷ்ரூஸ்பரி என்ற இடத்தில் இவர் பிறந்தார்.
உலக வானொலி நாள் – பிப்ரவரி 13
- வானொலியின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது.
- 2011 ஆம் ஆண்டில் 36வது யுனெஸ்கோவின் பொது மாநாட்டில், பிப்ரவரி 13 ஆம் நாள் உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது.
- இந்த ஆண்டு உலக வானொலி தினத்தின் கருப்பொருள் – ‘வானொலி மற்றும் பன்முகத் தன்மை’ என்பதாகும்.
குறிப்பு
- 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகில இந்திய வானொலியானது உலகின் மிகப்பெரிய வானொலி வலையமைப்புகளில் ஒன்றாகும்.
தேசிய மகளிர் தினம் – பிப்ரவரி 13
- இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகின்ற சரோஜினி நாயுடுவின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதியை தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கின்றது.1925 ஆம் ஆண்டில் சரோஜினி நாயுடு இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தார்.
- 1925 ஆம் ஆண்டில் சரோஜினி நாயுடு இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தார்.
குறிப்பு
- அவர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1949 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வரை ஐக்கிய மாகாணங்களின் முதலாவது ஆளுநராகப் பணியாற்றினார்.
உலக எறும்புத் திண்ணி தினம் – பிப்ரவரி 15
- எறும்புத் திண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தனித்துவமான உயிரினங்களை அழிவிலிருந்துப் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3வது சனிக்கிழமையன்று உலக எறும்புத் திண்ணி தினமானது அனுசரிக்கப்பட இருக்கின்றது.
- 9வது உலக எறும்புத் திண்ணி தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று அனுசரிக்கப்பட்டது.
மண் வள அட்டை தினம் – பிப்ரவரி 19
- பிரதமர் நரேந்திர மோடி மண் வள அட்டை திட்டத்தை 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானில் உள்ள சூரத்கரில் தொடங்கினார்.
- அனைத்து விவசாயிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் வள அட்டைகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இதன் மூலம் விவசாயிகள் பொருத்தமான உரங்களை மண்ணில் சேர்த்து விளைச்சலை அதிகரிக்க முடியும்.
- இதன் மூலம் விவசாயிகள் பொருத்தமான உரங்களை மண்ணில் சேர்த்து விளைச்சலை அதிகரிக்க முடியும்.
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2015 ஆம் ஆண்டினை “சர்வதேச மண் ஆண்டு” என்று அறிவித்தது.
உலக சமூக நீதி தினம் பிப்ரவரி -2௦
- பாலின சமத்துவம், பழங்குடியின மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக உலக சமூக நீதி தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
- 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் அன்று, பொதுச் சபையானது பிப்ரவரி 20 ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சமூக நீதி தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
- முதலாவது உலக சமூக நீதி தினமானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று அனுசரிக்கப் பட்டது.
- இந்த ஆண்டின் கருப்பொருள் “சமூக நீதியை அடைவதற்காக ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளியைத் தடுப்பது” என்பதாகும்.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
தேசிய செய்திகள்
பொருளாதாரத்தில் வளரும் பல்கலைக்கழகங்கள் பட்டியல்
- Times Higher Education (THE) எனப்படும் பத்திரிகை நிறுவனம், உலகில் வெவ்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முதல் 100 இடங்களில் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.அந்த வகையில்,மொத்தம் 533 பல்கலைக்கழங்களின் பட்டியலில் 56 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்தன. அதில் முதல் 100 இடங்களுக்குள் 11 இந்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய அளவில் 16-வது இடம் பிடித்துள்ளது.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
- தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்,.ஒவ்வோர் ஆண்டும் பிப்.24-ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும்.
முக்கிய அறிவிப்புகள்
1 )அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இத்தொகை ஏதுவாக அமையும்.
2) பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர்,அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், அரசு தாய் தந்தை நிலையிலிருந்து அவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.
3) தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.
4) பெண் சிசு கொலைகளை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டத்தினை நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில், பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனைகருத்திற்கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்.
அறிவியல் செய்திகள்
நவீன செயற்கை கோள்கள்
- பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இஸ்ரோ சார்பில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மார்ச், ஜூன் மாதங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இவை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
- முதல்கட்டமாக மார்ச் முதல் வாரத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் எடை 2,300 கிலோ. ஆயுட்காலம் 7 ஆண்டுகள். பூமியில் இருந்து 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் புவிவட்டப் பாதையில் ஜிஐசாட்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது.
கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்
- கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. அதனால் கோவை குண்டுவெடிப்பு நிகழ்வின் 22ஆம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
‘மனித விமானம்’
- துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உடல் அசைவுகள் மூலம் இயங்கும் ஜெட் விமானத்தை இயக்கியுள்ளது.இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் துபாயில் உள்ள புகழ்பெற்ற ஜுமேரா கடற்கரையில் நடந்தது.
- பிரான்ஸை சேர்ந்த ‘ஸ்கை டைவிங்’ வீரர் வின்ஸ் ரெபட் (34), சுவிட்சர்லாந்து விமானி வெஸ்ரோஸ்லியின் ஆராய்ச்சியில் உருவான ஜெட் இன்ஜின் இறக்கையை முதுகில் அணிந்து கொண்டு சாகசம் நிகழ்த்தினார். இதுவரை உயரமான இடத்தில் இருந்தே ‘மனித விமானம்’ பறக்கவிடப்பட்டது. துபாய் சாகச நிகழ்ச்சியில், முதல்முறையாக தரையில் இருந்து செங்குத்தாக வின்ஸ் ரெபட் மேலே பறந்தார்.மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் பறக்கும் இந்த விமானத்தில், விமானி வின்ஸ் ரெஃபெட் 3 நிமிட சோதனை ஓட்டத்தில் சுமார் 1000 மீட்டர் உயரம் பறந்தார்
- சுவிட்சர்லாந்து விமானப்படையின் முன்னாள் போர் விமானி வெஸ்ரோஸ்லி (60). அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ‘மனித விமானத்தை’ உருவாக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார்.
விளையாட்டு செய்திகள்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
- டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.இதில் ஆடவருக்கான 87 கிலோ கிரீக்கோ-ரோமன் எடைப்பிரிவுக்கான போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் கிரிகிஸ்தான் வீரர் ஆசாத் சாலிடினோவை எதிர்கொண்டு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
குறிப்பு
- கடந்த 27 ஆண்டுகளில் மல்யுத்தத்தில் கிரீக்கோ ரோமன் பிரிவில் இதுவரை யாரும் தங்கம் வென்றதில்லை. முதல்முறையாக அந்த பிரிவில் சுனில் குமார் தங்கம் வென்றுள்ளார்.
- 55 கிலோ எடைப்பிரிவில் கிரிக்கோ-ரோமன் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் ஹலாகுர்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
- மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாக் ஷி மாலிக் ஜப்பானின் நவோமி ருகியை எதிர்த்து வெள்ளிப் பதக்கமும், 53 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத் ஜப்பானின் மயூமுகைதாவை எதிர்த்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பெல்லியப்பா
- தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. 1959-ல் மெட்ராஸ் என்ற பெயரில் இருந்த போது தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக இவர் முதன் முதலாக அறிமுகமானார். 1974 வரை 94 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ளார்.
- டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
கெய்ன்ஸ் கோப்பை செஸ் தொடர்
- கெய்ன்ஸ் கோப்பை செஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிசில் நடந்தது.கெய்ன்ஸ் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சக நாட்டு வீராங்கனை ஹரிகாவுடன் மோதி சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதன் மூலம் மொத்தம் 6 புள்ளிகள் பெற்ற கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் கோனேரு ஹம்பி உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு ரூ.32 லட்சம் பரிசாக கிடைத்தது.
குறிப்பு
5.5 புள்ளிகள் பெற்ற சீன வீராங்கனை வென்ஜூன் ஜூ 2-வது இடத்தை பிடித்தார்.
ஒலிம்பிக் போட்டி
- பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் ராஞ்சியில் நடந்தது.இந்த போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தானை சேர்ந்த பாவ்னா ஜாட் பந்தய தூரத்தை 1 மணி 29.54 வினாடியில் கடந்தார். இது புதிய தேசிய சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்துள்ளார்.
- இதன்மூலம் பாவ்னா ஜாட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது.
தேசிய ஸ்குவாஷ் போட்டி
- சென்னையில் நடந்த சீனியர்களுக்கான தேசிய அளவிலான 77-வது ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா 18-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
- ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷல் 13-வது சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சர்தார் வல்லபாய் படேல் மைதானம்
- குஜராத் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் மோதிராவில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த மைதானம் சுமார் ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற உள்ளது.மோதிரா மைதானத்தின் இருக்கை களின் எண்ணிக்கை 1,10,000 ஆகும். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தின் இருக்கைகளை விட மோதிரா மைதானத்தில் 10 ஆயிரம் இருக்கைகள் அதிகமாக உள்ளது.
விருதுகள்
லாரியஸ் விருது
- விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.
- 2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் பெற்றார்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறந்த அணிக்கான விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியின் கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி, லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.
- ஜெர்மனி கார் பந்தய வீராங்கனை சோபியா புளோர்ஷ் (19 வயது), இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரே, அமெரிக்க நீச்சல் வீரர் நாதன் அட்ரியன் உட்பட 6 பேர் விபத்து/காயத்தில் இருந்து மீண்டு மன உறுதியுடன் மீண்டும் களமிறங்கியதற்காக சிறப்பு விருது பெற்றனர்.
- 2011ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி உலக கோப்பையை வென்ற பின்னர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த அதியற்புத தருணமாக இது தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் சச்சினுக்கு லாரியஸ் விருது வழங்கப்பட்டது.
ஒப்பந்தம்
3000 மெட்ரிக் டன் குப்பையை அகற்ற ஸ்பெயின் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம்
- சென்னை மாநகரில் 7 மண்டலங்களில் சேகரிக்கப்படும் 3000 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளை அகற்ற ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நியமனங்கள்
ஆப்கானிஸ்தான் அதிபர்
- ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டனின் புதிய நிதியமைச்சர்
- இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் (39 வயது)பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Check All Month Current Affairs
Download Feb 12 to 21 Current Affairs PDF
Feb 12 to 21 Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |