Daily Current Affairs February 22nd to 29th CA For All Exams -2020

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(February 22nd – 29th Current Affairs  2020 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Feb 22nd – 29th  Current Affairs. 

முக்கியமான நாட்கள்

 

 

மத்திய கலால்(உற்பத்தி) வரி தினம் – பிப்ரவரி 24 

 • மத்திய கலால்(உற்பத்தி) வரி தினம் 24 பிப்ரவரி 2019 அன்று கொண்டாடப்பட்டது
 • மத்திய கலால் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
 • சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி செலுத்துவதின் முக்கியத்துவத்தை இந்த நாள் உணர்த்துகிறது.
 • அமெரிக்க கணிதவியலாளர் ஆன கேத்ரின் ஜான்சன் பிப்ரவரி 24, 2020 அன்று காலமானார். அவருக்கு வயது 101. கேத்ரின் பிரபலமான நாசா கணிதவியலாளர் ஆவார்.விண்வெளி பயணம் தொடர்பான அவரது கணக்கீடுகள் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தன.

உலக தன்னார்வ தொண்டு நாள் -பிப்ரவரி 27   

 • ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்கும் உலகளாவிய மக்களை ஊக்குவிப்பதற்காக உலக தன்னார்வ தொண்டு நாள் பிப்ரவரி 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
 • அரசு சாரா அமைப்பு  துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். 

தேசிய அறிவியல் தினம் National Science Day 2020  – பிப்ரவரி 28   

 • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
 • தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு 1986-ம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது. 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.நடப்பு 2020 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் கொள்கையாக ‘அறிவியல் பெண்கள்’ (Women in Science) அறிவிக்கப்பட்டுள்ளது.
 • புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தேசிய அறிவியல் தினம் முதல்முறையாகக் கொண்டாடப்பட்டது. 
 • 5 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 பள்ளிகளைச் சேர்ந்த 112 குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

அறிவியல் செய்திகள்  

பி.எஸ்.6 ரக எரிபொருள் 

 • அசுத்தமான எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் தூய்மையான பெட்ரோல், டீசல் விற்பனை இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
 • தற்போது பயன்பாட்டில் இருக்கும் யூரோ-4 கிரேடு ரக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டு,வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில், பி.எஸ்.6 ரக எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் சஞ்ஜீவ் சிங் கூறினார்.பி.எஸ்.6 ரக எரிபொருளில் கந்தகத்தின் அளவு 10 பிபிஎம் மட்டுமே இருக்கும்.
 • எரிபொருளில் சல்பர் அளவு அதிகமாக இருந்தால், சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருக்கும். தற்போது உள்ள பிஎஸ் 4 எரிபொருளில் இது சல்பர் ஒரு மில்லியனுக்கு 50 பங்கு உள்ளது. பிஎஸ்6 எரிபொருளில் இது 10 பங்கு மட்டுமே இருக்கும். 

“இரண்டாவது சந்திரன்”

 • பூமிக்கு மிக அருகில் நிலவைப் போலவே மற்றொரு பொருள் தென்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 2020 CD3 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொருள் கடந்த மூன்று ஆண்டுகளாக பூமிக்கு மிக அருகில் உள்ளது. அவை “மினி மூன்” அல்லது கிரகத்தின் “இரண்டாவது சந்திரன்” என்று அழைக்கப்படுகின்றன.
 •  இது உண்மையில் ஒரு சிறுகோள், ஒரு காரின் அளவு தான் இருக்கும்; அதன் விட்டம் சுமார் 1.9-3.5 மீ. நமது நிரந்தர சந்திரனைப் போலன்றி, இந்த மினி நிலவு தற்காலிகமானது;
 • 2020 சிடி 3 என பெயரிடப்பட்ட இந்த மினி நிலவை பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு அரிசோனாவில் நாசாவின் கேடலினா ஸ்கை சர்வேயின் (சிஎஸ்எஸ்) காக்பர் வியர்சோஸ் மற்றும் டெடி ப்ரூய்ன் கண்டுபிடித்தனர். சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறிய பிளானட் மையம் இந்த கண்டுபிடிப்பை ஒப்புக் கொண்டது:

நியமனங்கள்  

மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரி

 • தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 • தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறிப்பிட்ட இடைவெளியில் 6 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.தமிழக மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின்  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகர்

 • பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமர்ஜீத் சின்ஹா ​​மற்றும் பாஸ்கர் குல்பே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். .

 தெற்கு சூடான் துணைத் தலைவர் 

 • தெற்கு சூடானின் துணைத் தலைவராக ரிக் மச்சார் பதவியேற்றார். இவர் அரசாங்கத்தில் 36 மாத காலத்திற்கு அவர் பணியாற்றுவார்.இவர் தெற்கு சூடானின் முதல் துணை தலைவர்.

இந்திய ரோயிங் கூட்டமைப்பு  தலைவர் (Rowing Federation of India – RFI) 

 • இந்திய ரோயிங் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கே.கோவிந்த்ராஜின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டன.  இந்த கூட்டமைப்பு தலைவராக ராஜ்லக்ஸ்மி சிங் தியோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது நான்காவது முறையாகும்.

பிரான்ஸ் நாட்டு இந்திய தூதர் 

 • பிரான்சிற்கான  இந்தியாவின் அடுத்த தூதராக ஸ்ரீ ஜாவேத் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார், இவருக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்கான தூதரக வினய் மோகன் குவாத்ரா பதவி வகித்தார்.
 • இந்நிலையில் வினய் மோகன் குவாட்ரா நேபாளத்தின் தூதராக நியமிக்கப்படவுள்ளார்.  தற்போது நேபாளத்தின் தூதராக மஞ்சீவ் சிங் பூரி உள்ளார்.

NHPC -இந்திய நீர் மின் உற்பத்தி நிறுவனம் 

 • NHPC ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய நீர் மின் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
 • NHPC  லிமிடெட் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநராக அபய்  குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய பிரதமர்

 • உலகின் முத்த அரசாங்கத் தலைவர் மகாதீர் பின் மொஹமட்  பிப்ரவரி 24,2020 அன்று மலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மலேசியாவின் மன்னர் பஹாங்கின் அல்-சுல்தான் அப்துல்லா ஏற்றுக்கொண்டார்.
 • மலேசியாவின் பிரதமராக மொகிதின் யாசினை அந்நாட்டு மாமன்னர் அப்துல்லா நியமித்துள்ளார்.மார்ச் 1ஆம் தேதி, 72 வயதாகும் மொகிதின் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.மொகிதின் யாசின் மலேசியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமர் ஆவார்.

இங்கிலாந்து அட்டர்னி ஜெனரல் 

 • பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனின் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் இங்கிலாந்தின் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி சுல்லா பிராவர்மேன், லண்டனில் உள்ள ராயல் கோர்ட்ஸ் ஆஃப் ஜஸ்டிஸில் பதவியேற்றார்.

மும்பை பல்கலைக்கழக ஆலோசனைக் குழுவின் தலைவர் 

 • தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை பல்கலைக்கழக ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். மகாராஷ்டிரா ஆளுநர்மற்றும்  மாநில பல்கலைக்கழகங்களின் அதிபருமான பகத் சிங் கோஷ்யரி ரத்தன் டாடாவை பரிந்துரைத்தார்.

நெதர்லாந்து நாட்டின் கவுரவ துணைத் தூதர் 

தமிழகத்துக்கான நெதர்லாந்து நாட்டின் கவுரவ துணைத் தூதராக கோபால் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள டிவிஎஸ் கேபிடல் பண்ட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக கோபால் சீனிவாசன் உள்ளார். 

வெனிசுலா தூதர்   

வெனிசுலாவின் தூதராக அபிஷேக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். அண்மையில் காலமான வெனிசுலாவின் தூதர் ராஜீவ் குமார் நேபாலுக்குப் பதிலாக அபிஷேக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைநகரம் – கராகஸ்

ஆட்சி மொழி – எசுப்பானியம்

நாணயம் வெலெசுவேலாவின் பொலிவார்

 

 மாநாடு

 ‘சர்வதேச நீதித்துறை மாநாடு-2020’

 • டெல்லியில் ‘சர்வதேச நீதித்துறை மாநாடு-2020’ தொடக்க நிகழ்ச்சி (பிப்-22) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி சரத் போப்டே ஆகியோர் கலந்து கொண்டனர். பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராபர்ட் ரீட் மாநாட்டில் சிறப்புரையாற்றுவார்.
 • 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதித்துறை மாநாட்டின் கருப்பொருள்  “நீதித்துறை மற்றும் மாறிவரும் உலகம்”.

‘தேசிய மாநாடு 2020,

 • தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில்  நடந்தது. 
 • நோக்கம் :கடலோர பேரழிவு அபாயங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவது 

தேசிய செய்திகள்  

இந்தியாவின் மிக உயர்ந்த கப்பல் பாலம்

 • இந்தியாவின் மிக உயர்ந்த கப்பல் பாலம் வடகிழக்கு ரயில்வே கட்டமைப்பு அமைப்பு கட்டியுள்ளது. 
 • மணிப்பூரின் தமெங்லாங் (Tamenglong) மாவட்டத்தில் மக்ரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் 100 மீ  உயரம் மற்றும் ரூ.283.5 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

 22 வது சட்ட ஆணையத்தின் இந்திய அரசியலமைப்பு சட்டம்

 • 22 வது சட்ட ஆணையத்தின் அரசியலமைப்பை அரசு முறையாக அறிவித்துள்ளது. இந்த சட்டக் குழு சிக்கலான சட்ட சிக்கல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவுறுத்தும் மற்றும் மூன்று வருட காலத்திற்கு இது செயல்படும் .
 • சட்ட ஆணையத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி  ஒப்புதலுடன், அரசு குழு மற்றும் பிற உறுப்பினர்களுக்கு  தலைவரை நியமிக்கும்.

ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டை

 • ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம்  திகழ்கிறது.உத்தரப்பிரதேசத்திற்குப் பிறகு ஒருங்கிணைந்த ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது மாநிலமாகவும் மத்தியப் பிரதேசம் திகழ்கிறது.
 • ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்கான ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டுகள் ஒவ்வொன்றும் க்யூஆர் குறியீட்டை கொண்டிருக்கும்.இது அட்டைகளில் அச்சிடப்பட்ட தரவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும். இந்த அட்டைகளில் பெயர், முகவரி, இரத்தக் குழு, பிறந்த தேதி, வைத்திருப்பவரின் புகைப்படம், செல்லுபடியாகும் காலம் மற்றும் பிற விவரங்கள் ஒரு சிப்பில் சேமிக்கப்படும்.

லோசர் திருவிழா

 • லோசர் திருவிழா என்பது திபெத்திய புத்த திருவிழாவாகும்.லடாக்கி அல்லது திபெத்தியப் புத்தாண்டை அனுசரிப்பதற்காக லடாக் ஒன்றியப் பிரதேசமானது லோசர் விழாவைக் கொண்டாடியது.
 • 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய லோசர் திருவிழாவானது நாட்டில் இமயமலை பரவியுள்ள அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு காலங்களில் அனுசரிக்கப் படுகின்றது.
 • இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் லோசர் திருவிழா (Losar Festival) கொண்டாடப்பட்டது.  திபெத்திய புத்தாண்டு என்று அழைக்கப்படும் லுனிசோலர் திபெத்திய காலண்டரின் முதல் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஐநா தீர்மானம் 

 • இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொன்று அழிக்கப்பட்டனர்.இலங்கை படை­யினர் மனித உரி­மை­களை மீறி­ய­தாகக் குற்றம் சுமத்தி, ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யினால் 2015ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கைக்கு இலங்கை அர­சாங்கம் ஆத­ரவை வழங்­கி­ய­து.
 • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“யுபிஐ சலேகா” பிரச்சாரம் 

 • நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI )  எளிதான, பாதுகாப்பான மற்றும் உடனடி கட்டண முறையாக ஊக்குவிப்பதற்காக “யுபிஐ சலேகா” என்ற  பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

பயிற்சி

ரோந்து கப்பல் ‘வஜ்ரா’ 

 • சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி தனியாா் கப்பல் கட்டும் தளம் உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தேவையான கப்பல்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடற்படை, கடலோரக் காவல்படைக்குத் தேவையான ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரூ.188 கோடியில் கட்டப்பட்டு வந்த புதிய ரோந்து கப்பல் பணிகள் நிறைவுற்று, கடலில் இறக்கி வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 • மத்திய கப்பல் மற்றும் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ மன்சுக் மாண்டவியா 6 வது கடலோர காவல்படை ரோந்து கப்பல் ‘வஜ்ரா’ தமிழ்நாட்டின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
 • கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ரோந்து கப்பல்கள் தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகமும் எல் அன்ட் டி நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதில் ஏற்கெனவே ‘விக்ரம்’, ‘வீரா’, ‘விஜயா’, ‘வராக’, ‘வரத்’ உள்ளிட்ட ரோந்து கப்பல்கள் ஏற்கெனவே கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
 • இந்நிலையில் கடந்த செப்டம்பா் மாதம் ஒப்படைக்கப்பட்ட ‘வரத்’ அனைத்து விதமான கருவிகளும் பொருத்தப்பட்ட நிலையில் அா்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் 6-ஆவது ரோந்து கப்பலான ‘வஜ்ரா’,வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்திரதனுஷ் – வி 2020

 • இந்திய விமானப்படை (IAF) மற்றும் பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) ஆகியவற்றுக்கு இடையேயான இந்தியா மற்றும் பிரிட்டனின் இருதரப்பு விமானப் பயிற்சியான “இந்திரதானுஷ்-வி” 2020 5 நாள் நீண்ட பதிப்பு உத்தரபிரதேசத்தில் உள்ள விமானப்படை நிலையமான ஹிந்தானில் தொடங்கப்பட்டுள்ளது.

 விருதுகள்

தேசிய மின்-ஆளுமை விருது

 • இந்திய ரயில்வேயின் குறை தீர்க்கும் போர்டல் ரெய்ட்மடாட், தேசிய மின்-ஆளுமை விருதுகளின் பிரிவு II இன் கீழ் வெள்ளி விருது வென்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற மின்-ஆளுமை தொடர்பான 23 வது மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.
 • ரெயில்மடாட் என்பது அனைத்து ரயில்வே வாடிக்கையாளர்களுக்கும் குறை தீர்க்கும், விசாரணை மற்றும் உதவி வழங்கும் ஒரு தளம் ஆகும்.

‘நிஷாங்க்’ சத்ரா விஸ்வகர்மா விருதுகள் 2019

 • புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 23 மாணவர்கள் குழுவுக்கு ‘சாத்ரா விஸ்வகர்மா’ விருதை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  டெல்லியில் வழங்கினார்.
 • 2017-ம் ஆண்டில் இருந்து ஏஐசிடிஇ சார்பில், விஸ்வகர்மா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்காக புத்தாக்க வகையிலும் அறிவியல்பூர்வமாகவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. 2019-ம் ஆண்டில் இருந்து ஐஎஸ்டிஇ மற்றும் அடல் புத்தாக்கத் திட்டமும் இணைந்து ஏஐசிடிஇயுடன் இந்த விருதை வழங்குகின்றன.
 • இந்தியா முழுவதிலும் இருந்து 6,676 குழுக்கள் இதற்காக தங்களின் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்திருந்தன. அதில் 3 கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 117 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இருந்து இறுதிக் கட்டமாக 8 பிரிவுகளின் கீழ் 23 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. 

SERB மகளிர் சிறப்பு விருது -2020

 • லக்னோவின் CSIR-CDRI  மூலக்கூறு ஒட்டுண்ணி மற்றும் நோயெதிர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நிதி குமார், SERB மகளிர் சிறப்பு விருது -2020 ஐ பெற்றார்.
 • SERB மகளிர் சிறப்பு விருது -2020 தேசிய அறிவியல் தினத்தின் போது இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்தியாவின் முன்னாள் கால்பந்து வீரர் அசோக் சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்.அவருக்கு 2019 ஆம் ஆண்டில் கால்பந்து கிளப் வழங்கிய மொஹுன் பாகன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது

 • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU ) துணைவேந்தர் டாக்டர் N. குமருக்கு ஐ.சி.ஏ.ஆர்- தேசிய ஆராய்ச்சி மையம், ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.
 • தமிழ்நாட்டின் திருச்சியில் நடைபெற்ற வாழைப்பழத்திற்கான சர்வதேச மாநாட்டில் இந்த விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தா கர்மயோகி விருது 2020

 • இந்திய வன மனிதன் என்று அழைக்கப்படும்   ஜதவ் பயெங்கிற்கு சுவாமி விவேகானந்தா கர்மயோகி விருது 2020 டெல்லியில் வழங்கப்பட்டது. இது ஆறாவது விவேகானந்தா கர்மயோகி விருது ஆகும். பரிசு தொகையாக  ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
 • காடு வளர்ப்பின் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் காடுகளை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அவர் கௌரவிக்கப்படுகின்றார்.இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் தனித்துவமான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக கர்மயோகி விருதானது அவருக்கு வழங்கப் படுகின்றது.
 • 2015 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

லிம்கா சாதனைகள் புத்தகம் (Limca Book of Records)

 • கொல்கத்தாவைச் சேர்ந்த சத்யரூப் சித்தாந்தா அண்டார்டிகாவிலுள்ள சிட்லி மலையில் ஏறினார். இந்திய மலையேற்ற வீரரான “சத்யருப் சித்தாந்தா” என்பவர் “லிம்கா சாதனை புத்தகத்தில்” நுழைந்துள்ளார். தற்போது அவரது வயது 35.
 • இவர் உலகில் உள்ள ஏழு கண்டங்களில் உள்ள உயரமான எரிமலைகளில் ஏறிய முதலாவது இந்தியராக உருவெடுத்துச் சாதனை படைத்துள்ளார்.லிம்கா சாதனை புத்தகமானது உலக சாதனைப் புத்தகத்திற்கு அடுத்த இரண்டாவது உயரிய புத்தகமாகக் கருதப்படுகின்றது.
 • லிம்கா சாதனைகள் புத்தகம் (Limca Book of Records) இந்தியாவிலிருந்து தொகுக்கப்படும் ஓர் சாதனைகள் புத்தகமாகும்.
  இவரது சாதனைகள் பின்வருமாறு

கிளிமஞ்சாரோ மலை, ஆப்பிரிக்கா (5895 மீ)
எல்பரஸ் மலை, ஐரோப்பா (5642 மீ)
பிக்கோ டி ஒரிசாபா மலை, வடக்கு அமெரிக்கா (5636 மீ)
கிலுவி மலை, ஆஸ்திரேலியா (4367 மீ)
சிட்லே மலை, அண்டார்டிகா (4285 மீ)
ஓஜோஸ் டெல் சலேடோ மலை, தென் அமெரிக்கா (6893 மீ)
டமாவந்த் மலை, ஆசியா (5680 மீ)

மொபைல் செயலி 

 HRMS மொபைல் செயலி

 • இந்திய ரயில்வேயின் நிர்வாக செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஸ்ரீ வினோத் குமார் யாதவ், இந்திய ரயில்வேயின் அனைத்து ஊழியர்களுக்கும் HRMS மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • HRMS ஊழியர் மொபைல் பயன்பாட்டை ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. ரயில்வேயில் இணைந்த நாளிலிருந்து ஊழியர்கள் தங்கள் வரலாற்றுத் தரவைப் பார்க்க இந்த பயன்பாடு உதவுகிறது.

“PM KISAN” மொபைல் செயலி  

 • பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம் தொடங்கப்பட்ட முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக பி.எம். கிசான் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
 • இந்த செயலி  விவசாயிகளுக்கு அவர்களின் கட்டண நிலையை சரிபார்க்கவும், அவர்களின் பெயரைத் திருத்துவதற்கும், திட்டத்திற்கான தகுதியை சரிபார்க்கவும் உதவுகிறது.

விளையாட்டு செய்திகள்

பிரேசில் பாரா பேட்மிண்டன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி 

 • பிரேசிலில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் தொடரில், 4 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்திய அணி அசத்தியுள்ளது.இந்திய ஒற்றையர் பிரமோத் பகத் ஆண்கள் ஒற்றையர்  பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். 
 • இந்திய ஒற்றையர் பிரமோத் பகத் ஆண்கள் ஒற்றையர்  பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில், பகத் – சர்கார் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

 கேன்ஸ் ஓபன்’ பட்டம் – செஸ்

 • பிரான்சு நாட்டில் 34-வது கேன்ஸ் ஓபன் போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி சுற்று வரை முன்னேறிய சென்னையைச் சேர்ந்த குகேஷ், போட்டியை வென்றார்.
 • 13 வயது இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கடைசி சுற்றில் 7.5 புள்ளிகளுடன் பிரான்சின் ஹருட்யுன் பர்க்சேகியானை வென்றார்.
 • சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை 2018 ஜூன் மாதம் படைத்தார்.  2019-ம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற குகேஷ், இப்போது உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர்.
 • தலைவர் பொதுவாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆக இருப்பார்.

கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டு

 • யூனியன் பிரதேசமான லடாக்கில் லே, லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் முதல் முறையாக கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்களை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரேன் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.

உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி

 • ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அசந்தா சரத் கமல்- ஞானசேகரன் சத்யன்ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
 • கலப்பு இரட்டையர் பிரிவில் மாணிக்க பத்ரா ஷரத் வெண்கலம் வென்றுள்ளனர்.

கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி 

 • ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஸ்வீடிஷ் ஜூனியர் மர்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் மினி கேடட் பெண்கள் பிரிவில் சென்னை வீராங்கனை மதன் ராஜன் ஹன்சினி வெண்கலம் வென்றார்.

கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு

 • ஒடிசாவில் நடைபெறும் கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில்,பெங்களூர் மத்திய பல்கலைக்கழகம் எதிரணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

 ஒப்பந்தங்க

இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் 

 • இந்தியாவும் அமெரிக்காவும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
 • இந்தியக் கடற்படைக்கு லாக்ஹீட் மார்டினிடமிருந்து 24 எம்ஹெச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்க 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
 • விண்வெளி நிறுவனமான போயிங்கில் இருந்து 800 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆறு A.H  -64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா மியான்மர் ஒப்பந்தம்

 • இந்தியா-மியான்மர் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.முக்கியமாக, ‘ஆள்கடத்தலைத்‌ தடுப்பதில்‌ ஒருங்கிணைந்து செயல்படுவது;
 • கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பது’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது. மியான்மரில்‌ இந்திய நிதியுதவியுடன்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தும்‌ வகையிலான ஒப்பந்தங்கள்‌ கையெழுத்தாகின. மியான்மரில்‌ வன்முறையால்‌ பாதிக்கப்பட்ட ராக்கைன்‌ மாகாணத்தில்‌ வளர்ச்சித்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவது தொடர்பாக 3 ஒப்பந்தங்களும்‌ கையெழுத்தாகின.
 • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புது தில்லியில் மியான்மர் ஜனாதிபதி யு வின் மைன்ட் ஆகியோருக்கு இடையிலான விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
 • இந்தியா மியான்மரின் ஐந்தாவது பெரிய வர்த்தக பங்குதாரர் ஆகும். தற்போதைய இருதரப்பு வர்த்தகம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

திட்டங்கள்

ஜெகன்னண்ண வஸ்தி தீவேனா திட்டம்

 • ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி விடுதி  செலவுகளைச் சமாளிக்க இடைநிலைப் படிப்புகளைத் பயிலும்  மாணவர்களுக்காக ‘ஜெகன்னண்ண வஸ்தி தீவேனா’ என்ற திட்டத்தை தொடங்கினார்.

‘நிஷாங்க் திட்டம் 

 • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ உயர் கல்வி தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கினார்- UKIERI-UGC மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் கூட்டு முயற்சியால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
 •   இந்த திட்டம் நோக்கமாக இந்திய பல்கலைக்கழகங்களில் நடுத்தர மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு திட்டத்தை வழங்குவது ஆகும். 

MIEWS  திட்டம் 

 • சந்தை புலனாய்வு மற்றும் முன் எச்சரிக்கை திட்டத்தை (MIEWS) மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் படேல் டெல்லியில் தொடங்கினார். 
 • MIEWS தளமானது  தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகளை கண்காணிக்க உதவுகிறது. 

ஊழியர்கள் மாநில காப்பீடு (ESI) திட்டம்

 • ஊழியர் மாநில காப்பீட்டு (ESI) திட்டத்தின் பயனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழிலாளர் அமைச்சகம் ‘சாந்துஷ்ட்’ (Santusht) என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தவுள்ளது.

தரவரிசை பட்டியல்

ஹுருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியல் 

 • ஹுருன் (Hurun global rich list) நிறுவனம் 2019 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்திலுள்ளார். 
 • மேலும் இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி 8வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து ஒருவர் இப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறுவது இதுவே முதன்முறை. 
 • அத்துடன் இந்தாண்டு பட்டியலில் ஆசியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே நபர் முகேஷ் அம்பானிதான்.முகேஷ் அம்பானி இந்தியாவில் பணக்காரர் என்றும், ஜெஃப் பெசோஸ் உலகின் பணக்காரர் என்றும் அதன் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது. 
 • இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 138 ஆக உயர்ந்துள்ளது.மொத்தம் 2,817 பேர் அடங்கிய இப்பட்டியலில் 2019ஆம் ஆண்டில் மட்டும் 480 பேர் புதிதாக இணைந்துள்ளனர். 1 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து படைத்த பணக்காரர்கள் இப்பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
 • 799 பில்லியனர்களுடன் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 626 பில்லியனர்களுடன் 2 வது இடத்திலும், இந்தியா 137 பில்லியனர்களுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

பொருளாதாரா செய்திகள்  

சர்வதேச நாணய நிதியம்

 • 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 •  ” WORLD POPULATION REVIEW”  என்ற தனியார் அமைப்பு இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில், 2 புள்ளி 94 டிரில்லியன் டாலர் என்ற ஒட்டுமொத்த ஜிடிபியுடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக  கூறப்பட்டுள்ளது. 
 • பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 2.83 டிரில்லியன் டாலராகவும், பிரான்ஸ் நாட்டின் ஜிடிபி 2.71 டிரில்லியன் டாலராகவும் உள்ளது. 

Check All Month Current Affairs

Download Feb 22 to 29 Current Affairs PDF 

 

Feb 22 to 29 Current Affairs PDF 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

NoDateDownload link
11.01.2020Download PDF
22.01.2020Download PDF
33.01.2020Download PDF
44.01.2020Download PDF
55.01.2020Download PDF
66.01.2020Download PDF
77.01.2020Download PDF
88.01.2020Download PDF
99.01.2020Download PDF
1010.01.2020Download PDF
1111.01.2020
1212.01.2020
1313.01.2020
1414.01.2020
1515.01.2020
1616.01.2020
1717.01.2020
1818.01.2020
1919.01.2020
2020.01.2020
2121.01.2020
2222.01.2020
2323.01.2020Download
2424.01.2020Download
2525.01.2020Download
2626.01.2020Download
2727.01.2020Download
2828.01.2020Download
2929.01.2020Download
3030.01.2020Download
3131.01.2020Download

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: