Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(February 1st – 4th Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Feb 1st – 4th Current Affairs.
முக்கியமான நாட்கள்
இந்திய கடலோரக் காவல் படை தினம் – பிப்.1
- கடற்படையிலிருந்து இந்திய கடலோரக் காவல் படை தனியாகக் கட்டமைக்கப்பட்டு பிப்.1, 1977-ஆம் ஆண்டுமுதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்.1 கடலோரக் காவல்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு நோக்கம் ‘நாங்கள் காப்போம்’
உலக ஈரநிலங்கள் தினம் (world Wetlands Day)
- ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிப்ரவரி 2ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி அன்று சர்வதேச அளவில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, ‘ஈரநிலங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கம்’ என்பதாகும்.இந்த தினத்தின் மையக்கரு “ஈரநிலங்கள் மற்றும் பல்லுயிர்” ஆகும்.
- The theme for 2020 WWD is “Wetlands and Biodiversity”
உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (world Cancer DAY)
- புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பிப்.4-ம் தேதியை உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
- உலகளவில் புற்றுநோய் பாதித்த பெண்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
- மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகளவில் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
- உலக சுகாதார நிறுவனம் நடப்பு ஆண்டு `I am and I will’ (என்னால் முடியும்) என்ற பிரகடனத்துடன் புற்றுநோய் விழிப்புணர்வுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
This year’s theme for world cancer day is – I am and I will
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
விளையாட்டு செய்திகள்
தங்க மங்கை சாம்பியன்ஷிப் போட்டி
- சுவீடன் நாட்டில் உள்ள போரஸ் நகரில் தங்க மங்கை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 75 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்திய ஜூனியர் மகளிர் அணியினர் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது. அதேவேளையில் இளையோர் அணி ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கம்கைப்பற்றியது.தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனைகள் 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களை வென்று குவித்தனர்.
- ஜூனியருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற ஹரியாணாவின் பிராச்சி தங்கர், தொடரின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார். 54 கிலோ எடைப்பிரிவில் எத்தோபி சானு வாங்ஜாம்,66 கிலோ எடைப் பிரிவில் லாஷு யாதவ், 80 கிலோ எடைப் பிரிவில் மஹி ராகவ் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
- இளையோர் பிரிவில் 54 கிலோ எடைப் பிரிவில் முஸ்கான் தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் சான்யா நெகி (57 கிலோ), தீபிகா (64 கிலோ), முஸ்கான் (69 கிலோ), சாக்சி ஜஹ்தலே (75 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். ஜூனியர் பிரிவில் ஜான்ஹவி சூரி (46 கிலோ), ரூடி லால்மிங்முவானி (66 கிலோ), தனிஷ்கா பாட்டீல் (80 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், தியா நெகி (60 கிலோ) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்தத் தொடரில் சிறந்த அணிக்கான கோப்பையையும் இந்தியா வென்றது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம்
- அமெரிக்காவின் சோபியா கெனின் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை 2020 வென்றுள்ளார்.
- அவர் இறுதி 4-6,6-2,6-2 என்ற கணக்கில் கார்பைன் முகுருசாவை தோற்கடித்தார். 2008 ஆம் ஆண்டில் மரியா ஷரபோவாவுக்குப் பிறகு இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற போட்டியாளர் இவர் ஆவர்.
தேசிய ஜூனியர் வாலிபால் போட்டி
- 46-வது தேசிய ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டையில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி, உத்தரபிரதேசத்தை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
- அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி 3-1 என்ற செட் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது. பதக்கம் வென்ற இரு அணிகளுக்கும் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விருதுகள்
மாத்ருபூமி புத்தக விருது
- பிரபல இந்தி-கவிஞர்-நாவலாசிரியர் வினோத் குமார் சுக்லா (83 வயது) தனது மொழிபெயர்க்கப்பட்ட “ப்ளூ இஸ் லைக் ப்ளூ” புத்தகத்திற்கான 2020 ஆம் ஆண்டின் மாத்ருபூமி புத்தக விருதைப் பெற்றுள்ளார்.
- “ப்ளூ இஸ் லைக் ப்ளூ” இல் உள்ள கதைகள் அரவிந்த் கிருஷ்ணா மெஹ்ரோத்ரா மற்றும் சாரா ராய் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆசியா-பசிபிக்’ விருது
- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ‘2020 ஆம் ஆண்டின் மத்திய வங்கியாளர், ஆசியா-பசிபிக்’ விருதை வென்றார்.இந்த விருது “சிறந்த” மத்திய வங்கியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
சாலை பாதுகாப்பு விருது
- டெல்லி போக்குவரத்துக் கழகம் 2018-19 ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு விருதை வென்றது.மிகக் குறைந்த விபத்து விகிதத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் ஸ்ரீ நிதின் ஜெய்ராம் கட்கரி இந்த விருதை டி.டி.சி ஸ்ரீ மனோஜ் குமாரின் நிர்வாக இயக்குநருக்கு வழங்கினார்.
சாதோ விருது
பாலிவுட் நடிகர் வாகீதா ரெஹ்மான் 2018 ஆம் ஆண்டிற்கான மத்திய பிரதேச (எம்.பி.) அரசாங்கத்தின் தேசிய கிஷோர் குமார் சம்மனுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி சாதோ விருது வழங்குவார்.
நோபல் பரிசுக்கு கிரேட்டா துன்பர்க் பெயர் பரிந்துரை
- 2018 ஆகஸ்ட் மாதம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளி மாணவர்கள் போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே கிரேட்டா துன்பெர்க் என்ற இளம் மாணவி தொடங்கினார்.அந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோரை பங்கேற்கச் செய்ததில் கிரேட்டா முக்கிய உந்துசக்தியாக திகழ்ந்தார்.
- இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு கிரேட்டா துன்பெர்க் மற்றும் ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ அமைப்பின் பெயரை ஸ்வீடன் நாட்டின் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் ஜென்ஸ் ஹோலம், ஹக்கன் ஸ்வென்னலிங் ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர்.
டைகான்’ விருது வழங்கும் விழா
- மும்பையில் நடைபெற்ற டைகான்ஆண்டு விழாவில் ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- தொழில் துறை வளர்ச்சிமூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியதற்காகவும் ரத்தன்டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதாக டைகான் அமைப்பின் மும்பை பிரிவு தலைவர் அதுல் நிஷார் தெரிவித்துள்ளார்.
நியமனங்கள்
ஒலிம்பிக்கின் இந்தியத் தூதர்
- டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடக்கிறது
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் நல்லெண்ணெத் தூதராக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இருக்கக் கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.
இந்தியாவின் பாராலிம்பிக்ஸ் கமிட்டி தலைவர்
இந்தியாவின் தனி பெண் பாராலிம்பிக் பதக்கம் வென்ற தீபா மாலிக் இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தீபா மாலிக், 2016 ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் எஃப் -53 போட்டியில் வெள்ளி வென்றார். அவருக்கு பத்மஸ்ரீ விருது, ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது, மேலும் 2011 ஆம் ஆண்டில் ஐபிசி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி வென்றார்.
ஈராக்கின் புதிய பிரதமர்
முகமது தவ்ஃபிக் அல்லாவி, ஈராக்கின் புதிய பிரதமராக அதன் ஜனாதிபதி பர்ஹிம் சாலிஹால் நியமிக்கப்பட்டார். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்பாட்டங்களால் 2019 நவம்பரில் ராஜினாமா செய்த ஆதில் அப்துல்-மஹ்திக்கு பதிலாக முகமது தவ்ஃபிக் அல்லாவி இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
செல்போன் செயலி’
போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘செல்போன் செயலி’
தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி மாவட்ட காவல்துறையினருக்காக ‘tenkasi district traffic police’ (டி.டி.டி.பி) என்றசெல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலியில் போட்டோ, 10 விநாடிகள் வரைவீடியோ எடுக்கும் வசதி, ஜிபிஆர்எஸ் வசதி ஆகியவை உள்ளன.
பயன்பாடு : ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றால், அவரை தடுத்து நிறுத்த வேண்டியதில்லை. பைக்கில் அவர் செல்வதை வீடியோவாக பதிவு செய்தவுடன், அவரது படமும், வண்டியின் எண்ணும் போலீஸ்காரரின் செயலியில்பதிவாகிவிடும். வாகன பதிவு எண்ணைக் கொண்டு, அவரது முகவரியைக் கண்டறிந்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
புத்தகம்
காந்தி கொலை குறித்து ‘தி இந்து’வின் புத்தகம்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தி இந்து’வின் சார்பில் சிறப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ‘மகாத்மா காந்தி படுகொலை – விசாரணையும் தீர்ப்பும் 1948 -49’ என்ற புத்தகத்தை புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ‘தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட்’ தலைவர் என்.ராம் முன்னிலையில் வெளியிட்டார்.
திட்டம்
ஜல் ஜீவன் திட்டம்
- நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் உள்ளூர் நீர் ஆதாரங்கள் அதிகரிக்கவும் ஏற்கெனவே உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அத்துடன் மழை நீர் சேகரிப்பு மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் “இந்த திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3.6 லட்சம் கோடி செலவிடப்படும். இதில் அடுத்த நிதியாண்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கப்படும்” என்றார்.
Check All Month Current Affairs
Download Feb Current Affairs PDF
Feb 1 to 4 Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |